۞ அல் குர்ஆன் தெளிவுரைஅல்-குர்ஆன் – மனிதப் பிரச்சினைகள் அனைத்திற்கும் வழிகாட்டுதலும் தீர்வும்
English
۞

முன்னுரை

Exposition of Al Qur’an

திருக்குர்ஆன்

தெளிவுரை

(Al-Qur’an - Ultimate Guidelines & Solutions

to all Human Problems)

وَمَا هُوَ إِلَّا ذِكۡرٌ۬ لِّلۡعَـٰلَمِينَ (٥٢)

இந்தக் குர்ஆன் உலகத்தார் அனைவருக்காகவும் வந்த

அறிவுரைகளே அன்றி வேறில்லை.(68:52)

Published by: Rooh-e-Islah Trust

“Shams Manzil”

54, Gopalapuram 2nd Street,

Thiruvika Nagar, Chennai – 600 082.

(All Copy rights reserved)

Printed By: Al Ria Printers, Chennai, India.

tpiy: &. 500/-

முன்னுரை

بِسۡمِ ٱللهِ ٱلرَّحۡمَـٰنِ ٱلرَّحِيمِ (١)

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் அறிவுரைப்படியே அனைத்துக் காரியங்களையும் செய்ய நாடுகிறேன். (6:162)

சிந்தனையாளர்களே! இவ்வுலகில் எத்தனையோ மொழிகள் உள்ளன. அவற்றின் ஒவ்வொன்றிலும் தனிச் சிறப்புகள் இருக்கும். உவமை வடிவிலும், இலக்கண இலக்கிய நயத்துடன் சொல்லப்பட்ட விஷயங்களும் இருக்கும். எனவே ஒரு மொழியில் உள்ள நூலை இன்னொரு மொழியில் மொழி பெயர்க்க வேண்டுமென்றால், அந்த மொழியை நாம் நன்றாகப் பயின்றிருக்க வேண்டும். அந்த மொழியிலுள்ள இலக்கண இலக்கியத் தையும் நன்றாகப் பயின்றிருக்க வேண்டும். அப்போதுதான் ஒருவர் அந்நூலை சரியாக மொழிபெயர்க்க முடியும்.

எனவே ஒவ்வொரு மொழியிலும் நேரடி பொருள் தரக்கூடிய வாக்கிய அமைப்புகளும், உவமை வடிவில் இலக்கிய நயத்துடன் சொல்லப்பட்ட வாக்கிய அமைப்புகளும் இருக்கும். உதாரணத்திற்கு ஒருவர் ஆரோக்கியமாக இருக்கிறார்; என்பதை He is healthy என்று ஆங்கிலத்தில் நேரடியாக மொழி பெயர்க்கலாம். ஆனால் அவர் ஆனந்த கண்ணீர் வடிக்கிறார் என்பதை ஆங்கிலத்தில் நேரடி மொழி பெயர்த்தால் He filters his happy tears என்றுதான் மொழிபெயர்க்க முடியும். இதை தமிழில் மொழிபெயர்த்தால் அவர் தன் ஆனந்த கண்ணீரை வடிகட்டுகிறார் என்று மொழி பெயர்க்க முடியும். எனவே அர்த்தம் அனர்த்தம் ஆகிவிடும்.

அதுபோல அல்லாஹ்வின் வேதமாகிய திருக்குர்ஆனிலும் நேரடிப் பொருள் தரக்கூடிய வாக்கிய அமைப்புகளும், இலக்கிய நயத்துடன் உவமை வடிவில் சொல்லப்பட்ட வாக்கிய அமைப்புகளும் உள்ளன. (பார்க்க 3:7) இவற்றை நாம் எவ்வாறு புரிந்துகொள்வது என்ற கேள்வி எழலாம். ஆனால் இதற்குரிய விடையை காண்பது எளிது. அதாவது ஒவ்வொரு புத்தகத்தை படிக்கும் போதும் அதற்கே உரிய மையக் கருத்து ஒன்று இருக்கும். அதைச் சுற்றியே அந்தப் புத்தகமும் எழுதப்பட்டு இருக்கும். அதே போல் உலக பொதுமறையாக இருக்கும் திருக்குர்ஆனுக் கும் மையக் கருத்து உள்ளது. அது உலக மக்கள் அனைவரும் கடைப்பிடிக்க வேண்டிய அறிவுரைகள், அவற்றைப் பின்பற்றினால் ஏற்படும் நன்மைகள் அல்லது அவற்றைப் புறக்கணிப்பதால் ஏற்படுகின்ற துயரங்கள் என்ற அடிப்படையில் பேசுகிறது. எனவே சமூக அமைப்பு, நாடு, நாட்டு மக்கள், உலகம், உலக மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் கூடிய பாதுகாப்பான சந்தோஷமான வாழ்வைப் பெறுவது எப்படி என்ற அடிப்படையில் அது பேசுகிறது. இந்த மையக் கருத்தை வைத்து நாம் திருக்குர்ஆன் வாசகத்தை எளிதில் புரிந்துக் கொள்ளலாம். விளக்கத்திற்குப் பார்கக் அத்தியாயம் 3:7

:: 2 ::

முன்னுரை :

மேலும் உலக நிகழ்வுகள் அனைத்தையும் அல்லாஹ்வே செய்வதாக திருக்குர்ஆனில் சொல்லப்படுகின்றன. ஆனால் அல்லாஹ் மனிதனுக்கு முழு சுதந்திரத்தை அளித்து விட்டதால், மனித செயல்களில் அல்லாஹ்வின் தலையீடு இருப்பதில்லை. ஆனால் அவன் செய்து வரும் “செயல்களுக்கு ஏற்ப விளைவுகள்” என்ற அடிப்படையில் அல்லாஹ்வின் செயல்பாடுகள் அமைகின்றன. (பார்க்க 11:56) எடுத்துக்காட்டாக எத்தனையோ சமுதாயங்களை அல்லாஹ் அழித்து விட்டதாக கூறப்படு கிறது (பார்க்க 6:6) இதை நாம் அப்படியே பொருள் கொண்டால் மனிதன் உழைத்து உலகை உருவாக்குவது போலவும், அல்லாஹ்வுக்கு அது பிடிக்காமல் அழித்துவிடுவது போலவும் பொருளாகிவிடும். இப்படி பொருள் கொள்வது சரியல்ல. அதாவது ஒரு சமுதாயம் தீய செயல்களில் தொடர்ந்து ஈடுபடும்போது, அல்லாஹ் நிர்ணயித்துள்ள “மனித செயலுக் கேற்ற பின் விளைவுகள்” என்ற 11:56இன் விதிமுறைகளின் படி சமுதாயங் கள் அழிவை சந்தித்துக் கொண்டன என்பதே அதன் பொருளாகும். இப்படி ப்பட்ட விதிமுறைகளை அல்லாஹ் ஏற்படுத்தியதால் அவனே அழித்து விடுவதாக கூறுகிறான். இதை அடிப்படையாக வைத்து தெளிவுரை தந்துள்ளோம்.

மேலும் திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பை கவனிக்கும் போது, “அல்லாஹ் நாடினால்” என்றும் “அல்லாஹ்வின் கட்டளை இருந்தால்” என்றும் பல இடங்களில் வருகிறது. இவை யாவும் அல்லாஹ் அன்றாடம் நாடுகின்ற விஷயங்கள் அல்ல என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். “அல்லாஹ்வின் நாட்டம்” என்பது அல்லாஹ் தன் நாட்டப் படி உருவாக்கிய “நிலைமாறா சட்டதிட்டங்கள்” என்பதாகும். எனவே இறைவனின் நிலைமாறா விதிமுறைகளின் படி மனிதனுடைய நாட்டமும் உழைப்பும் இணைந்திருந்தால், மனிதன் நாடுவதை பெற்றுக்கொள்ள முடியும் என்பதே அதன் பொருளாகும். எடுத்துக்காட்டாக உம்முடைய இறைவன், தான் நாடியவருக்கு விசாலமான உணவுகளை வழங்குகிறான்;. தான் நாடியவருக்கு அளவோடு கொடுக்கிறான் என்று 17:30 வாசகம் கூறுகிறது. இதை அப்படியே நேரடி பொருள் கொண்டால் அல்லாஹ் பாகுபாடுடன் செயல்படுவதாக பொருளாகிவிடும். ஆனால் அல்லாஹ்வோ உலக மக்கள் அனைவரையும் பரிபாலிக்கும் ‘ரப்புல்ஆலமீனாக’ இருக்கும் போது, இவ்வாறு அவன் பாகுபாடுடன் செயல்பட மாட்டான். எனவே 53:39இல் உள்ள விதிமுறையின் படி திறமையுடன் உழைப்பவர்களுக்கு அதிக அளவில் செல்வமும், திறமையின்றி உழைப்பவர்களுக்கு குறைவான செல்வங்களும் கிடைக்கின்றன. ஆக திறமைகளை வளர்த்துக் கொள்வது மனித பொறுப்பில் உள்ள விஷயங்களாகும். இதையும் மையமாக வைத்து தெளிவுரை தரப்பட்டுள்ளது.

மேலும் திருக்குர்ஆன் முழுமையாக்கப்பட்ட வேதம் என்று

:: 3 ::

முன்னுரை ….

அறிவித்துக் கொள்கிறது. (பார்க்க 5:3) எனவே உலக மக்கள் கடைப்பிடிக்க

வேண்டிய சட்டதிட்டங்கள் மற்றும் கொள்கைக் கோட்பாடுகள் இதில் விவரமாக அளிக்கப்பட்டுள்ளன. ஆனால் எல்லாவற்றையும் ஒரே சீராகச் சொல்லாமல், ஆங்காங்கே விளக்கம் அளிக்கும் வகையில் வெவ்வேறு இடங்களில் விவரிக்கப்பட்டுள்ளன. இதன் நோக்கம் யாதெனில் ஒவ்வொரு விஷயத்தைப் பற்றியும் தெளிவாக்கிட வேண்டும் என்பதே ஆகும். எனவே ஒரு விஷயத்தைப் பற்றி பேசும்போது, அதன் விளக்கம் அதை ஒட்டிய மற்ற வாசகக்தில் உள்ளதை நாம் காண்கிறோம். எடுத்துக்காட்டாக மக்கள் அவ்வேதனையைப் பற்றி அவசரப்படுகிறார்கள். குறிப்பிட்ட தவணை நாம் ஏற்படுத்தாதிருப்பின் அவ்வேதனை அவர்களுக்கு உடனே வந்திருக்கும் என்று 29:53 வாசகத்தில் வருகிறது. இதன் விளக்கம் 16:61இல் வருகிறது. அதாவது மக்கள் செய்யும் தீய செயல்களுக்கு உடனே தண்டிப்பதாக இருந்தால், இப்பூமியில் ஒருவரும் உயிர் பிழைத்திருக்க மாட்டார்கள் என்றும் அவர்கள் திருந்துவதற்கு தக்க கால அவகாசம் அளிப்பது என்றும் அல்லாஹ்வின் செயல்திட்டமாகும் என சொல்லப்படுகிறது. எனவே 29:53 வாசகத்தைப் பற்றிய விளக்கம் 16:61 வாசகத்தில் கிடைத்து விடுகிறது. இப்படியாக ஒவ்வவொரு வாசகமும் தெளிவாகி விடுகிறது.

திருக்குர்ஆனை விளக்கும் பொறுப்பை அல்லாஹ்வே ஏற்று இருக்கிறான் (பார்க்க 75:17-19). நான் மேலே சொன்னது போல திருக்குர்ஆனின் ஒரு வாசகத்தை அதன் முற்பகுதி அல்லது பிற்பகுதியில் வரும் வாசகங்கள் அழகுபட விளக்கமளித்து விடுகின்றன. இது திருக்குர்ஆனின் மாபெரும் அற்புதமாகும். திருக்குர்ஆனை எளிதில் புரிந்துகொள்ள இதுவே சிறந்த வழிமுறையாகும். இவ்வாறே திருக்குர்ஆனின் வாசகத்திற்கு தெளிவுரை தரும்போது, அதை ஒட்டடிய மற்ற வாசகத்தின் விளக்கங்களையும் இணைத்து தந்துள்ளேன். அந்த வாசகத்தின் எண்களையும் அதன் பக்கத்திலேயே கொடுத்துள்ளோம்.

ஒரு விஷயத்தை மட்டும் சொல்ல விரும்புகிறேன். தற்சமயம் உள்ள திருக்குர்ஆன் மொழி பெயர்ப்புகள் யாவும் தவறானவை என்று நாம் சொல்ல வில்லை. அந்தந்த வார்த்தைக்கு நேரடி மொழி பெயர்ப்பையே தந்துள்ளார்கள். அதனால் திருக்குர்ஆன் வாசகங்களில் என்ன சொல்லப்படு கிறது என்பதை பாமர மக்களால் எளிதாகப் புரிந்துகொள்ள முடிவதில்லை. எனவே திருக்குர்ஆனின் தெளிவுரை அவசியமாகிறது.

இதைக் கருத்தில் கொண்டுதான் இந்த தெளிவுரையை கொடுத்துள் ளேன். இதற்காக 19 மற்றும் 20ஆம் நூற்றாண்டில் தோன்றிய பல அரபி மொழி வல்லுனர்கள் எழுதிய விளக்கவுரையைப் படித்து பல உண்மைகளை தெரிந்துக் கொண்டேன். அவர்களில் முதலில் வருவது

:: 4 ::

முன்னுரை ….

கவிஞர் ஸர். அல்லாமா இஃக்பால்ரஹ் அவர்கள் ஆவார். அவர்களின் சீடர்கள் பலர் உள்ளனர். மேலும் அல்லாமா அஸ்லம் ஜயராஜ்புரிஹ், ஸர் சையது

அஹ்மது ஃகான்ரஹ, முஹம்மதலி லாஹூரிரஹ, ஷேஃக் தாவூத் ஷாரஹ, அல்லாமா குலாம் அஹமத் பர்வேஸ்ரஹ் போன்றோர் எழுதிய விளக்கவுரையை மையமாக வைத்து இந்த தெளிவுரையை தந்துள்ளேன். எனவே இது திருக்குர்ஆனின் மொழிபெயர்ப்பும் அல்ல. தஃப்ஸீர் எனும் வணக்க வழிப்பாடுகளை கற்பிக்கும் ரிவாயத்து விரிவாக்கமும் அல்ல. மாறாக இது முற்றிலும் மக்கள் கடைப்பிடிக்க வேண்டிய இறைவழகாட்டுதல் என்ற அடிப்படையில் தொகுக்கப்பட்டதாகுர். எனினும் இவ்வாறு விளக்கம் தரும்போது, மனிதன் என்ற முறையில் என்னாலும் சில குறைகள் ஏற்பட்டிருக்கலாம். அன்பர்கள் அதை சுட்டிக் காட்ட உரிமைப் பெற்றவர்களே. மேலும் இதுவே இறுதியான விளக்கம் என்றும் யாரும் முறையிட்டுக் கொள்ள முடியாது. இதைவிட சிறந்த விளக்கங்களைச் சொல்லும் வல்லுனர்கள், அல்லாஹ்வின் நியதிப்படி வருவார்கள். ஆனால் அத்தகைய கருத்துக்கள் ஒட்டு மொத்த குர்ஆனின் கொள்கை கோட்பாட்டுக்கு உட்பட்டதாக இருத்தல் அவசியம் என்பதை மட்டும் கவனத்தில் கொள்ள வேண்டும். (பார்க்க 27:84)

மேலும் ஒரு விஷயத்தை முக்கியமாக சொல்ல விரும்புகிறேன். தெளிவுரை சரியானவை என்று எண்ணுபவர்கள் அவற்றைப் பற்றி மற்றவர்களிடம் எடுத்துச் சொல்லும்போது, இந்தக் குர்ஆனின் வாசகத்திற்கு இன்ன பொருள் வருகிறது என்றுதான் சொல்ல வேண்டுமே அன்றி, “இன்னார்” இப்படி பொருள் தருகிறார் என்று சொல்லக் கூடாது. நீங்கள் அவ்வாறு கூறினால் ஒரு புதிய பிரிவை ஏற்படுத்தி விடுவீர்கள். அது மிகப் பெரிய பாவச் செயலாகும்.

தமிழாக்கம் : ரூஹுல்லா நெறி பி.காம்.

தொ.பே. எண் : 9381004531, 9884852672

தேதி : 14/04/2022

:: 5 ::

ஆசிரியர் குறிப்பு:

வேலுர் மாவட்டம் ஆம்பூர் நகரத்தில் 1953ஆம் வருடம் ஏப்ரல் திங்கள் 15ஆம் நாள் பிறந்தேன். தந்தையின் பெயர் நெறி.அப்துல் வாஜித். தாய் அ. முஜீபுன்னிஸா. தந்தை குடியாத்தம் நகரத்தில் உள்ள தாலூகா அலுவலகத்தில் வருவாய்த் துறை அதிகாரியாக பணி புரிந்து வந்ததால், என்னுடைய பள்ளிக் கூட படிப்பு அங்குள்ள திருவள்ளுவர் உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. 1969ஆம் ஆண்டு S.S.L.C முடித்தேன். தந்தை ஓய்வு பெற்றதால் அங்கிருந்து குடும்பம் ஆம்பூருக்கு மாற்றலாக நேர்ந்தது. அதைத் தொடர்ந்து வாணியம்பாடி இஸ்லாமிய கல்லூரியில் இணைந்து 1973 ஆண்டில் பி.காம் பட்டம் முடித்தேன். அதன் பின் தனியார் நிருவனத்தில் பணி புரிந்து என் குடும்ப வருவாயை சிறப்பிக்க செய்தேன்.

என் குடும்பத்தார் அனைவரும் மத விஷயங்களில் மிகவும் கண்டிப்பானவர்களாக இருந்தனர். ஹனஃபீ மத்ஹபை பின்பற்றி வந்தனர். ஆனால் எனக்கோ மத சம்பந்தப்பட்ட விஷயங்களில் உள்ளூர சந்தேகங்கள் இருந்துக் கொண்டே வந்தது. ஆனால் யாரிடமும் எந்த கேள்வியும் கேட்க முடியாது. அப்படி ஒரு நிலை. இப்படியாக எனக்கு 1979இல் திருமணம் நடந்தது. அதைத் தொடர்ந்து குடும்ப பிரச்சனைகள் உருவெடுக்க ஆரம்பித்தன. மிகவும் சந்தோஷமாக வாழ்ந்து வந்த எனக்கு குடும்பத்தில் எழுந்த பிரச்சனைகள் யாவும் புதிதாக தோன்றின.

இந்த பிரச்சனைகள் தீர ஏதாவது வழி உண்டா என்று பள்ளிவாசல் இமாம்களிடம் கலந்தாலோசித்தேன்.பொறுத்தார் பூமி ஆள்வார் என்பதைத் தவிர வேறு எந்த பதிலும் அவர்களிடமிருந்து கிடைக்கவில்லை. சிறு வயதிலிருந்தே அரபி மொழி குர்ஆனை கற்று இருந்ததால், அதில் உள்ள அர்த்தங்களைப் படிக்க ஆரம்பித்தேன். ஆனால் என்னால் இரண்டு பக்கங்களுக்கு மேல் படிக்க முடியவில்லை. காரணம் அந்த அளவுக்கு அது புரியாத புதிராக இருந்தது.

அதன்பின் அவ்லியா அல்லாஹ்விடம் சென்று நம் பிரச்சனைகளை முன் வைத்தால் தீர்வு ஏதாகிலும் கிடைக்குமா என்ற ஏக்கத்துடன் பல தர்காக்களின் படிகளை ஏறி இறங்கினேன். ஆனால் மிஞ்சியதோ ஏமாற்றம் தான். அங்குள்ள முஜாவர்கள் வேறு தர்காவுக்கு பரிந்துரை செய்து அனுப்பி வைத்தார்கள். அங்குள்ளவர்கள் சில ஆயிரங்களை கரந்து விட்டார்கள். இப்படியாக எனக்கு ஏமாற்றத்திற்கு மேல் ஏமாற்றம் தான் கிடைத்தது.

அதன் பின் யாரிடம் ஆலோசனை கேட்டால் நம் பிரச்சினைகள் தீரும் என எண்ணி, ஜோசியக்காரர்களின் உதவியை நாடினேன். அவர்கள், என் ஜாதகப்படி என் ஸ்டார் பள்ளத்தில் விழுந்துள்ளதாகவும் அதை சரிசெய்ய சில ஆயிரங்கள் செலவாகும் என்றனர். எனக்கென்று ஸ்டார் இருப்பதாக நம்பி, சில ஆயிரங்களை இழந்தேன். ஆனால் என் ஸ்டாரை பள்ளத்திலிருந்து தூக்கி சரியான இடத்தில் வைக்க அவர்களால் முடிய

:: 6 ::

ஆசிரியர் குறிப்பு:

வில்லை. சாதி, மதம், இறை வணக்க வழிபாடு, தர்கா வழிபாடு, ஜாதக கணிப்பு எல்லாமே ஏமாற்று வேலைதான் என்பதை அறிந்துக் கொண்டேன். இப்படியாக பல குடும்பச் சிக்கல்களுக்கிடையே என் வாழ்க்கை சில காலம் கழிந்தது. அதன் பின் ஒரு நாள் ரயிலில் பயணிக்கும் போது, என் ஊரைச் சேர்ந்த டி.ஜெ. மஜ்ஹர் ஹஸன் என்ற மருத்துவர், என் வாடிய முகத்தைப் பார்த்து என்னைப் பற்றி விசாரித்தார். அங்கிருந்து தான் என் வாழ்வில் ஒரு திருப்புமுனை ஏற்பட்டது.

நான் அவரிடம் கேட்ட முதல் கேள்வி கோயில்களில் அல்லாஹ் இருக்கின்றானா என்பதே. அதற்கு அவர் அல்லாஹ் இல்லாத இடமே இல்லை انما معكم اين ما كنتم என்று குர்ஆன் வாசகத்தை மேற்கோள் காட்டி விளக்கினார். அப்படி என்றால் நான் கோயிலுக்கு செல்லலாமா என்று கேட்டேன். அதற்கு, கோயிலுக்குள் செல்வது தவறு இல்லை. ஆனால் அங்கு அல்லாஹ்வின் அறிவுரைகளுக்கு எதிரான செயல்கள் நடைபெறு வதால் அதில் கலந்துக் கொள்வது முறையாகாது என்றார். அவர் அளித்த பதில்களில் உண்மைகள் இருப்பதைக் கண்டேன்.

அதைத் தொடர்ந்து அவரிடம் சென்று சில புத்தகங்களை வாங்கி படித்தேன். அவற்றைப் படித்து பார்த்த பிறகுதான், ஈரானியர்களின் “ஜபர்” என்ற அஃகீதா குர்ஆனில் புகுந்து விளையாடி இருப்பதைக் கண்டேன். அதாவது எல்லாமே அல்லாஹ்வின் கையில்தான். மனிதனால் ஆகப்போ வது ஒன்றும் கிடையாது. மனிதனால் ஒன்றுமே ஆகாது. அல்லாஹ் நாடினால் தான் எதுவும் நமக்கு கிடைக்கும் என்பது போன்ற சித்தாந்தம். இதன் அடிப்படையில் பார்க்கும் போது, மனிதனுக்கு அளிக்கப்பட்ட சுதந்திரத்திற்கு ஒரு அர்த்தமும் இல்லாமல் போய் விடுகிறது. மேலும் ஷைத்தான், ஜின், தஸ்பீஹ், ஸஜ்தா, ருக்கூ, மலாயிகா போன்ற திருக்குர் ஆனிலுள்ள பல வார்த்தைகளுக்கு பொருளே தரவில்லை என்பதும் தெரிய வந்தது.

மேலும் அல்லாஹ்வை ஓர் அரசனைப் போல் பாவித்து பொருள் தந்துள்ளதையும் அறிந்துக் கொண்டேன். இதனால் தான் திருக்குர்ஆன் உலக அரங்கில் பின்பற்ற முடியாத வேதமாக மாறிவிட்டது. இதனால் நபிகள் நாயகத்தின் பெயரைப் பயன்படுத்தி ஈரானியர்கள் எழுதிய ரிவாயத்து புத்தகங்களைப் பின்பற்றினால் போதும் என்ற நிலை முஸ்லிம்களிடையே உருவாகிவிட்டது. இப்படியாக முஸ்லிம்களை திருக்குர்ஆனை விட்டு பிரித்து விட்டார்கள். அதைத் தொடர்ந்து முஸ்லிம்களும் தன் மனசாட்சிப் படி வாழ்ந்தால் போதும் என்றாகிவிட்டது. மனசாட்சிக்கு நிலையான தன்மை எதுவும் கிடையாது. அது இடத்திற்கு அல்லது சூழ்நிலைக்குத் தகுந்தாற் போல் மாறிவரும். எல்லோரும் தத்தம் பாதுகாப்பைக் கருதியே செயல்பட வைக்கும். ஓவ்வொருவருடைய பாதுகாப்பு நடவடிக்கையும்

:: 7 ::

ஆசிரியர் குறிப்பு:

சுயநலமாக மாறி மற்றவரின் நிம்மதியான வாழ்வைக் கெடுத்து விடும். இவையே குடும்பங்களிலும் சமுதாயத்திலும் பல பிரச்சனைகள் உருவாவதற்கு காரணியாக ஆகிவிடுகிறது. இத்தகைய சூழ்நிலையில் தான்; என் குடும்பமும் சிக்கி இருந்ததை நான் திருக்குர்ஆன் மூலம் அறிந்து, அவற்றை சுமுகமான முறையில் தீர்த்து வைத்தேன். நம் நாட்டில் இப்படிப் பட்ட சிக்கல்களில் லட்சக் கணக்கான குடும்பங்கள் சிக்கி அவதிக்குள் ஆகி இருக்கும் என எண்ணி, நான் கற்ற திருக்குர்ஆன் விளக்கவுரையை மக்கள் முன் எடுத்துரைக்க வேண்டும் என எண்ணினேன். அதன் பலன்கள் உங்கள் கண்ணெதிரே உள்ள திருக்குர்ஆன் தெளிவுரை ஆகும். அன்பர்கள் விளக்கவு ரையைப் படித்து ஆழ்ந்து சிந்தித்து செயல் பட்டு தத்தம் வாழ்வை சிறப்பாக்கிக் கொள்ள வேண்டும் என்பதே என் பணிவான வேண்டுகோள் ஆகும். அதை படிக்கும் வாசகர்களாகிய நீங்கள் என் வேண்டுகோளை நிறைவேற்றி வைப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன் -

வஸ்ஸலாம்,

நெறி. ரூஹுல்லா. பி. காம்.

சென்னை-82.

:: 8 ::

அன்பர்கள் கருத்துரை

1. திரு. குமார் கொளரவு (v) ஸமீயுல்லா B.E.,M.L.,PGDBL., Dip In HRD Advocate Madras High Court

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் அறிவுரைப்படியே அனைத்துக் காரியங்களையும் செய்ய நாடுகிறேன். இந்து மதத்தில் பிறந்து வளர்ந்து திருமணமும் ஆகி இரண்டு பிள்ளைகள் பெற்ற நான் இஸ்லாம் மார்க்கத்தின் மீது இருந்த பற்றுதலின் காரணமாக 2010இல் நானும் என் குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவரும் இஸ்லாத்தில் தழுவினோம். இஸ்லாமை எனது வாழ்வின் நெறியாக நான் ஏற்றுக் கொண்டதன் முக்கிய காரணம் யாதெனில் மதம், மூடநம்பிக்கை, சடங்கு சம்பிரதாயம் ஆகியவற்றிலிருந்து இஸ்லாம் முழுமையாக விலகி இருப்பதால் தான் ஆகும்.

நான் இஸலாத்தை ஏற்றுக் கொண்ட பிறகு திருக்குர்ஆன் கூறும் வேத அறிவுரைகளை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் எனக்குள் வேரூன்றியது. ஆகையால் திருக்குர்ஆன் தமிழ் மொழிபெயர்ப்பு புத்தகங்கள் பலவற்றை வாங்கி படித்து வந்தேன். அதில சில இடங்களில் எனக்கு சில விஷயங்களை விளங்கவில்லை என்பதால் திருக்குர்ஆனை அறிஞர்கள் பலரிடம் கேட்டு தெரிந்துக் கொண்டேன். மேலும் அவர்கள் கூறிய அறிவுரைப் படி திருக்குர்ஆனுக்கு அடுத்தபடியாக உள்ள ஹதீஸ் மற்றும் இதர இஸ்லாமிய புத்தகங்களை வாங்கி படித்து வந்தேன்.

இதன் அடிப்படையில் சமீபத்தில் நான் இந்த நூல் ஆசிரியர் திரு. ரூஹுல்லா நெறி அவர்களை என்னுடைய சகோதரர் Zakir Hussain அறிமுகம்

செய்து வைத்தார். அப்போது எங்கள் பேச்சின் இடையில் திரு. ரூஹுல்லா நெறி அவர்கள் தான் திருக்குர்ஆன் விளக்கவுரையின் மொழிபெயர்ப்பு ஆசிரியர் என்றும் தெரிந்து கொண்டேன். அதன் பிரதி ஒன்றை எனக்கு கொடுத்து படிக்கச் சொன்னார்.

ஏற்கனவே பல திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பு மற்றும் இதர புத்தகங்களை படித்த எனக்கு, இந்த புத்தகமும் அதைப் போன்ற ஒன்றாகத் தான் இருக்கும் என்று கருதினேன். இருந்தும் மரியாதை நிமித்தமாக அன்பர் கொடுத்த தெளிவுரையை படிக்கலானேன். முதன் முதலில் இந்த புத்தகத்தின் முகவுரையை படித்தேன். படித்தவுடனே எனக்கு மிகுந்த ஆச்சரியமும் பூரிப்பும் சந்தோஷமும் பெருகியது. காரணம் திருக்குர்ஆனை எவ்வாறு விளங்கிக் கொள்வது என்பதைப் பற்றியும் அதன் அர்த்தங்களை எப்படி புரிந்துக் கொள்வது என்பதைப் பற்றி நூல் ஆசிரியர் கொடுத்த தகவல்கள் அனைத்தும் எனக்கு மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இதுவரையில் எத்தனையோ மொழிபெயர்ப்புகளைப் படித்த எனக்கு இந்த தெளிவுரை மிகவும் வித்தியாசமாகவும் எளிமையாகவும் பாமரரும் இலகுவாக புரிந்துக் கொள்ளக் கூடிய உரைநடையில் இருந்தது. மேலும்

:: 9 ::

அன்பர்கள் கருத்துரை.......

பல அறிஞர்கள் திருக்குர்ஆனுக்கு கொடுத்துள்ள தெளிவுரைகளின் கோணங்களில் இருந்து இந்த புத்தகமானது முற்றிலும் வித்தியாசமான கோணத்திலும், இதுவரையில் யாருமே சொல்லிராத விதத்தில் மிகப் பிரம்மாண்டமான முறையில் விவரிக்கப்பட்டுள்ளது. எனக்குள் இருந்த பல கேள்விகளுக்கு விடையளித்தது போல் மிக உண்மையான மற்றும் நேர்பட்ட கருத்துக்களைக் கொண்டதாக இருக்கிறது.

இஸ்லாம் என்பது ஒரு பொதுமறை என்பதும், பிற மதங்களின் உள்ளது போன்ற மூட நம்பிக்கைகள்,சடங்கு சம்பிரதாயங்கள் ஆகியவற்றி லிருந்து இஸ்லாம் விலகியிருப்பதும், அறிவியல் மற்றும் அறிவு சார்ந்த விஷயங்களைப் பற்றி பேசுவதாகவும் உள்ளது. மேலும் நூல் ஆசிரியர் அவர்கள் திருக்குர்ஆனின் அரபி வசனங்களுக்கு அந்த வசனத்தில் தமிழ் மொழிபெயர்ப்பை தந்து மேலும் அந்த வசனமானது இன்றைய காலத்தில் எப்படி பொருந்துகிறது என்பதையும் அந்த வசனங்கள் நமக்கு புகட்டும் படிப்பினை என்ன என்பதையும் விளக்கி இருக்கிறார்.

மேலும் திருக்குர்ஆன் போதனைகள் அனைத்தும் அனைத்து சமுதாய மக்களுக்கும் ஒரு நல்லுபதசமே அன்றி வேறில்லை என்பதை மிக தெளிவாக விளக்கி இருக்கிறார். இதில் அனைத்து தரப்பு மக்களுக்கும் நல்ல படிப்பினையை அல்லாஹ் எவ்வித நிர்ப்பந்தமும் இன்றி அமைத்து கொடுத்திருப்பதை தெளிவாக விளங்குகிறது. மேலும் திருக்குர்ஆன் போதனைகள் அனைத்தும் அன்றாட வாழ்வில் மக்கள் அனைவரும் செயல்படுத்தி சமுதாய மேம்பாட்டிற்காக ஜாதி மத பேதமின்றி பாடுபட்டு உழைத்திட வேண்டும் என்று கூறி இருப்பது இந்த நூலின் சிறப்பு அம்சமாகும். இவ்வாறாக நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் ஒரு விளைவு நிச்சயம் உண்டு. நற்செயல்களுக்கு நல்ல விளைவு தீய செயல்களுக்கு தீய விளைவுகளே ஏற்படும் என்று மிக அழகாக விளக்கி இருக்கிறார். மேலும் அல்லாஹ்வின் அறிவுரைப்படி முயன்றால் நிச்சயம் வெற்றி உண்டு என்பதையும் விளக்கி இருக்கிறார்.

மேலும் திருக்குர்ஆன் போதனைகள் அனைத்தும் அல்லாஹ் மனிதர்களாகிய நாம் இந்த சமுதாய மேம்பாட்டிற்காக எப்படி எல்லாம் பாடுபடவேண்டும் உழைக்க வேண்டும் தான தர்மங்களை அளித்து நம் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும் ஒழுக்க மாண்புகளை யும் குடும்ப மற்றும் தனிமனித மேம்பாடுகள் பற்றியும் சுட்டு சமதாய அமைப்பு மற்றும் கூட்டு சமுதாய மேம்பாடு எனும் ஸலாத்தை நிலை நாட்ட வேண்டும இன்னும் அரசியல் சமூகவியல் அறிவியல் வரலாற்று படிப்பினைகளைப் பற்றி கூறியிருப்பது தெளிவாக விளங்குகிறது. இதன்படி செயல்பட்டால் மாற்றங்கள் நிகழும். அதை விடுத்து இந்த போதனைகளை நமக்கு கொடுத்த அல்லாஹ்விடமே திரும்ப திரும்ப கூறி வருவதால் சமுதாயத்திலும் சரி, தனி மனித வாழ்வு மற்றும் மேம்பாட்டி

:: 10 ::

அன்பர்கள் கருத்துரை.......

லும் எவ்வித மாற்றங்களும் நிகழப் போவதில்லை என்பதை ஆணித்திருத்த மாக ஆசிரியர் விளக்கி இருப்பது பாராட்டாமல் இருக்க முடியாது.

தவறான சடங்குகள், தேவையற்ற சம்பிரதாயங்கள், மூட நம்பிக்கை கள் பழக்க வழக்கங்கள் இன்னமும் இஸ்லாமிய சமுதாயத்தில் வேரூன்றி இருப்பதையும் இவைகள் அனைத்திற்கும் காரணம் என்னவென்பதையும் தௌ;ளத் தெளிவாக படம் போட்டு காட்டி இருக்கிறார். இது போன்ற தவறான கோட்பாடுகளை நாம் எவ்வாறு களைத்து உண்மையான திருக்குர்ஆன் போதனைகளின் பக்கம் திரும்ப வேண்டும் என்பதைப் பற்றியும் ஆசிரியர் இதில் விவரித்து இருக்கிறார்.

மொத்தத்தில் திருக்குர்ஆன் என்பது வெறும் ஓதி காண்பிப்பதற்கு மட்டும் அல்ல. அதை விட அன்றாட வாழ்வில் நாம் அனைவரும் நடைமுறைப்படுத்தி தனிமனித வாழ்விலும் சமதாய வாழ்விலும் எந்தவிதமான ஜாதி மத, பேதமின்றி அனைத்து தரப்பு மக்களுக்காக கொடுக்கப்பட்ட உலக பொதுமறை தான் இந்தக் திருக்குர்ஆன் என்பதை தெளிவாக விளக்கி இருக்கிறார். இவர் மேற்கொண்ட இந்த இமாலய பணியை அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக. ஆமீன்.

திரு. ஜாகிர் ஹுஸைன்

முஸலிம் குடும்பத்தில் பிறந்து வளர்ந்து வந்த நான், பல இஸ்லாமிய இயக்கங்களில் இணைந்து பணியாற்றி வந்தேன். ஒவ்வொரு

அமைப்பிலும் ஏதாவது ஒரு வகையில் குறைகள் இருப்பதைக் கண்ட எனக்கு வேறு அமைப்பில் இணைந்து பணியாற்ற வேண்டும் என்றே தோன்றும். இருந்தும் நாம் வணங்கி வரும் அல்லாஹ்வின் நாட்டம் என்ன? நாம் என்ன செய்ய வேண்டும்? எதை செய்யக் கூடாது? ஏன் செய்ய வேண்டும்? ஏன் செய்யக் கூடாது என்பது போன்ற கேள்விகள் என் உள் மனதில் எழுந்த வண்ணம் இருந்தன.

இதற்குரிய விடையை தேடித் தான் என் வாழ்க்கைப் பயணத்தை தொடாந்தேன். எல்லோரும் எதிர் பார்ப்பது போல் என் வாழ்விலும் அற்புதம் ஏதாவது நிகழாதா என்ற ஏக்கத்தில் இருந்த எனக்கு திரு. நூர் முஹம்மது என்பவரின் அறிமுகம் கிடைத்தது. அப்போது 2006இல் வணிகர்கள் சங்கத்தின் சார்பாக குற்றாலம் செல்ல செய்த ஏற்பாட்டில் ஆசிரியர் திரு. ரூஹுல்லா நெறி அவர்களின் பரிட்சயம் கிடைத்தது.

அங்கு அனைவரும் கூடி திருக்குர்ஆனின் ஒரு தலைப்பில் தர்க்கம் நடந்தது. அதாவது எந்த நபிமாரும் எவ்வித மாயா ஜால வித்தைகளையும் செய்து காட்டவில்லை என்பதுதான் அந்த தலைப்பு. இந்த நூல் ஆசிரியர்

:: 11::

அன்பர்கள் கருத்துரை –

கொடுத்த பதில்கள் யாவும் என்னை மெய் சிலிர்க்க வைத்து விட்டது. மேலும் என்னை சிந்தனையில் ஆழ்த்தியது. மறு நாள் காலையில் அவரை சந்தித்து, ஏன் அற்புதங்கள் இல்லை என்று கேட்டதற்கு, நம்மை சுற்றி அமைந்துள்ள மலைகள், நீர் வீழ்ச்சிகள் மற்றும் இயற்கை எழில்கள் யாவும் அற்புதமாக இல்லையா என்று கேட்டார். என்னால் பதில் எதுவும் தர முடியவில்லை. இதுவே எனது வாழ்வின் திருப்பு முனையாக அமைந்து விட்டது என்றே சொல்வேன்.

எனவே அவரை மேலும் தொடர்பு கொண்டு திருக்குர்ஆனின் விளக்கங்களைப் பெற்று வந்தேன். மனித வாழ்வில் மிகப் பெரிய பொக்கிஷமாக இருக்கும் தனிமனித சுதந்திரத்தை அல்லாஹ் அளித்து இருப்பதையும; அதே சமயத்தில் ஒவ்வொரு செயலுக்கும் உரிய பலன்க ளையும் விளைவுகளையும் அல்லாஹ் எவ்வாறு நிர்ணயித்துள்ளான் என்பதையும் மிகவும் தெளிவாக எடுத்துரைத்தார். அது முதல் உழைப்பே நம் வாழ்வில் உயர்வு தரும் என்று முடிவெடுத்து, என் வாழ்வில் பல அற்புதமான வெற்றிக் கனிகளை அடைந்தேன்.

எனக்கு கிடைத்த பலன்கள் இந்தக் குர்ஆனைப் படிக்கும் ஒவ்வொருக்கும் கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உண்;டு. அந்த அளவுக்கு திருக்குர்ஆன் வசனங்களுக்கு நூல் ஆசிரியர் தெளிவுரை கொடுத்துள்ளார். எல்லாம் வல்ல இறைவனாகிய அல்லாஹ் திருக்குர் மூலமாக அறிமுகப்படுத்திய இஸ்லாம் மார்க்கம் தான் தலை சிறந்தது என்பதை இந்த நூல் ஆசிரியர் கொடுத்த விளக்கவுரையே பறைசாற்றுகிறது என்று சொன்னால் மிகை ஆகாது. அன்பர்கள் அனைவரும் இதை ஒவ்வொருவரும் நன்றாகப் படித்து வாழ்வில் பல சாதனைகளைப் படைத்து மனிதனாக பிறந்து இஸ்லாம் மார்க்கதை ஏற்று நடந்த “மேதைகள்” “சான்றோர்கள்” என்ற பட்டியலில் இடம் பெற உழைப்போமாக.

சையது காசிம், ஆதம் பாக்கம், சென்னை-88

அன்புடையோர் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும். உலக பொது மறையாம் திருக்குரானின் சத்திய விளக்கங்களை வெளியிடுவதிலும் அனைத்து தரப்பு மக்களையும் சென்றடைந்து பலன்களை பெறுவார்கள் என்று எண்ணும் போது, மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். நான் எனது இளமை பருவத்திலும் திருமணத்திற்கு முன்பும் இஸ்லாமிய கோட்பாடு கள் என்று சொல்லி தஸவ்வுஃப் அதாவது தரீஃகத் வழிமுறையில் இருந்தேன். அப்போது மஜ்லிஸ்களில் திருக்குரானின் சில வசனங்களை எடுத்துரைத்து திக்ரு செய்ய பயான்கள் நடைபெறும். அப்போது நான் திருககுர்ஆனின்

:: 12::

அன்பர்கள் கருத்துரை –

தமிழ் மொழியாக்கம் படித்து வந்தும் கூட என்னுள் எழுந்த ஏராளமான கேள்விகளுக்கு தெளிவான பதில் எதுவும் கிடைக்கவே இல்லை. மாறாக பாவ மன்னிப்பை அதகமதிகம் கேட்டுக் கொள்ளும்படி சொல்வார்கள். அவ்வாறு செய்து வந்தால் உங்களுக்கு தெளிவு கிடைக்கும் என்றார்கள்.

அந்த நேரம் நண்பர் ஒருவரின் மூலம் மருத்துவ ரீதியாக விளக்கம் அளிக்கப்பட்ட திருக்குர்ஆனின் புத்தகங்களைப் படிக்கலானேன். அதில் உடலில் ஏற்படும் நோய்களுக்கு திருக்குரானின் வசனங்களை ஓதி குணப்படுத்த முடியும் என்றார்கள். மேலும் ஒவ்வொரு வகையான நோய்க்கு ஒரு குறிப்பிட்ட வசனத்தை ஓதி வரும்படி அறிவுருத்துவார்கள். ஆனால் “நபியே! நாம் உம்மை உலகத்தார் அனவைருக்கும் அருட்கொடை யாகவே அனுப்பி இருக்கிறோம்” (21:107) மேலும் நபியே! நீர் உலகத்தார் அனைவருக்கும் முன் மாதிரி (33: ) அறிவுடையோரைத் தவிர இதைக் கொண்டு நேர்வழி பெற மாட்டார்கள் என்பது போன்ற திருக்குர்ஆனின் வசனங்கள் என் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருந்தன. மேலும் இது அல்லாஹ் அல்லாதவர் இடமிருந்து வந்திருந்தால் ஏராளமான முரண்பாடு களைக் கண்டு இருப்பீர்கள் (4:98). இப்படிப்பட்ட வசனங்களுக்கு விளக் கத்தை கேட்டால் யாரும் விளக்கத்தை தரவில்லை.

இப்படியாக உண்மையை தேடி அலைந்த போது தான் மதிப்பிற்கும் மறியாதைக்கும் உரிய திருக்குர் ஆசிரியர் ஜனாப் ரூஹ{ல்லா நெறி அவர்களை சந்திக்கும் வாய்ப்புகள் 1988இல் கிடைத்தது. அப்போது என் மனதில் குடைத்துக் கொண்டிருந்த வசனங்களுக்கும் திருக்குர்ஆனின் ஒட்டு மொத்த வசனங்களுக்கு விளக்கம் அளித்து வந்தார். திருக்குர்ஆனின் சத்திய விளக்கங்கள் ஒவ்வொரு மனிதனின் அன்றாட வாழ்க்கையிலும் ஒட்டு மொத்த சமுதாய மக்களின் நல் வாழ்விலும் திருக்குர்ஆன் எவ்வாறு பின்னிப் பிணைந்துள்ளது என்பதைக் கண்டு வியப்பில் ஆழ்ந்தேன்.

திருக்குர்ஆனின் எந்த வசனத்தின் விளக்கத்தை கேட்டாலும் விளக்கம் தராதவர்கள் மத்தியல் அனைத்து வசனங்களுக்கும் விளக்கங் களை தந்து தெளிவு படுத்தி திருருக்குர்ஆனைப் பின்பற்றி வாழ்பவர்களாக மாற்றிய ஆசிரியர் அவர்களுக்கு வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்ள என்றென்றும் கடமைப் பட்டுள்ளேன். திருக்குர் ஆனின் போதனைகளின் அடிப்படையில் வாழும் போது பலன்களையும் அவற்றிற்கு மாற்றமான செயல்படும் போது தீய விளைவுகளையும் சந்திப்பது உறுதி என்ற எல்லாம் வல்ல இறைவனாகிய அல்லாஹ்வின் அச்சம் மனதில் வேரூன்றிவிட்டது. இப்படிப்பட்ட திருக்குரானின் உண்மையான சத்திய விளக்கங்களை நீங்களும் பெற்று பலன்களை பெற வேண்டும் என்ற நல்லெண்ணத்துடன் இதை நான் எழுதுகிறேன். இவ்வாறு

::13::

அன்பர்கள் கருத்துரை –

நீங்களும் பலன்களைப் பெறுவீர்கள் என்று எண்ணும் போது எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். திருக்குர்ஆனின் விளக்கவுரை வெளியிட உதவிய நல்ல உள்ளங்களுக்கும் ஆசிரியர் அவர்களுக்கும் எனது உளமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபர்காதஹ{.

இப்படிக்கு,

சையது காசிம், 2/5 திருவள்ளுவர் 3ஆவது சந்து, ஆதம்பாக்கம், சென்னை-88.

From :

Prof. K.S.Faiyaz Basha, M.A. B.L.M.Phil,Ambur.

My heartiest congradulations to Janab Roohulla Neri for his presentation of Exposition of the Holy Quran in Tamil to the Muslims and Non Muslim communities.

The Holy Quran being a spiritual treatise having no expiry date till the end of time and revealed in Arabic Lanaguage to Prophet Muhammad 1400 years ago describes itself as a final book amongst a chain of revelations going back to the very origin of Man. It renews the message of Torah, dfalmn and the Gospel (Taurat, Zaboor and Injeel) because it is the only connecting scripture and the watcher over them (Quran 5:48) Prophet Muhammed began to receive the revelations of the Quran in the year 610 AD that continued over a period of 23 years. The Quran is divided into 114 suras/chapters of unequal length that contains over 6600 verses. Each verse is called ayath literally meaning sign. Every chapter except Surah Tauba begins with Bismilla Hir Rahman Ir Raheem (In the name of Allah the most Merciful and Compassionate) – Primary Attributes of Allah.

The Quran means the recital. It is a message to be read, recited, heard and absorbed in the heart amongst masses. It further describes itself as the criterion of right and wrong, a grace and a noble message.(25:1) Allah Himself extols this revelation as His grace and is better than all the treasures that they may amass. (43:22).

Arabic Quran is held in high esteem in Muslim homes. The Quran is believed to be the miracle of Prophet Muhammad as it is still with us. It continues to guide to the truth and to the right path (1:6)

The Quran addresses all of humanity touching on subject as diverse as the world. It calls upon people to work together in establishing communities and cultures where morality is nurtured. It tells the histories of prophets and reminds us to follow their ethicals and righteous ways. It does not expect to detach ourselves completely from the world.(Quran 2:201) but engage with the people with a standard of moral excellance and develop a spiritual awareness.

The Quran is the first prose type text book in the Arabic Language and it is infinite in exposing right guidelines. Prophet Muhammad started teaching Quranic principles as and when he received revelations from Almighty Allah for about 13 years to the people in Makkah and later on he travelled to Madinah to establish a society as per the Guidelines which hither to was theoretical. (17:1) There he was successful in establishing the Islamic rule as per the guidelines and made his nation glorious.

There are hundreds of translations of Quran in various Indian and International Languages. But all of them are mere translations and so the readers find it very difficult to understand and follow the Quranic Guidelines The exposition of Quran given by Janab Roohulla Neri runs in a different way and all his explanations are based on the expostion of Quran in Urdu by Allama Gulam Ahmed Parvez and other great scholars like Aslam Jayarajpuri, Sheik Dawood Shah etc. So the exposion of Quran is socio-political, economic and scientific based. Roohulla Neri has taken the great task of translating them in simple Tamil language.

While going through the exposition of Quran, one can clearly understand that Almighty Allah has given certain responsibilities to the mankind to keep his society free from chaos and turmoil, for which he has to follow Allah’s guidelines. Secondly it appears that the normal translations teach us to work for appeasing Allah and keep Him happy by praising Him daily, whereas the exposition reveals clearly that Allah wants to keep Man’s life secrure, pleasant and happy and so the guidelines.

I once again congratulate Janab Roohulla Neri for his great efforts to take this task by himself so that we all get right guidelines.

Prof. K.S.Faiyaz Pasha, M.A. B.L.M.Phil,Ambur

Date: 03/10/2018.

திரு.அப்துல் ஷாஹித், அலீஃப் காண்ட்ராக்ட், சென்னை.

அன்புடையீர்.

அஸ்ஸலாமு அலைக்கும்.

ஆலிஜனாப் ரூஹுல்லா நெறி அவர்கள் திருக்குர்ஆனின் ஆராய்ச்சி யில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தன்னை ஈடுபடுத்தி, தான்

:: 14 ::

அன்பர்கள் கருத்துரை –

விளங்கிக் கொண்ட திருக்குர்ஆனின் உண்மைகளை பிறருக்கும் அறிவித்து, தத்தம் வாழ்வில் திருக்குர்ஆனின் அறிவுரைப்படி வாழ்ந்து இம்மை மற்றும் மறுமையில் சிறந்தவர்களாக ஆக வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் வெளியிட்டுள்ள திருக்குர்ஆன் தெளிவுரை என்ற நூல் என்னை மிகவும் கவர்ந்தது.

திருக்குர்ஆன் இறைவனின் வார்த்தை என்பதில் யாருக்கும் எந்த சந்தேகமும் இலலை. இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்த எனக்கு சிறு வயதிலிருந்தே அனைத்து சமூகத்தாருடனும் இணைந்து வாழ்ந்து வந்தேன். ஏனெனில் என்னை படைத்த இறைவன் தான் அனைவரையும் படைத்தான் என்பதில் நான் உறுதியாக இருந்தேன்.

கடந்த 2015ல் சென்னையை உலுக்கிய பெருவெள்ளத்தில் பாதிக்கப் பட்ட மக்களுக்கு எவ்வித சமூக பாகுபாடும் கருதாமல் உதவிய குழுக்களுடன் இணைந்து நானும் என்னால் ஆன சேவையை செய்தேன். மக்களின் பாராட்டும் கிடைத்தது. இத்தகைய சமூக பணி எதுவும் செய்யாததால் தான் முஸ்லிம்கள் பழி சொல்லுக்கு ஆளாகிறார்களோ என்ற மனப் போராட்டம் எனக்குள் வேரூன்றியது. அந்த தருணத்தில் தான் திரு. ரூஹுல்லா நெறி அவர்கள் வெளியிட்ட திருக்குர்ஆன் தெளிவுரை கிடைத்தது.

நான் எத்தனையோ முறை திருக்குர்அனின் மொழி பெயர்ப்பை படித்துள்ளேன். ஆனால் எதுவும் சரிவர விளங்காதது எனக்கு வருத்தத்தை தந்தது. ஆனால் தெளிவுரை படித்த போது என்னுள் நிலவி வந்த நெருடல்க ளும் குழப்பங்களும் நீங்கி எனக்குள் தன் நம்பிக்கை பிறந்தது. எனவே வேத அறிவுரைகளை அன்றாட வாழ்க்கையில் நடைமுறைப் படுத்துகிறேன். அதனால் மன நிறைவும் என் குடும்பத்தில் சந்தோஷமும் கிடைத்து என்னுள் நிறைய மாற்றங்களை காண்கின்றேன்.

வெறும் திருக்குர்ஆனின் உள்ள வார்த்தைகளை உச்சரித்துக் கொண்டு வருவதனால் எந்த பலனும் இல்லை என்பதையும் அவற்றை பின்பற்றினால் மட்டுமே பலன்கள் கிடைக்கும் என்பதையும் தெளிவுரை மூலம் அறிந்துக் கொண்டேன்.

என் இறைவன் யாருக்கும் அநீதி இழைக்க மாட்டான். அநீதி இழைப்பவன் இறைவனாக இருக்க மாட்டான் என்பதை உணர வைத்தது இந்த தெளிவுரை. தெளிவுரையை படித்து என்னைப் போல் லட்சோப லட்ச மக்கள் தத்தம் வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்ற நல்ல

(15)

அன்பர்கள் கருத்துரை –

எண்ணத் துடன் இதை நான் பதிவு செய்கிறேன்.

இப்படிக்கு,

A.Abdul Shahid, Alif Contract,Chennai.

Uppukar Zubair Ahmed, Ambur.

سا ری حمد و ‎‎‎شتا ئش اللہ کے لۓ ہے ۔

اسسلام علیکم

میں اپنے آٹھ سال کی عمر میں قرآن ‎‎شریف پڑھ کر ختم کر چکا تھا ۔ ثواب کی نیت سے ہر روز صبح میں نماز کے بعد قرآن کا پڑھتا تھا ۔ اکثر علما‎ء کے بیانات میں سنا ہے کہ قرآن کو سمجھ کر پڑھو اور اسپر عمل کرو ۔ میں نے قرآن کو سمجھ کر پڑھنے کی کوشش میں لگا تو معلوم ہوا کہ قرآن کی ترجمہ اور تفسیر دنیا بھر کی مختلف زبانوں میں موجود ہیں۔ اسی طرح اردو زبان میں بھی کۓ مترجمین نے تفسیر لکھی ہیں۔ لیکن جب انہیں مطالعہ کیا تو آسانی سے سمجھ میں نہیں آیا۔

قرآن پر عمل کرنیکی تاکید ھے۔ اسلۓ میں حق کی تلاش میں سر گرداں پھرتا تھا۔ اسوقت خوش قسمتی سے عالی جناب ڈی۔جے۔ مظہر حسن صاحب سے تعارف ہوی۔ ان سے چند قران کی باتیں سیکھی۔ انکے وفات کے چند سال بعد جناب روح اللہ صاحب سے رابطہ ہوا ۔ دین اور مذہب میں جو فرق تھی وہ معلوم ہوی۔یہ جان کر بے انتھا خوشی اور مسررت ہوی کہ جناب روح اللہ صاحب مفہوم القرآن کو ٹمل زبان میں کۓ ہیں۔ اسکا مطالعہ کرنے سے معلوم ہوا کہ دین الگ اور مذہب الگ ہے۔ ٹمل مفہوم القرآن سمجھنے میں آسان ہے۔ انہوں نے قرآن کو مذہبی انداذ سے چھڑاکرصاف اور خالص دین پیش کیا ہے۔ جو روزبروز زندگی میں اتبع کرنے ‏میں کو‎ي دشواری نہیں ہوتی۔

اللہ تعالآ سے دعا کرتا ہوں کہ انکی مہنت کو قبول کرکے کامیابی عطا کریں اور انکے والدین کو جننت میں ا‏‏علا درجہ عطا فرماءیں۔ آمین۔

فقط اپوکار زبیر احمد، آمبور