9:1بَرَآءَةٞ مِّنَ ٱللَّهِ وَرَسُولِهِۦٓ إِلَى ٱلَّذِينَ عَٰهَدتُّم مِّنَ ٱلۡمُشۡرِكِينَ١
9:1. அல்லாஹ்வுக்கு இணையாக வேறு வழிமுறைகளைக் கடைப்பிடிக்கும் முஷ்ரிக்குகளிடம் செய்துகொண்ட சமூக நல்லிணக்க ஒப்பந்தம் காலாவதி ஆகிவிட்டதாக அவர்களுக்கு அறிவித்து விடுங்கள். அல்லாஹ்வின் இந்த அரசமைப்பு அந்த உடன்படிக்கையிலிருந்து இனி விலகிக் கொள்ளும்.
ஏனெனில் பொது மக்களுக்கும் அல்லாஹ்வின் ஆட்சியமைப்பு திட்டங்களுக்கும் விரோதமாக செயல்பட மாட்டோம் என்று அவர்கள் செய்துக்கொண்ட ஒப்பந்தப்படி (பார்க்க 9:4) அவர்கள் நடந்துக் கொள்ளவில்லை.
9:2فَسِيحُواْ فِي ٱلۡأَرۡضِ أَرۡبَعَةَ أَشۡهُرٖ وَٱعۡلَمُوٓاْ أَنَّكُمۡ غَيۡرُ مُعۡجِزِي ٱللَّهِ وَأَنَّ ٱللَّهَ مُخۡزِي ٱلۡكَٰفِرِينَ٢
9:2. “எனவே இன்றைய நாளிலிருந்து நான்கு மாதங்கள் வரையில் இந்நாட்டில் நீங்கள் தங்கிக் கொள்ளலாம். இந்த கால அவகாசத்திற்குள் நீங்கள் ஒரு முடிவுக்கு வாருங்கள். இந்த அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு வாழ்வதாக இருந்தால் இங்கு நிரந்தரமாக தங்கிக் கொள்ளலாம். அதை விட்டுவிட்டு இந்த ஆட்சியமைப்பை தோல்வியுற செய்திடலாம் என்ற எண்ணத்தில் இருந்தால்,அது உங்களால் ஒருபோதும் முடியாது என்பதை தெரிந்துக் கொள்ளுங்கள். இறுதியில் நீங்களே தோல்வியுற்று இழிவுக்குள்ளாகி விடுவீர்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள்” என்று அவர்களுக்கு அறிவித்துவிடுங்கள்.
9:3وَأَذَٰنٞ مِّنَ ٱللَّهِ وَرَسُولِهِۦٓ إِلَى ٱلنَّاسِ يَوۡمَ ٱلۡحَجِّ ٱلۡأَكۡبَرِ أَنَّ ٱللَّهَ بَرِيٓءٞ مِّنَ ٱلۡمُشۡرِكِينَ وَرَسُولُهُۥۚ فَإِن تُبۡتُمۡ فَهُوَ خَيۡرٞ لَّكُمۡۖ
9:3. அல்லாஹ்வின் ஆட்சியமைப்பும், அதை வழிநடத்திச் செல்லும் இறைத் தூதரும் முஷ்ரிக்குகளிடம் செய்துக் கொண்ட ஒப்பந்தம் காலாவதி ஆகிவிட் டதாக மக்கள் திரளாகக் கூடும் ஹஜ் பெருநாளில் வெளிப்படையாக அறிவிக்கின்றனர். “நீங்கள் சமூக விரோத செயல்களை விட்டு விலகிக் கொண்டால், அது உங்கள் நன்மைக்கே ஆகும்.
وَإِن تَوَلَّيۡتُمۡ فَٱعۡلَمُوٓاْ أَنَّكُمۡ غَيۡرُ مُعۡجِزِي ٱللَّهِۗ وَبَشِّرِ ٱلَّذِينَ كَفَرُواْ بِعَذَابٍ أَلِيمٍ٣
ஆனால் நீங்கள் இந்த அறிவிப்பை புறக்கணித்து, சமூக விரோத செயல்களை தொடர்ந்து செய்து வந்தால், நீங்கள் இந்த அரசை எதிர்த்து போரிட வேண்டி வரும். அப்போது நீங்கள் ஒருபோதும் இந்த அரசை தோற்கடிக்க முடியாது என்பதை அறிந்துக் கொள்ளுங்கள். மேலும் சமூக விரோத செயலில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை கிடைக்கும் என்பதையும் அவர்கள் அறிந்து கொள்ளட்டும்”
சிந்தனையாளர்களே! கவனித்தீர்களா? ஹஜ் கூடும் சமயம் முஹம்மது நபிஸல் அவர்கள் உலக விவகாரங்களை அந்த அரசின் சார்பாக எவ்வாறு அறிவிக்கிறார் என்பதைக் கவனித்தீர்களா? எனவே உலக மக்களுள் உள்ள பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதற்காகவே கஅபா எனும் ஐக்கிய நாட்டு சபை நிறுவப்பட்டது. (பார்க்க 3:97)
9:4إِلَّا ٱلَّذِينَ عَٰهَدتُّم مِّنَ ٱلۡمُشۡرِكِينَ ثُمَّ لَمۡ يَنقُصُوكُمۡ شَيۡٔٗا وَلَمۡ يُظَٰهِرُواْ عَلَيۡكُمۡ أَحَدٗا فَأَتِمُّوٓاْ إِلَيۡهِمۡ عَهۡدَهُمۡ إِلَىٰ مُدَّتِهِمۡۚ إِنَّ ٱللَّهَ يُحِبُّ ٱلۡمُتَّقِينَ٤
9:4. ஆனால் முஷ்ரிக்குகளில் சிலர், அந்த உடன்படிக்கையின் படி எவ்வித குறைப்பாடும் இன்றி வாழ்ந்து வருகின்றனர். மேலும் அவர்கள் மக்கள் விரோத செயல்களில் ஈடுபடுவதில்லை. அத்தகையவர்களுக்கு இந்த காலக்கெடு பொருந்தாது. அவர்கள் இங்கு தாராளமாக தங்கிக் கொள்ளலாம். அவர்களைத் தவிர மற்ற சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு இந்த காலக்கெடு பூர்த்தி ஆகும் வரை காத்திருப்போம். நிச்சயமாக அல்லாஹ்வின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு செயல்படுபவர்களுக்கு முழு ஆதரவு கிடைக்கும்.
9:5فَإِذَا ٱنسَلَخَ ٱلۡأَشۡهُرُ ٱلۡحُرُمُ فَٱقۡتُلُواْ ٱلۡمُشۡرِكِينَ حَيۡثُ وَجَدتُّمُوهُمۡ وَخُذُوهُمۡ وَٱحۡصُرُوهُمۡ وَٱقۡعُدُواْ لَهُمۡ كُلَّ مَرۡصَدٖۚ
9:5. இந்த நான்கு மாத காலக்கெடு முடிவடைந்த பின்பும் அந்த முஷ்ரிக்குகளின் சமூக விரோத செயல்கள் தொடர்வதாகத் தெரிந்தால், அவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அவர்கள் இந்த அரசின் செயல்திட்டங்கள் நிறைவேறாதவாறு துரோகம் செய்தால் அவர்களை கண்ட இடத்தில் வெட்டி சாய்த்து விடும். அல்லது அவர்களைப் பிடித்து சிறையில் அடைக்கும். அவர்கள் பதுங்கும் இடங்களில் முற்றுகையிட்டு அவர்களுடைய செயல்களை நோட்டமிடும்.
فَإِن تَابُواْ وَأَقَامُواْ ٱلصَّلَوٰةَ وَءَاتَوُاْ ٱلزَّكَوٰةَ فَخَلُّواْ سَبِيلَهُمۡۚ إِنَّ ٱللَّهَ غَفُورٞ رَّحِيمٞ٥
ஆனால் அவர்கள் தம் தவறான செயல்களை விட்டுவிடுவதாக வாக்களித்து, இறை நெறிமுறைகளின்படி செயல்பட்டு, அரசு நிர்ணயிக்கும் வரிகளை முறைப்படி செலுத்தி வருவதாக ஒப்புக் கொண்டால், அவர்களை விட்டுவிடுங்கள். நிச்சயமாக அல்லாஹ்வின் சட்டதிட்டங்கள் யாவும் அனைத்து தரப்பு மக்களின் பாதுகாப்பு கருதியே நிர்ணயிக்கப்படுகின்றன. இது அல்லாஹ்வின் மிகப்பெரிய கிருபையாகும்.
9:6وَإِنۡ أَحَدٞ مِّنَ ٱلۡمُشۡرِكِينَ ٱسۡتَجَارَكَ فَأَجِرۡهُ حَتَّىٰ يَسۡمَعَ كَلَٰمَ ٱللَّهِ ثُمَّ أَبۡلِغۡهُ مَأۡمَنَهُۥۚ ذَٰلِكَ بِأَنَّهُمۡ قَوۡمٞ لَّا يَعۡلَمُونَ٦
9:6. இந்த காலக் கெடுவுக்குப் பின் முஷரிக்குகளில் யாராவது உங்களிடம் புகலிடம் தேடி வந்தால், அவர்களுக்கு தக்க பாதுகாப்பு அளித்து அபயம் அளியுங்கள். அதே சமயம் அல்லாஹ்வின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு வாழ்வதால் ஏற்படும் நன்மைகளைப் பற்றி அவர்களிடம் எடுத்துரையுங்கள். அதன் பின்பும் அவர்கள் இங்கு வாழ பிடிக்காது வேறு இடங்களுக்கு செல்ல விரும்பினால் அவர்களை பாதுகாப்பாக அனுப்பி வையுங்கள். அதாவது அவர்களுக்கு பயண வசதிகளை செய்து தருவதுடன் பாதுகாப்பாக செல்ல ஏற்பாடுகளையும் செய்து தாருங்கள். ஏனெனில் அவர்களில் பெரும்பாலோர் ஒன்றும் அறியாத பாமர மக்களாக இருக்கின்றனர்.
கவனித்தீர்களா? அவர்கள் அல்லாஹ்வை ஏற்காத முஷ்ரிக்குகள் என்பதால் அவர்களை கொன்று குவிக்கச் சொல்லவில்லை. சமூக விரோத செயலில் ஈடுபடுபவர்களைத் தான் வெட்டிச் சாய்க்க கட்டளை பிறப்பிக் கப்படுகிறது. அதுவும் இது தனிநபருக்கு கிடைக்கும் அதிகாரம் அல்ல. அரசுக்கு கிடைக்கும் அதிகாரமாகும். மேலும் பாதுகாப்பு தேடி வருபவர்களிடம் எந்த அளவிற்குப் பணிவோடு நடந்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது என்பதையும் கவனியுங்கள்.
9:7كَيۡفَ يَكُونُ لِلۡمُشۡرِكِينَ عَهۡدٌ عِندَ ٱللَّهِ وَعِندَ رَسُولِهِۦٓ إِلَّا ٱلَّذِينَ عَٰهَدتُّمۡ عِندَ ٱلۡمَسۡجِدِ ٱلۡحَرَامِۖ فَمَا ٱسۡتَقَٰمُواْ لَكُمۡ فَٱسۡتَقِيمُواْ لَهُمۡۚ إِنَّ ٱللَّهَ يُحِبُّ ٱلۡمُتَّقِينَ٧
9:7. அல்லாஹ்வின் ஆட்சியமைப்போடு அந்த முஷரிக்குகள் செய்துக் கொண்ட உடன்படிக்கையை அவர்கள் அடிக்கடி மீறும் போது, அதை எப்படி கணக்கில் எடுத்துக்கொள்ள முடியும்? மஸ்ஜிதுல் ஹரம் என்னும் தலைமைச் செயலகம் சம்பந்தமாக நீங்கள் செய்த உடன்படிக்கை மட்டும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். அதுவும் அவர்கள் எதுவரையில் அங்கு நேர்மையாக செயல் படுகிறார்களோ, அதுவரையில் அவர்களுடன் நீங்களும் நேர்மையாக நடந்து கொள்ளுங்கள். அவர்கள் அங்கேயும் அத்துமீறி நடந்து கொண்டால், அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுங்கள். இறைவழிகாட்டுதலைப் பேணி நடப்பவர்களுக்கு மட்டுமே அல்லாஹ்வின் அரவணைப்பு கிடைக்கும்.
9:8كَيۡفَ وَإِن يَظۡهَرُواْ عَلَيۡكُمۡ لَا يَرۡقُبُواْ فِيكُمۡ إِلّٗا وَلَا ذِمَّةٗۚ يُرۡضُونَكُم بِأَفۡوَٰهِهِمۡ وَتَأۡبَىٰ قُلُوبُهُمۡ وَأَكۡثَرُهُمۡ فَٰسِقُونَ٨
9:8. மேலும் ஒருவேளை, அவர்கள் உங்களை கட்டுப்படுத்தும் சக்தியைப் பெற்றுவிட்டால், அவர்கள் செய்த உடன்படிக்கையை ஒருபோதும் பொருட்படுத்த மாட்டார்கள். அத்துடன் உங்ளிடமுள்ள உறவுமுறைகளை துண்டித்துக் கொள்வதோடு, உங்களுக்கு அவர்கள் நெருக்கடி ஏற்படுத்தவே முனைந்திருப்பார்கள். உங்களை திருப்திப்படுத்தவே அவர்கள் நல்லவர்களைப் போல் நடிக்கிறார்கள். அவர்கள் உள்ளங்களில் இருப்பது கடும் பகையே ஆகும். இப்படியாக அவர்களில் பெரும்பாலோர் பாவிகளாகவே இருக்கிறார்கள். இத்தகையவர்களிடம் செய்துகொண்ட அந்த உடன் படிக்கை எப்படி ஜீவித்து இருப்பதாகக் கருத முடியும்?
9:9ٱشۡتَرَوۡاْ بَِٔايَٰتِ ٱللَّهِ ثَمَنٗا قَلِيلٗا فَصَدُّواْ عَن سَبِيلِهِۦٓۚ إِنَّهُمۡ سَآءَ مَا كَانُواْ يَعۡمَلُونَ٩
9:9. மேலும் அவர்கள் சொற்ப ஆதாயங்களுக்காக அல்லாஹ்வின் வழிகாட்டுதலுக்கு எதிராக செயல்படுகின்றனர். மேலும் அல்லாஹ்வின் செயல் திட்டங்கள் நிறைவேறாதவாறு தடைகளை ஏற்படுத்தி வருகின்றனர். இவ்வாறு செயல்படுகிறோமே என்றோ, அதனால் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றியோ அவர்கள் சிந்தித்துப் பார்க்கிறார்களா?
9:10لَا يَرۡقُبُونَ فِي مُؤۡمِنٍ إِلّٗا وَلَا ذِمَّةٗۚ وَأُوْلَٰٓئِكَ هُمُ ٱلۡمُعۡتَدُونَ١٠
9:10. மேலும் அல்லாஹ்வின் வழிகாட்டுதலை ஏற்று சமுதாய மேம்பாட்டிற்காக செயல்படும் மூஃமின்களோடு அவர்கள் ஒத்துழைப்பதும் இல்லை. இவ்விஷயத்தில் அவர்கள் செய்துக் கொண்ட உடன்படிக்கை எல்லாம் தூக்கி எறிந்து விட்டார்கள். இப்படியாக அவர்கள் எல்லா விஷயங்களிலும் வரம்பு மீறி செயல்படுபவர்களாகவே இருக்கிறார்கள்.
9:11فَإِن تَابُواْ وَأَقَامُواْ ٱلصَّلَوٰةَ وَءَاتَوُاْ ٱلزَّكَوٰةَ فَإِخۡوَٰنُكُمۡ فِي ٱلدِّينِۗ وَنُفَصِّلُ ٱلۡأٓيَٰتِ لِقَوۡمٖ يَعۡلَمُونَ١١
9:11. எனினும் இப்பவும் காலம் கடந்து விடவில்லை. இப்படி சட்டவிரோத செயலில் ஈடுபடுவதை விட்டுவிட்டு இறைவழிகாட்டுதல்கள் காட்டும் வழிமுறையில் நிலைத்திருந்து, ஆட்சி நிர்ணயிக்கும் வரிகளை முறைப்படி செலுத்தி, ஆக்கப்பூர்வமாகச் செயல்பட்டால் அவர்களையும் சக தோழர்களாக கருத முடியும். சீரிய சிந்தனையுடன் அறிவுரைகளைப் பின்பற்றும் சமூகத்தாருக்கு இவை யாவும் விரிவாக விளக்கப்படுகின்றன.
9:12وَإِن نَّكَثُوٓاْ أَيۡمَٰنَهُم مِّنۢ بَعۡدِ عَهۡدِهِمۡ وَطَعَنُواْ فِي دِينِكُمۡ فَقَٰتِلُوٓاْ أَئِمَّةَ ٱلۡكُفۡرِ إِنَّهُمۡ لَآ أَيۡمَٰنَ لَهُمۡ لَعَلَّهُمۡ يَنتَهُونَ١٢
9:12. இதை விட்டுவிட்டு இனியும் அவர்கள் தம் உடன்படிக்கையை முறித்துக் கொண்டு, இறைச் செயல்திட்டங்களைப் பற்றி தரக்குறைவாக விமர்சித்துக் கொண்டு இருந்தால், அத்தகைய விஷமிகளின் தலைவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுப்பதைத் தவிர வேறு வழியில்லை. எனவே அவர்களை பிடித்து மற்றவர்களைப் பணியவைத்து ஒழுங்குபடுத்தி விடலாம்.
9:13أَلَا تُقَٰتِلُونَ قَوۡمٗا نَّكَثُوٓاْ أَيۡمَٰنَهُمۡ وَهَمُّواْ بِإِخۡرَاجِ ٱلرَّسُولِ وَهُم بَدَءُوكُمۡ أَوَّلَ مَرَّةٍۚ أَتَخۡشَوۡنَهُمۡۚ فَٱللَّهُ أَحَقُّ أَن تَخۡشَوۡهُ إِن كُنتُم مُّؤۡمِنِينَ١٣
9:13. அவர்கள் செய்துக் கொண்ட உடன்படிக்கைக்கு எதிராக செயல்படுவோரை நாட்டில் எப்படி விட்டு வைக்க முடியும்? ஒரு கட்டத்தில் இறைத் தூதரை ஊரைவிட்டு வெளியேற்றிவிட திட்டமிட்டவர்கள் தானே அவர்கள். (பார்க்க 8:30) அதனால் தான் இறைத்தூதரும் அவரைச் சார்ந்தவர்களும் மக்காவை விட்டு மதீனாவுக்குச் செல்ல நேர்ந்தது. அதோடு அவர்கள் விடவில்லை. அவரைப் பின்தொடர்ந்து தாக்கவே திட்டமிட்டார்கள். அது மட்டுமின்றி அவர்கள் தான் முதன் முதலில் இறைத்தூதர் கொண்டுவந்த ஆட்சிக்கு எதிராகப் படை எடுத்தனர். இப்போதும் அவர்கள் உங்களை தாக்கவே திட்டமிடுகின்றனர். அத்தகைய வர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் இருக்க உங்களுக்கு என்ன வந்தது.? நீங்கள் அவர்களுக்கு அஞ்சுகிறீர்களா? அப்படி அல்ல. நீங்கள் உண்மையிலேயே அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்பவர்களாக இருந்தால், அவர்களுக்கு எதிராக நீங்கள் கடும் நடவடிக்கை எடுங்கள். நீங்கள் அஞ்ச வேண்டியதெல்லாம் அல்லாஹ்வின் வழிகாட்டுதலுக்கு எதிராக செயல்படுவதால் ஏற்படும் பின்விளைவுகளைப் பற்றி தான்.
9:14قَٰتِلُوهُمۡ يُعَذِّبۡهُمُ ٱللَّهُ بِأَيۡدِيكُمۡ وَيُخۡزِهِمۡ وَيَنصُرۡكُمۡ عَلَيۡهِمۡ وَيَشۡفِ صُدُورَ قَوۡمٖ مُّؤۡمِنِينَ١٤
9:14. ஏனெனில் எந்த ஒரு விஷயத்திலும் அல்லாஹ்வின் நேரடி தலையீடு இருப்பதில்லை. அவர்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்க கட்டளை பிறப்பித்ததன் நோக்கமே, அவர்களுக்கு உங்கள் மூலமாக வேதனை அளித்து அவர்களை இழிவுபடுத்த வேண்டும் என்பதற்காகவே ஆகும். மேலும் உங்களுக்கு அல்லாஹ்வின் உதவி கிடைத்து நீங்கள் அதில் வெற்றி பெறுவீர்கள். மேலும் உங்களுக்கு மனஅமைதியும் கிடைக்கும்.
9:15وَيُذۡهِبۡ غَيۡظَ قُلُوبِهِمۡۗ وَيَتُوبُ ٱللَّهُ عَلَىٰ مَن يَشَآءُۗ وَٱللَّهُ عَلِيمٌ حَكِيمٌ١٥
9:15. அவர்களில் எஞ்சியவர்களின் உள்ளங்களில் கொதித்து எழுந்த வெறுப்பும் கோபமும் தணிந்து, மார்க்கத்தில் இணையவும் முன்வரலாம். அவ்வாறு திருந்தி வர நாடுவோருக்கு,பொது மன்னிப்பு அளித்து மார்கத்தில் இணைத்துக் கொள்ளப்படும். நிச்சயமாக அல்லாஹ்வின் செயல் திட்டங்கள் யாவும் தெளிவான ஞானத்தின் அடிப்படையைக் கொண்டதாகும்.
கவனித்தீர்களா? இத்தனை அக்கிரமங்களைச் செய்து வந்தவர்களையும் மனந்திருந்தி வந்தால் அல்லாஹ் அவர்களை மன்னித்து ஏற்றுக் கொள்கிறான் என்பதைக் கவனித்தீர்களா? மக்கள் நலனைப் பேணிக் காப்பதே இஸ்லாத்தின் முக்கிய நோக்கமாகும். அதற்கு எதிராகச் செயல்படுபவர்களை விட்டுவைக்கக் கூடாது என்பதே இறைக் கட்டளையாகும்.
9:16أَمۡ حَسِبۡتُمۡ أَن تُتۡرَكُواْ وَلَمَّا يَعۡلَمِ ٱللَّهُ ٱلَّذِينَ جَٰهَدُواْ مِنكُمۡ وَلَمۡ يَتَّخِذُواْ مِن دُونِ ٱللَّهِ وَلَا رَسُولِهِۦ وَلَا ٱلۡمُؤۡمِنِينَ وَلِيجَةٗۚ وَٱللَّهُ خَبِيرُۢ بِمَا تَعۡمَلُونَ١٦
9:16. எனவே இறைவழிகாட்டுதலை மனதார ஏற்றுக்கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வையும் இறைத் தூதரையும் ஏற்றுக் கொள்வதோடு விஷயம் முடிந்து விட்டது என்று எண்ணிக் கொண்டீர்களா? அல்லாஹ்வின் செயல்திட்டங்கள் நிறைவேற தம்மை அர்ப்பணிக்க முன்வருபவர்கள் யார் என்பதையும், அதன் ஆட்சியமைப்பையும், அதன் செயல்வீரர்களையும் விட்டுவிட்டு மற்றவர்களிடம் உற்ற நண்பர்களாக ஆக்கிக்கொள்பவர் யார் என்பதையும் கவனிக்காமல் விடப்படுவீர்கள் என்று எண்ணிக் கொண்டீர்களா? வெறும் உதட்டளவில் அல்லாஹ்வை ஏற்றுக் கொள்வதாக சொன்னால் மட்டும் போதாது. (பார்க்க 2:214, 3:141, 29:1-2) நீங்கள் செய்வது அனைத்தையும் கண்காணிக்கும் ஏற்பாடுகள் இல்லை என்று எண்ணிக் கொள்ளாதீர்கள். ஒவ்வொரு விஷயமும் அல்லாஹ்வுக்குத் தெரிந்தே இருக்கிறது.
9:17مَا كَانَ لِلۡمُشۡرِكِينَ أَن يَعۡمُرُواْ مَسَٰجِدَ ٱللَّهِ شَٰهِدِينَ عَلَىٰٓ أَنفُسِهِم بِٱلۡكُفۡرِۚ
أُوْلَٰٓئِكَ حَبِطَتۡ أَعۡمَٰلُهُمۡ وَفِي ٱلنَّارِ هُمۡ خَٰلِدُونَ١٧
9:17. எனவே இறைக் கட்டளைக்கு மாற்றமாகச் செயல்படுபவர்களைப் பற்றிய உண்மைகள் தெளிவான பின், அல்லாஹ்வின் செயல்திட்டங்களை நிறைவேற்றும் செயலகங்களின் நிர்வாகம் (மஸ்ஜிதுகளை) அவர்கள் பொறுப்பில் விட்டு வைக்க முடியுமா? அதை தலைமைத் தாங்கிச் செல்ல இனி அவர்களுக்கு உரிமை இல்லை. (பார்க்க 72:18) அவர்கள் அங்கு செய்து வரும் செயல்கள் எதுவும் மக்களுக்குப் பலனளிக்கக் கூடியதாக இல்லை என்பதால் அவர்களிடமிருந்து பதவிகளை பரித்து தக்க நடவடிக்கை எடுத்து கடும் வேதனைகளை அனுபவிக்கச் செய்ய வேண்டும்.
9:18إِنَّمَا يَعۡمُرُ مَسَٰجِدَ ٱللَّهِ مَنۡ ءَامَنَ بِٱللَّهِ
9:18. மாறாக அல்லாஹ்வின் வழிகாட்டுதலை ஏற்று,
وَٱلۡيَوۡمِ ٱلۡأٓخِرِ
“மனித செயல்களுக்கு ஏற்ப இறைவன் நிர்ணயித்துள்ள இறுதி விளைவுகள்” என்ற ஆஃகிரத்தையும் ஏற்று,
وَأَقَامَ ٱلصَّلَوٰةَ
ஒழுக்க மாண்புகளை கட்டிக் காக்கும் சமூக கூட்டமைப்பை நிலைநாட்டி,
وَءَاتَى ٱلزَّكَوٰةَ
சமுதாய மேம்பாட்டிற்காக நிர்ணயிக்கப்படும் வரிகளை முறைப்படி செலுத்தி,
وَلَمۡ يَخۡشَ إِلَّا ٱللَّهَۖ
அல்லாஹ்வைத் தவிர வேறு எதற்கும் அஞ்சாதவர்கள் தாம்
فَعَسَىٰٓ أُوْلَٰٓئِكَ أَن يَكُونُواْ
இறைச் செயலகத்திற்கு தலைமைத் தாங்கி வழி நடத்திச் செல்ல தகுதியுடையவர்கள் ஆவார்கள்.
مِنَ ٱلۡمُهۡتَدِينَ١٨
அவர்களே நேர்வழியில் நிலைத்திருப்பவர்கள் ஆவார்கள்.
9:19۞أَجَعَلۡتُمۡ سِقَايَةَ ٱلۡحَآجِّ وَعِمَارَةَ ٱلۡمَسۡجِدِ ٱلۡحَرَامِ كَمَنۡ ءَامَنَ بِٱللَّهِ وَٱلۡيَوۡمِ ٱلۡأٓخِرِ وَجَٰهَدَ فِي سَبِيلِ ٱللَّهِۚ لَا يَسۡتَوُۥنَ عِندَ ٱللَّهِۗ وَٱللَّهُ لَا يَهۡدِي ٱلۡقَوۡمَ ٱلظَّٰلِمِينَ١٩
9:19. கஅபா என்கிற தலைமைச் செயலகத்தை நிர்வகிப்பதாக சொல்லிக் கொண்டு, வருடந்தோரும் அங்கு ஹஜ்ஜுக்காக திரளாகக் கூடும் மக்களுக்கு தண்ணீரையும் சாப்பாட்டையும் கொடுத்து விட்டால் மட்டும் போதுமா? அவர்கள் மற்ற எந்த விஷயங்களிலும் அக்கறை கொள்வதில்லையே! அதே சமயம் அல்லாஹ்வின் வழிகாட்டுதலை ஏற்று, “மனித செயல்களுக்கேற்ற இறுதி விளைவுகள்” என்கிற ஆஃகிரத்தையும் ஏற்று, சமுதாய மேம்பாட்டிற்காக தம்மை அர்ப்பணித்துக் கொண்டவர்களுக்கு இவர்கள் சமமாகி விடுவார்களா? இவ்விரு சாராரும் ஒருபோதும் சமமாக மாட்டார்கள். எனவே அவர்களை அந்த செயலகத்தை விட்டு வெளியேற்றி விட வேண்டும். இத்தகைய நற்செயல்கள் எதையும் செய்யாதவர்களே அநியாயக்காரர்கள் ஆவார்கள். இவர்களுக்கு நேர்வழி கிடைப்பது எப்படி?
9:20ٱلَّذِينَ ءَامَنُواْ وَهَاجَرُواْ وَجَٰهَدُواْ فِي سَبِيلِ ٱللَّهِ بِأَمۡوَٰلِهِمۡ وَأَنفُسِهِمۡ أَعۡظَمُ دَرَجَةً عِندَ ٱللَّهِۚ وَأُوْلَٰٓئِكَ هُمُ ٱلۡفَآئِزُونَ٢٠
9:20. மேலும் எவர்கள் தம் வீட்டையும் ஊரையும் விட்டு, பொதுவாழ்வில் ஈடுபட்டு அல்லாஹ்வின் செயல் திட்டங்ளை நிறைவேற்ற தம்மை அர்ப்பணித்துக் கொண்டு, சமுதாய மேம்பாட்டிற்காக தம் செல்வங்களையும் அளிக்கிறார்களோ, அவர்களிடம்தான் இந்த செயலகத்தின் நிர்வாகப் பொறுப்புகள் ஒப்படைக்கப் படும். அவர்கள் தாம் மகத்தான உயர் பதவிகளுக்கு உரியவர்கள் ஆவார்கள். அவர்கள் தாம் தம் வாழ்வின் வெற்றி இலக்கை அடைபவர்கள்.
9:21يُبَشِّرُهُمۡ رَبُّهُم بِرَحۡمَةٖ مِّنۡهُ وَرِضۡوَٰنٖ وَجَنَّٰتٖ لَّهُمۡ فِيهَا نَعِيمٞ مُّقِيمٌ٢١
9:21. இத்தகையவர்களுக்கு “இறைவனின் வழிகாட்டுதல்கள்” என்ற அருட்கொடைகளும் கிருபையும் கிடைக்கும். இவர்களின் ஒவ்வொரு செயலும் அல்லாஹ்வின் நாட்டப் படியே இருக்கும். எனவே அங்கு தாராளமான பொருளாதார வசதிகளுடன் கூடிய நிலையான பாக்கியங்கள் கொண்ட சுவனத்திற்கு ஒப்பான சமுதாயமாக உருவெடுக்கும். இந்த சுவன வாழ்க்கை இவர்களின் மரணத்திற்குப் பின்பும் தொடரும்.
9:22خَٰلِدِينَ فِيهَآ أَبَدًاۚ إِنَّ ٱللَّهَ عِندَهُۥٓ أَجۡرٌ عَظِيمٞ٢٢
9:22. அச்சுவனங்களில் இவர்களுக்கு நிலையான மகிழ்ச்சியும் சந்தோஷங்களும் கிடைக்கும். அல்லாஹ்விடத்தில் இத்தகையவர்களுக்கு மகத்தான நற்கூலி நிச்சயம் உண்டு என்ற நற்செய்தியை அவர்களிடம் கூறிவிடுங்கள்.
9:23يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ لَا تَتَّخِذُوٓاْ ءَابَآءَكُمۡ وَإِخۡوَٰنَكُمۡ أَوۡلِيَآءَ إِنِ ٱسۡتَحَبُّواْ ٱلۡكُفۡرَ عَلَى ٱلۡإِيمَٰنِۚ وَمَن يَتَوَلَّهُم مِّنكُمۡ فَأُوْلَٰٓئِكَ هُمُ ٱلظَّٰلِمُونَ٢٣
9:23. மேலும் ஒரு விஷயத்தை மனதில் நன்றாக பதிய வைத்துக் கொள்ளுங்கள். சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கட்டளை பிறப்பிக்கப்படுகிறது. தகாத செயல்களில் யார் ஈடுபட்டாலும் அதற்கெதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் தந்தை, மகன், அண்ணன், தம்பி, என்ற உறவுமுறை பாகுபாடு இருக்கக் கூடாது. உறவினர்களின் மீதுள்ள பாசம் இதில் குறுக்கிடக்கூடாது. இதையும் மீறி யாராவது அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டால் அவர்களும் அநியாயக்காரர்கள் பட்டியலில் சேர்க்கப் படுவார்கள்.
9:24قُلۡ إِن كَانَ ءَابَآؤُكُمۡ وَأَبۡنَآؤُكُمۡ وَإِخۡوَٰنُكُمۡ وَأَزۡوَٰجُكُمۡ وَعَشِيرَتُكُمۡ وَأَمۡوَٰلٌ ٱقۡتَرَفۡتُمُوهَا وَتِجَٰرَةٞ تَخۡشَوۡنَ كَسَادَهَا وَمَسَٰكِنُ تَرۡضَوۡنَهَآ أَحَبَّ إِلَيۡكُم مِّنَ ٱللَّهِ وَرَسُولِهِۦ وَجِهَادٖ فِي سَبِيلِهِۦ
9:24. மேலும் அல்லாஹ்வின் செயல் திட்டங்களை நிறைவேற்ற தம்மை அர்ப்பணித்துக் கொள்ள இறை ஆட்சியமைப்பு வலியுறுத்தி வருகிறது. இத்தகைய சமூக நலத் திட்டங்களுக்கு இந்த உறவுமுறை பாசங்கள் குறுக்கீடாக இருக்கக் கூடாது. உங்களுடைய பிள்ளைகள், சகோதரர்கள், மனைவி போன்ற குடும்பத்தார்கள் மற்றும் நீங்கள் ஈட்டிய செல்வங்கள் ஆகியவற்றின் மீதுள்ள பாசம், இந்த நற்பணிகளுக்குத் தடையாக இருக்கக் கூடாது. இவ்வாறு சமூக நலப்பணிகளில் ஈடுபட்டால், தம் வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டுவிடும் என்று அச்சம் கொள்ளத் தேவையில்லை. நீங்கள் பாசத்தோடு பராமரித்து வரும் வீட்டின் மீதுள்ள பற்றுதலும் இந்த நற்பணிகளில் குறுக்கிடக் கூடாது.
فَتَرَبَّصُواْ حَتَّىٰ يَأۡتِيَ ٱللَّهُ بِأَمۡرِهِۦۗ وَٱللَّهُ لَا يَهۡدِي ٱلۡقَوۡمَ ٱلۡفَٰسِقِينَ٢٤
இவை எல்லாம் மனித வாழ்க்கைக்குத் தேவையான ஒன்றுதான். ஆனால் இறை ஆட்சியமைப்புக் கட்டளைகள் என்று வரும்போது, இவற்றை இரண்டாம் பட்சமாகத் தான் கருத வேண்டும். அல்லாஹ்வின் கட்டளைக்கு முக்கியத்துவம் அளித்து அதற்கு இணங்கிச் செயல்பட தம்மை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு செய்யாமல் உறவு முறைப் பாசங்களுக்கு அடிமைப்பட்டு நலப்பணிகளிலும் பாதுகாப்பு விஷயங்களிலும் அக்கறை காட்டாவிட்டால், அதன் விளைவாக சமுதாய சிக்கல்கள், பொருளாதார சிக்கல்கள் என்று பல பிரச்சனைகள் ஏற்படும். அத்தகைய வேதனைகளுக்காக நீங்கள் காத்திருக்க வேண்டியதுதான். இவ்வாறு இறைச் சட்டதிட்டங்களைப் புறக்கணித்து வேறு பாதையில் செல்பவர்களுக்கு அல்லாஹ் ஒருபோதும் நேர்வழி காட்டுவதிலலை.
9:25لَقَدۡ نَصَرَكُمُ ٱللَّهُ فِي مَوَاطِنَ كَثِيرَةٖ وَيَوۡمَ حُنَيۡنٍ إِذۡ أَعۡجَبَتۡكُمۡ كَثۡرَتُكُمۡ فَلَمۡ تُغۡنِ عَنكُمۡ شَيۡٔٗا وَضَاقَتۡ عَلَيۡكُمُ ٱلۡأَرۡضُ بِمَا رَحُبَتۡ ثُمَّ وَلَّيۡتُم مُّدۡبِرِينَ٢٥
9:25. மேற்சொன்ன வாழ்வாதார வசதிகள் மற்றும் உறவினர்களின் துணையின்றி எப்படி வாழ்வது என்ற கேள்வி உங்கள் மனதில் எழுகின்றது. இவை யாவும் அல்லாஹ்வின் ஏற்பாடுகளே ஆகும். அதே போல நீங்கள் பங்கெடுத்த பல போர்களிலும் அல்லாஹ்வின் ஏற்பாடுகள் உங்களுக்கு உதவி புரிந்தே இருக்கின்றன. ஒரு கட்டத்தில் ஹுனைன் போரின் போது, போர் வீரர்கள் அதிக எண்ணிக்கையில் கலந்துக் கொண்டிருப்பதை பார்த்து பெருமகிழ்ச்சி அடைந்தீர்கள். ஆனால் நீங்கள் வெற்றி பெற்றீர்களா? போரில் திரளான வீரர்கள் இருந்தும் நீங்கள் தோல்வியடைந்து பகைவர்களிடமிருந்து தப்பித்துக் கொள்ள புகலிடம் தேடி அலைந்தீர்கள். இப்படியாக விசாலமாக இருக்கும் இப்பூமியில் உங்களுக்கு இடம் கிடைக்காமல் போய்விட்டது. அதாவது நீங்கள் புறங்காட்டி பின்வாங்கலானீர்கள்.
9:26ثُمَّ أَنزَلَ ٱللَّهُ سَكِينَتَهُۥ عَلَىٰ رَسُولِهِۦ وَعَلَى ٱلۡمُؤۡمِنِينَ وَأَنزَلَ جُنُودٗا لَّمۡ تَرَوۡهَا وَعَذَّبَ ٱلَّذِينَ كَفَرُواْۚ وَذَٰلِكَ جَزَآءُ ٱلۡكَٰفِرِينَ٢٦
9:26. இவ்வாறிருந்தும் அல்லாஹ் தன் தூதர் மூலம், உங்கள் கண்களுக்குப் புலப்படாத படைகளைக் கொண்டு உங்களுக்குத் துணை புரிய இருப்பதாகவும் அதனால் உங்கள் பகைவர்கள் வேரோடு அழிக்கப்படுவார்கள் என்றும் செய்தியை அனுப்பியதை அடுத்து உங்கள் உள்ளம் அமைதியடைந்தது. (மேலும் பார்க்க - 8:10,9:40,3:126&41:30) இதனால் உங்களுள் உற்சாகமும் தைரியமும் ஏற்பட்டு அப்போரில் வெற்றி பெற்றீர்கள். மேலும் சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுவோருக்கு கிடைக்கின்ற வேதனையும் கடுமையானதாகும் என்பது உங்களுக்குத் தெளிவானது.
அதாவது குடும்பம், வியாபாரம், வீடு ஆகியவை மட்டுமே உங்களுடைய பாதுகாப்பான வாழ்விற்குத் துணை நிற்கும் என்பதல்ல. அல்லாஹ்வின் அறிவுரைகளும் அதன்படி உருவாகும் ஆட்சியமைப்பும் தான் உங்களுக்கு என்றென்றைக்கும் துணை நிற்கும் என்பதே இங்கு தெளிவாகிறது. அந்த ஆட்சியமைப்பைக் கட்டிக் காத்து அதன்படி செயல்பட்டால் சிக்கலான சமயங்களிலும் எதையும் சமாளிக்கும் தைரியமும் மனவலிமையும் உங்களுள் வளர்ந்து அதை எளிதாக தீர்த்து வைப்பீர்கள். இதுவே பொதுவாழ்வில் ஈடுபடுவதன் மூலம் கிடைக்கும் அனுபவங்களாகும். இதை விட்டுவிட்டு தன் வியாபாரம், தன் குடும்பம் மட்டும் போதுமானவை என்றும், பொதுவாழ்வு தேவையில்லாத ஒன்று என்று சுயநலத்துடன் இருந்தால் ஆபத்து மற்றும் பிரச்சனைகள் ஏற்படும்போது பாதுகாப்பு கிடைக்காது.
9:27ثُمَّ يَتُوبُ ٱللَّهُ مِنۢ بَعۡدِ ذَٰلِكَ عَلَىٰ مَن يَشَآءُۗ وَٱللَّهُ غَفُورٞ رَّحِيمٞ٢٧
9:27. எனவே ஒருமுறை தவறு செய்து விட்டால் அதற்கு மன்னிப்பே கிடையாது என்பதல்ல. தம் தவறை உணர்ந்து உடனே சரிசெய்துக் கொண்டால் அதன் பாதிப்பிலிருந்து மீள்வதற்கு வழிகள் பிறக்கும். இதுவே அல்லாஹ்வின் நிலையான சட்டமாகும். (பார்க்க 4:17)
9:28يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓاْ إِنَّمَا ٱلۡمُشۡرِكُونَ نَجَسٞ فَلَا يَقۡرَبُواْ ٱلۡمَسۡجِدَ ٱلۡحَرَامَ بَعۡدَ عَامِهِمۡ هَٰذَاۚ وَإِنۡ خِفۡتُمۡ عَيۡلَةٗ فَسَوۡفَ يُغۡنِيكُمُ ٱللَّهُ مِن فَضۡلِهِۦٓ إِن شَآءَۚ إِنَّ ٱللَّهَ عَلِيمٌ حَكِيمٞ٢٨
9:28. இறைவழிகாட்டுதலை மனதார ஏற்றுக்கொண்டவர்களே! எவ்வித கொள்கையும் இன்றி தம் மனோ இச்சைப்படி செயல்படும் மாசு படிந்த உள்ளம் கொண்ட முஷ்ரிக்குகளிடம், தலைமை செயலகத்தின் நிர்வாகப் பொறுப்பு நீடித்திருப்பது முறையாகாது. இந்த ஆண்டிலிருந்து நிர்வாக விஷயத்தில் தலையிடாதவாறு அவர்களை ஒதுக்கி விடுங்கள். ஏனெனில் அவர்களிடம் இருக்கும் எண்ணங்கள் சீர்கேட்டையே விளைவிக்கின்றன. அவர்களை உடனே அகற்றினால் அதனால் பொருளாதார சிக்கல் ஏற்படும் என்று நீங்கள் பயப்படுகிறீர்களா? அல்லாஹ்வின் செயல்திட்டப் படி மாற்று ஏற்பாடுகளை செய்தால் உங்களுக்கு வசதி வாய்ப்புகள் விரைவில் பெருகி வரும். ஆக எந்த செயல்களால் என்ன பாதிப்புகள் ஏற்படும். அதற்கு மாற்று ஏற்பாடுகள் என்ன என்பது போன்ற விஷயங்கள் அனைத்தும் அல்லாஹ்வுக்கு நன்கு தெரியும்.
9:29قَٰتِلُواْ ٱلَّذِينَ لَا يُؤۡمِنُونَ بِٱللَّهِ وَلَا بِٱلۡيَوۡمِ ٱلۡأٓخِرِ وَلَا يُحَرِّمُونَ مَا حَرَّمَ ٱللَّهُ وَرَسُولُهُۥ وَلَا يَدِينُونَ دِينَ ٱلۡحَقِّ مِنَ ٱلَّذِينَ أُوتُواْ ٱلۡكِتَٰبَ حَتَّىٰ يُعۡطُواْ ٱلۡجِزۡيَةَ عَن يَدٖ وَهُمۡ صَٰغِرُونَ٢٩
9:29. இந்த முஷ்ரிக்குகளை தவிர, மற்ற வேதமுடையவர்களும், அல்லாஹ்வின் வழிகாட்டுதலையும் “மனித செயல்களுக்கு ஏற்ற விளைவுகள்” என்ற ஆஃகிரத்தையும் ஏற்று அதன்படி செயல்படுவதில்லை. அல்லாஹ்வும் அதன் அடிப்படையில் உருவாகியுள்ள ஆட்சியமைப்பும் விதித்துள்ள வரம்புகளை மீறியும் செயல்படுகிறார்கள். மனிதனின் சிறப்பான வாழ்விற்கு மிகச் சரியான வழியைக் காட்டும் இம்மார்க்கத்தை அவர்கள் ஏற்று அதன்படி செயல்படுவதும் இல்லை. அவர்கள் இந்த ஆட்சியமைப்பு சட்டங்களுக்கு அடிபணிந்து செயல்படுவதோடு அரசு விதித்த வரிகளை செலுத்தி வந்தால், அவர்களுடைய உயிர்களுக்கும் உடைமைகளுக்கும் பாதுகாப்பு கிடைக்கும் அல்லவா? ஆனால் இதைப்பற்றி எல்லாம் அவர்கள் கவலைப்படுவதாக தெரியவில்லை. எனவே அவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுங்கள். தேவை ஏற்பட்டால் அவர்களை எதிர்த்து போரிடுங்கள்.
9:30وَقَالَتِ ٱلۡيَهُودُ عُزَيۡرٌ ٱبۡنُ ٱللَّهِ وَقَالَتِ ٱلنَّصَٰرَى ٱلۡمَسِيحُ ٱبۡنُ ٱللَّهِۖ ذَٰلِكَ قَوۡلُهُم بِأَفۡوَٰهِهِمۡۖ يُضَٰهُِٔونَ قَوۡلَ ٱلَّذِينَ كَفَرُواْ مِن قَبۡلُۚ قَٰتَلَهُمُ ٱللَّهُۖ أَنَّىٰ يُؤۡفَكُونَ٣٠
9:30. அங்கு வாழும் இஸ்ரவேலர்களை கவனியுங்கள். அவர்களுக்கு இறைவழிகாட்டுதல்கள் வந்த பின்பும் காலப் போக்கில் அவற்றை விட்டுவிட்டு அவர்கள் எகிப்து நாட்டின் அரசனாக இருந்த உஜைர் (Osiris) என்பவரை அல்லாஹ்வின் மகனாகப் பாவித்து வணங்க ஆரம்பித்தார்கள். மேலும் கிறிஸ்தவர்களைப் பார்த்தால் இறைவழிகாட்டுதலை எடுத்துரைத்து சீர்திருத்தங்களைச் செய்த ஈஸா நபியை அல்லாஹ்வின் மகனாக கருதி அவரை வணங்கி வருகிறார்கள். இவை எல்லாம் அவர்களாகவே உருவாக்கிக் கொண்ட கற்பனைக் கதைகளே ஆகும். இவர்களுக்கு முன் வாழ்ந்த சமுதாயங்களும் இப்படிப்பட்ட கற்பனைக் கதைகளை ஏற்படுத்திக் கொண்டு வணங்கி வந்தனர். அவர்களைப் போன்றே இவர்களும் வணங்குகிறார்கள்.இத்தகையவர்களுக்கு அல்லாஹ்வின் நியதிப்படி அழிவு தான் ஏற்படும். ஏனெனில் அவர்கள் நேர்வழியை விட்டு திசை மாறிச் சென்று விட்டவர்கள்.
9:31ٱتَّخَذُوٓاْ أَحۡبَارَهُمۡ وَرُهۡبَٰنَهُمۡ أَرۡبَابٗا مِّن دُونِ ٱللَّهِ وَٱلۡمَسِيحَ ٱبۡنَ مَرۡيَمَ وَمَآ أُمِرُوٓاْ إِلَّا لِيَعۡبُدُوٓاْ إِلَٰهٗا وَٰحِدٗاۖ لَّآ إِلَٰهَ إِلَّا هُوَۚ سُبۡحَٰنَهُۥ عَمَّا يُشۡرِكُونَ٣١
9:31. அவர்கள் அல்லாஹ்வின் வழிகாட்டுதலை விட்டுவிட்டு, அவர்களுடைய பாதிரியார்களையும் சாமியார்களையும் தெய்வங்களாக ஆக்கிக் கொள்கின்றனர். அதுமட்டுமின்றி மர்யமுடைய குமாரர் ஈஸா நபியையும் கடவுளாக கருதி அவர் பெயரில் அவர்களே உருவாக்கிக் கொண்ட வழி முறைகளையும் பின்பற்றி வருகின்றனர். உண்மை விஷயம் யாதெனில் அவர் அல்லாஹ்வின் விழிகாட்டுதலைத் தவிர வேறு எந்த வழிமுறையையும் கடைப்பிடிக்க மக்களுக்கு அறிவுறுத்தியதே இல்லை. அவர் இப்படிப்பட்ட ஆதாரமற்ற விஷயங்களுக் கெல்லாம் அப்பாற்பட்டவர் ஆவார். இருந்தும் ஈஸா நபியின் பெயரைப் பயன்படுத்தி கிறிஸ்தவ மதகுரு மார்கள் அல்லாஹ்வின் வழிகாட்டுதல்களுக்கு இணையாக வேறு வழிமுறைகளைப் போதித்து வருகிறார்கள்.
9:32يُرِيدُونَ أَن يُطۡفُِٔواْ نُورَ ٱللَّهِ بِأَفۡوَٰهِهِمۡ وَيَأۡبَى ٱللَّهُ إِلَّآ أَن يُتِمَّ نُورَهُۥ وَلَوۡ كَرِهَ ٱلۡكَٰفِرُونَ٣٢
9:32. இப்படிப்பட்ட கற்பனைக் கதைகளை மக்களிடம் எடுத்துரைத்து மனிதனின் ஒளிமயமான வாழ்விற்கு மிகச் சிறந்த வழிகாட்டுதலாகத் திகழும் அல்லாஹ்வின் வழிகாட்டுதலை, மக்களை விட்டு மூடி மறைத்து விடலாம் என்று விரும்புகிறார்கள். (மேலும் பார்க்க 61:8) ஆனால் அவர்கள் எவ்வளவு தான் வெறுத்தாலும், அல்லாஹ்வின் இந்த ஒளிமயமான வழிகாட்டுதல்களின்படி சிறந்த உலகம் காலப்போக்கில் உருவாகியே தீரும்.
9:33هُوَ ٱلَّذِيٓ أَرۡسَلَ رَسُولَهُۥ بِٱلۡهُدَىٰ وَدِينِ ٱلۡحَقِّ لِيُظۡهِرَهُۥ عَلَى ٱلدِّينِ كُلِّهِۦ وَلَوۡ كَرِهَ ٱلۡمُشۡرِكُونَ٣٣
9:33. இத்திட்டத்தை நிறைவேற்ற இறைத்தூதரை அல்லாஹ்தான் அனுப்பி வைத்தான். இறை வழிகாட்டுதல்கள் மனிதனின் சிறப்பான வாழ்விற்கு மிகச் சரியான பாதையைக் காட்டுவதாக உள்ளன. இறைவழிகாட்டுதலை ஏற்க மறுக்கும் முஷ்ரிக்குகளுக்கு இது வெறுப்பாக இருப்பினும், உலக மக்கள் கடைப்பிடித்து வரும் எல்லா வழிமுறைகளையும் விட இந்த மார்க்கமே தலைசிறந்த மார்க்கம் என காலப்போக்கில் நிரூபணம் ஆகியே தீரும்.
9:34۞يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓاْ إِنَّ كَثِيرٗا مِّنَ ٱلۡأَحۡبَارِ وَٱلرُّهۡبَانِ لَيَأۡكُلُونَ أَمۡوَٰلَ ٱلنَّاسِ بِٱلۡبَٰطِلِ وَيَصُدُّونَ عَن سَبِيلِ ٱللَّهِۗ وَٱلَّذِينَ يَكۡنِزُونَ ٱلذَّهَبَ وَٱلۡفِضَّةَ وَلَا يُنفِقُونَهَا فِي سَبِيلِ ٱللَّهِ فَبَشِّرۡهُم بِعَذَابٍ أَلِيمٖ٣٤
9:34. இறைவழிகாட்டுதலை மனதார ஏற்றுக்கொண்டவர்களே! மத குருமார்கள் மற்றும் உலக வாழ்வை விட்டு விலகி வாழும் துறவிகளில் பெரும்பாலோர் தவறான முறையில் சொத்து செல்வங்களை ஈட்டிக் கொள்வதிலேயே கண்ணும் கருத்துமாக இருக்கிறார்கள். இன்னும் எவர்கள் பொன்னையும், வெள்ளியையும் சேமித்து வைத்துக் கொண்டு அவற்றை அல்லாஹ்வின் பாதையில் செலவிடாமலும் அல்லாஹ்வின் வழிகாட்டுதலின் பக்கம் மக்கள் வராதவாறு தடுத்தும் வருகிறார்கள். நபியே! யார் இவ்வாறு செல்வங்களை குவித்துக் கொள்கிறார்களோ அவர்கள் கடுமையான வேதனைக்கு ஆளாவார்கள் என்று எச்சரிக்கை செய்துவிடுவீராக.
ஏனெனில் தனியார் சொத்துக் குவிப்பு என்பது அல்லாஹ்வின் ஆட்சியமைப்பு சட்டத்திற்கு எதிரானதாகும். மேலும் அல்லாஹ்வின் பாதையில் ஆட்சி நிலைபெறும் கால கட்டத்தில் மதகுருமார்களும் துறவிகளும் செய்யும் தவறான போதனைகளுக்கு தடை செய்யப்படும். ஜமாஅத் கூட்டமைப்பும் இத்தகைய சமூக விரோதிகளை கட்டுப்படுத்தி தடுத்து வைக்கலாம்.
9:35يَوۡمَ يُحۡمَىٰ عَلَيۡهَا فِي نَارِ جَهَنَّمَ فَتُكۡوَىٰ بِهَا جِبَاهُهُمۡ وَجُنُوبُهُمۡ وَظُهُورُهُمۡۖ هَٰذَا مَا كَنَزۡتُمۡ لِأَنفُسِكُمۡ فَذُوقُواْ مَا كُنتُمۡ تَكۡنِزُونَ٣٥
9:35. இறையாட்சி நடைபெறும் காலக்கட்டத்தில் சமூக விரோத செயலில் ஈடுபடும் இத்தகையவர்கள், அதிக பட்சமாக கொழுந்துவிட்டு எரியும் நரக வேதனைகளை ருசிக்க நேரிடும். (பார்க்க 104:6-9) அவர்களின் நெற்றிகளிலும் விலாப்புறங்களிலும் முதுகளிலும் சூடு போடப்படும். இவைதான் நீங்கள் சேமித்து வைத்தவை. எனவே அவற்றை நீங்கள் சுவையுங்கள் என்று அவர்களிடம் கூறப்படும். அல்லாஹ்வின் சட்டப்படி உள்ள இத்தண்டனை மரணத்திற்குப் பின் தொடர்கின்ற வாழ்விலும் தரப்படும்.
9:36إِنَّ عِدَّةَ ٱلشُّهُورِ عِندَ ٱللَّهِ ٱثۡنَا عَشَرَ شَهۡرٗا فِي كِتَٰبِ ٱللَّهِ يَوۡمَ خَلَقَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضَ مِنۡهَآ أَرۡبَعَةٌ حُرُمٞۚ ذَٰلِكَ ٱلدِّينُ ٱلۡقَيِّمُۚ فَلَا تَظۡلِمُواْ فِيهِنَّ أَنفُسَكُمۡۚ
9:36. ஒரு வருடத்திற்கு பன்னிரண்டு மாதங்கள் என்பது பிரபஞ்சங்கள் மற்றும் பூமி படைக்கப்பட்டதற்கு முன்னதாகவே அல்லாஹ் எடுத்த முடிவாகும். மேலும் அதில் நான்கு மாதங்கள் போரிட தடை உத்தரவு பிறப்பித்ததும் அல்லாஹ்தான். போர் சம்பந்தப்பட்ட விஷயத்தில் இதுவே நிலையாக ஏற்படுத்தப்பட்ட விதிமுறையாகும். எனவே போர் நிறுத்த ஒப்பந்தம் செய்த மாதங்களில் போரிடுவது மிகப் பெரிய குற்றமாகும். நீங்கள் அத்துமீறி நடந்து அநியாயம் செய்யாதீர்கள்.
وَقَٰتِلُواْ ٱلۡمُشۡرِكِينَ كَآفَّةٗ كَمَا يُقَٰتِلُونَكُمۡ كَآفَّةٗۚ وَٱعۡلَمُوٓاْ أَنَّ ٱللَّهَ مَعَ ٱلۡمُتَّقِينَ٣٦
மற்றபடி போரின் சமயம், முஷ்ரிக்குகள் எவ்வாறு முழு வேகத்துடன் உங்களுடன் போரிடுகிறார்களோ, நீங்களும் அவ்வாறே அவர்களுக்கு எதிராக முழு பலத்துடன் போரிடலாம். அதில் குற்றமில்லை. தர்மத்தை நிலைநாட்ட நியாயத்திற்காகப் போரிடும் இலட்சியவான்களின் பக்கமே அல்லாஹ்வின் ஆதரவு இருக்கும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
ஏற்கனவே 2:190இல் சொல்லப்பட்டது போல போர் என்பது வருடம் முழுவதும் காலம் காலமாக நடைபெறுகின்ற ஒன்றல்ல. அதற்கும் வரையறைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. உலகில் அமைதியை நிலைநாட்ட அக்கிரமங்களுக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கையே போர் என்பதாகும் (பார்க்க 22:39). மேலும் அது அண்டை நாடுடன் போரிட நிர்ப்பந்தம் ஏற்பட்டாலும், அதிக பட்சமாக வருடத்தில் 8 மாதங்கள் வரையில் தொடர்ந்து போரிட அனுமதி உண்டு. மற்ற நான்கு மாதங்கள் போரிட தடை செய்யப்படுகிறது.
இந்தப் போர் வரையறைகளை ஐக்கிய நாட்டு சபை கூடி முடிவெடுக்க
வேண்டிய ஒன்றாகும். ஏனெனில் நாட்டிலுள்ள விவசாயம், நெசவு, வணிகம் ஆகியவை பெரும் அளவில் பாதிக்காதவாறு போர் நடத்தப்பட வேண்டும் என்பதே இறைவனின் நாட்டமாகும்.
மேலும் சூரியனைச் சுற்றி வரும் நவக்கிரகங்களும் நிர்ணயிக்கப்பட்ட கால கட்டங்களின்படி மிகத் துல்லியமாக செயல்படுகின்றன. அதில் சிறிதளவும் மாற்றம் ஏற்படுவதில்லை. அதன்படி ஒரு முறை சூரியனை இந்த பூமி சுற்றி வர எடுத்துக் கொள்ளும் கால அளவு 365 நாட்களும் 6 மணி நேரமும் ஆகும். இது பன்னிரண்டு மாதங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
9:37إِنَّمَا ٱلنَّسِيٓءُ زِيَادَةٞ فِي ٱلۡكُفۡرِۖ يُضَلُّ بِهِ ٱلَّذِينَ كَفَرُواْ يُحِلُّونَهُۥ عَامٗا وَيُحَرِّمُونَهُۥ
9:37. போர் தடை செய்யப்பட்ட மாதங்கள் விஷயத்தில் அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக ஆக்கிக் கொள்கின்றனர். இதுவும் ஒருவகையில் அத்து மீறலே ஆகும். இதனால் வழிதவறிச் செல்ல வாய்ப்புகள் உருவாகி விடுகின்றன. ஏனெனில் ஒரு குறிப்பிட்ட மாதத்தில் போரிட அனுமதி உண்டு என்று அவர்களாகவே தன்னிச்சையாக முடிவெடுத்துக் கொள்கின்றனர். அதேபோல ஒரு குறிப்பிட்ட வருடத்தில் போரிட தடை உள்ளதாகவும் கூறி விடுகிறார்கள்.
عَامٗا لِّيُوَاطُِٔواْ عِدَّةَ مَا حَرَّمَ ٱللَّهُ فَيُحِلُّواْ مَا حَرَّمَ ٱللَّهُۚ زُيِّنَ لَهُمۡ سُوٓءُ أَعۡمَٰلِهِمۡۗ وَٱللَّهُ لَا يَهۡدِي ٱلۡقَوۡمَ ٱلۡكَٰفِرِينَ٣٧
இப்படியாக அல்லாஹ் நிர்ணயித்த நான்கு மாதத் தடை உத்தரவை தம் விருப்பம் போல் மாற்றி அமைத்துக் கொள்கின்றனர். இவ்வாறு செய்வது புத்திசாலித்தனம் என்றும் நினைத்துக் கொள்கின்றனர். இது அவர்களுக்கு அழகாகவும் தோன்றுகிறது. ஆக அல்லாஹ்வின் வழிகாட்டுதலை ஏற்க மறுக்கும் கூட்டத்தாருக்கு அல்லாஹ்வின் நேர்வழி ஒருபோதும் கிடைக்காது என்ற உண்மை அவர்களுக்கு தெரியாது.
9:38يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ مَا لَكُمۡ إِذَا قِيلَ لَكُمُ ٱنفِرُواْ فِي سَبِيلِ ٱللَّهِ ٱثَّاقَلۡتُمۡ إِلَى ٱلۡأَرۡضِۚ أَرَضِيتُم بِٱلۡحَيَوٰةِ ٱلدُّنۡيَا مِنَ ٱلۡأٓخِرَةِۚ فَمَا مَتَٰعُ ٱلۡحَيَوٰةِ ٱلدُّنۡيَا فِي ٱلۡأٓخِرَةِ إِلَّا قَلِيلٌ٣٨
9:38. இறைவழிகாட்டுதலை மனதார ஏற்றுக்கொண்டவர்களே! தர்மத்தை நிலை நாட்டி, நாட்டில் நியாயமான ஆட்சி மலர, அல்லாஹ்வின் பாதையில் பணிபுரிவதற்காக ஏற்படுத்திய பயிற்சி முகாம்களுக்குப் புறப்படுங்கள் என்று அழைப்பு வந்தால், அது உங்களுக்கு பெரும் சுமையாகத் தெரிகிறது. உங்கள் வசிப்பிடத்தை விட்டு வெளியே வர உங்கள் மனம் ஏற்கவில்லை. உங்களுக்கு என்ன நேர்ந்து விட்டது. வருங்கால நிலையான, நிம்மதியான, சந்தோஷமான வாழ்வு பெறுவதைவிட, தற்காலிக சுகமான வாழ்வை நீங்கள் விரும்புகிறீர்களா? அல்லாஹ்வின் அறிவுரைப்படி உருவாகும் சிறந்த ஆட்சிமுறையால் உங்களுக்கு கிடைக்கும் நிலையான சந்தோஷமான வாழ்க்கையை வைத்துப் பார்க்கும்போது, தற்காலிக சொகுசு வாழ்வு அற்பமானதுதான் என்பதை தெரிந்துக் கொள்ளுங்கள்.
9:39إِلَّا تَنفِرُواْ يُعَذِّبۡكُمۡ عَذَابًا أَلِيمٗا وَيَسۡتَبۡدِلۡ قَوۡمًا غَيۡرَكُمۡ وَلَا تَضُرُّوهُ شَيۡٔٗاۗ وَٱللَّهُ عَلَىٰ كُلِّ شَيۡءٖ قَدِيرٌ٣٩
9:39. இத்தகைய சிறந்ததொரு ஆட்சி மலர நீங்கள் துணை புரியவில்லை என்றால், அதனால் ஏற்படும் பாதிப்புகள் என்ன என்பதை நீங்கள் அறிந்துக் கொள்ளுங்கள். அல்லாஹ்வின் நியதிப்படி உங்கள் எதிரணிகளால் நீங்கள் பல இன்னல்களுக்கும் துன்பங்களுக்கும் ஆளாவீர்கள். மேலும் இறைவனின் செயல் திட்டங்கள் நிறைவேற உங்களுக்குப் பதிலாக வேறு சமுதாயம் உருவெடுக்கும். அதை யாராலும் தடுத்து நிறுத்திவிட முடியாது. ஏனெனில் அல்லாஹ்வின் செயல்திட்டம் அனைத்து விஷயங்களிலும் பேராற்றல் உடையவை என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
9:40إِلَّا تَنصُرُوهُ فَقَدۡ نَصَرَهُ ٱللَّهُ إِذۡ أَخۡرَجَهُ ٱلَّذِينَ كَفَرُواْ ثَانِيَ ٱثۡنَيۡنِ إِذۡ هُمَا فِي ٱلۡغَارِ إِذۡ يَقُولُ لِصَٰحِبِهِۦ لَا تَحۡزَنۡ إِنَّ ٱللَّهَ مَعَنَاۖ فَأَنزَلَ ٱللَّهُ سَكِينَتَهُۥ عَلَيۡهِ
9:40. உங்கள் சமுதாயத்தை வழிநடத்திச் செல்லும் இறைத் தூதருக்கு நீங்கள் துணை நிற்கவில்லை என்றால், அல்லாஹ்வின் புறத்திலிருந்து வேறு ஏற்பாடுகள் செய்து தரப்படும். ஒரு கட்டத்தில் அவர் தம் ஊரை விட்டு ஹிஜ்ரத் செய்து வெளியேறிய போது, அவருக்கு அல்லாஹ்வின் உதவி கிடைத்தே இருக்கிறது. அவருடன் இருந்த தோழருடன் குகைக்குள் சென்று ஓய்வு எடுத்துக் கொண்டிருந்த போது, பகைவர்கள் பின்தொடர்ந்து வந்தார்கள். அப்போது அவர் தன் தோழரிடம், “கவலைப்படாதீர். நிச்சயமாக அல்லாஹ்வின் உதவி நமக்கு உண்டு” என்று தைரியமூட்டினார். இப்படியாக அவர்களுக்கு மனஅமைதியும் தைரியமும் கிடைத்தன.
وَأَيَّدَهُۥ بِجُنُودٖ لَّمۡ تَرَوۡهَا وَجَعَلَ كَلِمَةَ ٱلَّذِينَ كَفَرُواْ ٱلسُّفۡلَىٰۗ وَكَلِمَةُ ٱللَّهِ هِيَ ٱلۡعُلۡيَاۗ وَٱللَّهُ عَزِيزٌ حَكِيمٌ٤٠
அவர்கள் பார்திராத படைகளை அனுப்பி அவருக்கு உதவி புரிந்தோம்* (பார்க்க 9:26) இப்படியாக பகைவர்களுக்கு தோல்வி ஏற்பட்டது. நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்கு எப்போதும் மேலோங்கி நிற்கும் என்பதையும் அவனுடைய வழிகாட்டுதல்கள் ஞானத்தின் அடிப்படையைக் கொண்டவை என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.
நபியின் பாதுகாப்பான பயணத்திற்காக ஸஹாபா பெருமக்கள் செய்த முன்னேற்பாடுகள் ஆகும். அதாவது அவர் தங்கி இருக்கும் சமயம் பகைவர்கள் தாக்கினால் அவர்களை முறியடிக்க சேனைகளை ஆயத்தப் படுத்தி இருந்தார்கள்.
9:41ٱنفِرُواْ خِفَافٗا وَثِقَالٗا وَجَٰهِدُواْ بِأَمۡوَٰلِكُمۡ وَأَنفُسِكُمۡ فِي سَبِيلِ ٱللَّهِۚ ذَٰلِكُمۡ خَيۡرٞ لَّكُمۡ إِن كُنتُمۡ تَعۡلَمُونَ٤١
9:41. இஸ்லாமிய செயல்வீரர்களே! நீங்கள் ஏழையோ, செல்வந்தரோ, வசதி படைத்தவரோ, வசதியற்றவரோ, யாராக இருந்தாலும் சரி, அல்லாஹ்வின் சிறப்பான ஆட்சி மலர உங்களிடம் இருக்கும் உபரிச் செல்வங்களை அளித்து (2:219) தம்மை அர்ப்பணித்துக் கொள்ள முன்வாருங்கள். அதனால் ஏற்படும் நன்மைகளைப் பற்றி நீங்கள் அறிந்தால் நீங்கள் விரைந்து செயல்படுவீர்கள்.
அதாவது பொது வாழ்வில் ஈடுபடுவதற்கு முன் அதைப் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ளவேண்டும். மேலும் பொது மக்களிடம் எவ்வாறு அணுக வேண்டும். அவர்களுக்குப் பிரச்சனைகள் ஏற்பட்டால் எவ்வாறு தீர்த்து வைக்க வேண்டும். இவை எல்லாம் வீட்டில் இருந்த படியே தெரிந்துக் கொள்ள வாய்ப்பில்லை. அதற்காக சிறப்பு பயிற்சி முகாம்களை ஏற்படுத்தி அங்கு இப்படிப்பட்ட விஷயங்களைப் பற்றி கற்றுத் தருவார்கள். மேலும் உடல் ரீதியான குறைகளைப் போக்க சில உடற் பயிற்சிகளையும் மறுவாழ்வு திட்டங்களையும் கற்றுத் தருவார்கள். அப்போதுதான் மன வலிமையுடன் உடல் வலிமையும் கூடி வரும். சிறப்பாகச் செயலாற்றவும் முடியும்.
9:42لَوۡ كَانَ عَرَضٗا قَرِيبٗا وَسَفَرٗا قَاصِدٗا لَّٱتَّبَعُوكَ وَلَٰكِنۢ بَعُدَتۡ عَلَيۡهِمُ ٱلشُّقَّةُۚ وَسَيَحۡلِفُونَ بِٱللَّهِ لَوِ ٱسۡتَطَعۡنَا لَخَرَجۡنَا مَعَكُمۡ يُهۡلِكُونَ أَنفُسَهُمۡ وَٱللَّهُ يَعۡلَمُ إِنَّهُمۡ لَكَٰذِبُونَ٤٢
9:42. ஆனால் இந்த விஷயத்தில் மனச் சஞ்சலத்தில் இருப்பவர்கள், ஏதாவது சாக்குப் போக்கு சொல்கிறார்கள். பயண தூரம் அதிகமாக இருப்பதாகக் காரணம் காட்டுகிறார்கள். மேலும் பொதுப் பணியில் தமக்கும் ஏதாவது ஆதாயம் இருந்தால் சிறப்பாக இருக்குமே என்றும் எண்ணுகிறார்கள். இப்படிப்பட்ட ஆதாயங்கள் இருந்தால் அவர்கள் உம்முடன் புறப்பட்டு இருப்பார்கள். நீண்ட தூர பயணத்தை மேற்கொள்ள எங்களுக்கு சக்தி இருந்தால், நாங்களும் புறப்பட்டு இருப்போம் என்கிறார்கள். இப்படி அவர்கள் சாக்குப் போக்குகளைச் சொல்லி தம் அழிவைத் தாமே தேடிக் கொள்கிறார்கள். அவர்கள் பொய்யர்கள் என்பது அல்லாஹ்வுக்குத் தெரியாதா?
9:43عَفَا ٱللَّهُ عَنكَ لِمَ أَذِنتَ لَهُمۡ حَتَّىٰ يَتَبَيَّنَ لَكَ ٱلَّذِينَ صَدَقُواْ وَتَعۡلَمَ ٱلۡكَٰذِبِينَ٤٣
9:43. ஆனால் அவர்களில் உண்மையாளர் யார்? பொய்யர்கள் யார்? என்று தீர விசாரிக்காமல் அவர்களின் உண்மை நிலையை அறிவதற்கு முன்னமே, நீர் ஏன் அவர்களை வீட்டிலேயே தங்கிக்கொள்ள அனுமதி அளித்தீர்? அவர்களை நீர் அப்படியே நம்பிவிட்டது தான் அதற்குக் காரணமாகும். இது தவறாகும். ஆனால் இனி அப்படி நடக்காதவாறு பார்த்துக் கொள்வீராக.
9:44لَا يَسۡتَٔۡذِنُكَ ٱلَّذِينَ يُؤۡمِنُونَ بِٱللَّهِ وَٱلۡيَوۡمِ ٱلۡأٓخِرِ أَن يُجَٰهِدُواْ بِأَمۡوَٰلِهِمۡ وَأَنفُسِهِمۡۗ وَٱللَّهُ عَلِيمُۢ بِٱلۡمُتَّقِينَ٤٤
9:44. அல்லாஹ்வின் வழிகாட்டுதலையும் “மனித செயல்களுக்கு ஏற்ற இறுதி விளைவுகள்” என்ற ஆஃகிரத்தையும் ஏற்றுக்கொண்டவர்கள், இத்தகைய சாக்கு போக்குகளை சொல்லி பயிற்சி முகாமுக்கு செல்வதிலிருந்து விலகியிருக்க மாட்டார்கள். அல்லாஹ்வின் வழிகாட்டுதலின்படி சிறந்ததொரு ஆட்சி மலர சமூக சீரமைப்புப் பணியில் ஈடுபட கட்டளை வந்ததும், தம் உயிரை பணயம் வைத்து தம்மிடமுள்ள உபரிச் செல்வங்களை அர்ப்பணிக்க உடனே ஆயத்தமாகி விடுவார் கள். அல்லாஹ்வின் செயல் திட்டங்களை நிறைவேற்றும் லட்சியவான்கள் யார் என்ற உண்மை அல்லாஹ்வுக்கு நன்கு தெரியும்.
9:45إِنَّمَا يَسۡتَٔۡذِنُكَ ٱلَّذِينَ لَا يُؤۡمِنُونَ بِٱللَّهِ وَٱلۡيَوۡمِ ٱلۡأٓخِرِ وَٱرۡتَابَتۡ قُلُوبُهُمۡ فَهُمۡ فِي رَيۡبِهِمۡ يَتَرَدَّدُونَ٤٥
9:45. அல்லாஹ்வின் வழிகாட்டுதலையும், “மனித செயலுக்கேற்ற இறுதி விளைவுகள்” என்ற ஆஃகிரத்தையும் ஏற்றுக் கொள்ளாதவர்கள் தான் சமூக சீரமைப்பு பணியிலிருந்து விலகிக்கொள்ள உம்மிடம் அனுமதி கேட்பார்கள். அவர்கள் இன்னமும் மனச் சஞ்சலத்தில் தான் இருக்கிறார்கள். எதைப் பற்றியும் தீர்க்கமாக முடிவெடுக்காமல் தம் மனதை அலைய விடுகின்றனர்.
9:46۞وَلَوۡ أَرَادُواْ ٱلۡخُرُوجَ لَأَعَدُّواْ لَهُۥ عُدَّةٗ وَلَٰكِن كَرِهَ ٱللَّهُ ٱنۢبِعَاثَهُمۡ فَثَبَّطَهُمۡ وَقِيلَ ٱقۡعُدُواْ مَعَ ٱلۡقَٰعِدِينَ٤٦
9:46. அவர்கள் உண்மையிலேயே பொது வாழ்வில் தம்மை அர்ப்பணித்துக் கொள்ள நாடியிருந்தால், அவர்கள் அதற்கு வேண்டிய ஆயத்தப் பணிகளை செய்து இருப்பார்கள். ஆனால் அவர்கள் மனம் அதற்கு ஒப்பவில்லை. எனவேதான் அல்லாஹ்வின் நியதிப்படி அவர்கள் வீட்டைவிட்டு புறப்பட விரும்பாதவாறு ஆகிவிட்டது. எனவே அவர்களை கோழைகளாக வீட்டிலேயே தங்கிக்கொள்ளும் படி கூறப்பட்டது.
9:47لَوۡ خَرَجُواْ فِيكُم مَّا زَادُوكُمۡ إِلَّا خَبَالٗا وَلَأَوۡضَعُواْ خِلَٰلَكُمۡ يَبۡغُونَكُمُ ٱلۡفِتۡنَةَ وَفِيكُمۡ سَمَّٰعُونَ لَهُمۡۗ وَٱللَّهُ عَلِيمُۢ بِٱلظَّٰلِمِينَ٤٧
9:47. அதையும் மீறி அவர்கள் உங்களோடு புறப்பட்டு இருந்தால், வெறும் குழப்பங்களைத் தவிர வேறெதையும் அதிகப்படுத்தி இருக்க மாட்டார்கள். மேலும் இத்தகையவர்கள் உங்களிடையே கோள்மூட்டி பகைமையை உருவாக்கவே முயன்றிருப்பார்கள். இப்படியாக உங்களிடையே குழப்பங்கள் நிலவி வருவதையே அவர்கள் விரும்பி இருப்பார்கள். அவர்களின் பேச்சை கேட்பவர்கள் உங்களில் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆக அநியாயக் காரர்களை அடையாளங் கண்டுக்கொள்வதில் அல்லாஹ்வுக்கு என்ன சிரமம் இருக்கப் போகிறது?
9:48لَقَدِ ٱبۡتَغَوُاْ ٱلۡفِتۡنَةَ مِن قَبۡلُ وَقَلَّبُواْ لَكَ ٱلۡأُمُورَ حَتَّىٰ جَآءَ ٱلۡحَقُّ وَظَهَرَ أَمۡرُ ٱللَّهِ وَهُمۡ كَٰرِهُونَ٤٨
9:48. உண்மை விஷயம் என்னவென்றால் இதற்கு முன்னரும் இத்தகையவர்கள் குழப்பத்தையே செய்திருக்கிறார்கள். உமது செயல் திட்டங்கள் நிறைவேறாதவாறு தடுத்தும் வந்துள்ளார்கள். இருந்தும் இறுதியில் வாய்மையே வென்றது. அனைவரின் வெறுப்புக்கும் அவர்கள் ஆளாகிவிட்டனர். அல்லாஹ்வின் செயல்திட்டங்கள் யாவும் முறைப்படி நிறைவேறி இந்த மார்க்கமே மேலோங்கி வந்தது.
9:49وَمِنۡهُم مَّن يَقُولُ ٱئۡذَن لِّي وَلَا تَفۡتِنِّيٓۚ أَلَا فِي ٱلۡفِتۡنَةِ سَقَطُواْۗ وَإِنَّ جَهَنَّمَ لَمُحِيطَةُۢ بِٱلۡكَٰفِرِينَ٤٩
9:49. “என்னை வீட்டிலேயே தங்கிவிட அனுமதி அளியுங்கள். என் வாழ்வை பிரச்சனைக்குள் ஆக்காதீர்கள்” என்று உம்மிடம் வந்து மண்டியிட்டு கெஞ்சியவர்களும் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் ஏற்கனவே பல பிரச்சனைகளில் மூழ்கித் தவிப்பவர்கள் தாம். இதை அவர்கள் உணராமல் நரகத்தின் விழிம்புகளிலேயே சிக்கிக் கிடக்கிறார்கள்.
9:50إِن تُصِبۡكَ حَسَنَةٞ تَسُؤۡهُمۡۖ وَإِن تُصِبۡكَ مُصِيبَةٞ يَقُولُواْ قَدۡ أَخَذۡنَآ أَمۡرَنَا مِن قَبۡلُ وَيَتَوَلَّواْ وَّهُمۡ فَرِحُونَ٥٠
9:50. எனவேதான் சமூக சீரமைப்புப் பணியின் மூலம் உங்களுக்கு நன்மைகள் கிடைத்தால் அவர்களுக்கு மன வேதனை ஏற்படுகிறது. உங்களுக்கு சிக்கல்கள் ஏற்பட்டால் அவர்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுகிறது. “இப்படி எல்லாம் நடக்கும் என்று எங்களுக்கு ஏற்கனவே தெரியும். எனவே தான் இந்த விஷயத்தில் முன் எச்சரிக்கையாக இருந்து கொண்டோம்” என்று கூறி பெருமகிழ்ச்சியுடன் சென்று விடுகிறார்கள்.
9:51قُل لَّن يُصِيبَنَآ إِلَّا مَا كَتَبَ ٱللَّهُ لَنَا هُوَ مَوۡلَىٰنَاۚ وَعَلَى ٱللَّهِ فَلۡيَتَوَكَّلِ ٱلۡمُؤۡمِنُونَ٥١
9:51. ஆனால் பிரச்சனைகளும் துயரங்களும் ஏற்படுவது, அல்லாஹ் ஏற்கனவே நிர்ணயித்த சட்ட விதிமுறைகளின் படி அவரவர் செய்யும் தவறான செயல்களால் தான் என்பதை அவர்களுக்கு விளக்கிவிடுங்கள். மேலும் அவற்றைச் சரி செய்து கொள்ள அல்லாஹ்வின் வழிகாட்டுதலே நமக்கு துணை நிற்கும். மூஃமின்கள் யாவரும் இறைவழிகாட்டுதல் மீது முழு நம்பிக்கை வைத்து செயல்படுவார்கள் என்பதையும் அவர்களுக்கு எடுத்துரையுங்கள்.
9:52قُلۡ هَلۡ تَرَبَّصُونَ بِنَآ إِلَّآ إِحۡدَى ٱلۡحُسۡنَيَيۡنِۖ وَنَحۡنُ نَتَرَبَّصُ بِكُمۡ أَن يُصِيبَكُمُ ٱللَّهُ بِعَذَابٖ مِّنۡ عِندِهِۦٓ أَوۡ بِأَيۡدِينَاۖ فَتَرَبَّصُوٓاْ إِنَّا مَعَكُم مُّتَرَبِّصُونَ٥٢
9:52. நாம் எடுத்துக்கொண்ட பணியில் வெற்றி தோல்வி ஏற்படுவது இயல்பானதே ஆகும். இதைத் தவிர வேறு எதை உங்களால் எதிர்பார்க முடியும்? ஆனால் அதில் எது ஏற்பட்டாலும் நமக்கு நன்மையானதே. ஒருவேளை உயிரே போனாலும் உயர் லட்சியத்திற்காக உயிர் கொடுத்தோம் என்ற பெருமை நமக்கு உண்டு. மேலும் உங்கள் விஷயத்தில் அல்லாஹ்வின் விதிமுறைப் படியோ அல்லது எங்கள் கரங்களாலோ வேதனை ஏற்பட வேண்டும் என்று நாங்களும் எதிர் பார்க்கிறோம். ஆகவே உங்கள் எண்ணங்களின் படி நீங்கள் எதிர்பாருங்கள். நாங்களும் எங்கள் திட்டப்படி எதிர் பார்க்கிறோம். இறுதியில் என்ன ஏற்படப் போகிறது என்பதைப் பார்த்துக் கொள்ளலாம். இதை அவர்களுக்கு விளக்கிச் சொல்லிவிடுங்கள்.
9:53قُلۡ أَنفِقُواْ طَوۡعًا أَوۡ كَرۡهٗا لَّن يُتَقَبَّلَ مِنكُمۡ إِنَّكُمۡ كُنتُمۡ قَوۡمٗا فَٰسِقِينَ٥٣
9:53. அது மட்டுமின்றி அவர்கள் வேண்டா வெறுப்பாக சிறிதளவு பண உதவி செய்து, ராணுவ பயிற்சி முகாம்களுக்கு வராமல் தப்பித்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில் இருக்கிறார்கள். அவர்களிடமிருந்து எந்த உதவித் தொகையும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என்று திட்டவட்டமாக அறிவித்து விடுங்கள். ஏனெனில் அவர்கள் நேர்வழியை விட்டு வெகு தூரம் விலகிச் சென்று விட்டார்கள்.
9:54وَمَا مَنَعَهُمۡ أَن تُقۡبَلَ مِنۡهُمۡ نَفَقَٰتُهُمۡ إِلَّآ أَنَّهُمۡ كَفَرُواْ بِٱللَّهِ وَبِرَسُولِهِۦ وَلَا يَأۡتُونَ ٱلصَّلَوٰةَ إِلَّا وَهُمۡ كُسَالَىٰ وَلَا يُنفِقُونَ إِلَّا وَهُمۡ كَٰرِهُونَ٥٤
9:54. அவர்களுடைய உதவித் தொகையை ஏற்றுக் கொள்ளாததற்குக் காரணம் யாதெனில், அவர்கள் அல்லாஹ்வின் வழிகாட்டுதலையும், அதனடிப்படையில் உருவாகியுள்ள ஆட்சியமைப்புச் சட்டத்தையும் உதட்டளவில் ஏற்றுக் கொண்டுள் ளார்கள். ஆனால் செயலளவில் அதற்கு மாற்றமாகச் செயல்படுகிறார்கள். மேலும் நற்போதனைகளை அளிப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட கல்வி முறை பிரச்சார கூட்டத்திலும் வெறும் ஒப்புக்காக வெளியில் காட்டிக் கொள்வதற்காகவே கலந்துக் கொள்கிறார்கள். (பார்க்க 4:142&107:5) அவர்கள் செய்யும் தான தர்மங்களும் வேண்டா வெறுப்பாகத் தான் உள்ளன. ஆக்கப்பூர்வமான செயல் திட்டங்களுக்காக அவர்கள் உளப்பூர்வமாக அளிப்பதில்லை.
9:55فَلَا تُعۡجِبۡكَ أَمۡوَٰلُهُمۡ وَلَآ أَوۡلَٰدُهُمۡۚ إِنَّمَا يُرِيدُ ٱللَّهُ لِيُعَذِّبَهُم بِهَا فِي ٱلۡحَيَوٰةِ ٱلدُّنۡيَا وَتَزۡهَقَ أَنفُسُهُمۡ وَهُمۡ كَٰفِرُونَ٥٥
9:55. அவர்கள் செல்வ சீமான்களாகவும் அவர்களுக்கு ஆதரவாக பெரும் திரளான ஆதரவாளர்களும் இருப்பதைக் கண்டு நீங்கள் ஆச்சரியப்பட வேண்டியதில்லை. இவையே அல்லாஹ்வின் வழிகாட்டுதலின் பக்கம் வருவதற்கு அவர்களை தடுக்கின்றன. ஆனால் அல்லாதஹ்வின் நியதிப்படி இவையே அவர்களுடைய உலக வாழ்வை சிக்கலாக்கும் காரணிகளாக ஆகிவிடுமே. அதனால் அவர்கள் இறை நிராகரிப்பவர் களாகவே உலக வாழ்வை முடித்துக்கொள்ள நேரிடுமே.
9:56وَيَحۡلِفُونَ بِٱللَّهِ إِنَّهُمۡ لَمِنكُمۡ وَمَا هُم مِّنكُمۡ وَلَٰكِنَّهُمۡ قَوۡمٞ يَفۡرَقُونَ٥٦
9:56. ஆனால் அவர்களுடைய பேச்சை கவனியுங்கள். நாங்களும் உங்களைச் சார்ந்தவர்களே என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து கூறுகிறார்கள். உண்மையிலேயே அவர்கள் உங்களை சார்ந்தவர்கள் அல்லர். ஆனால் அவர்கள் கோழைகளாகவே இருக்கிறார்கள்.
9:57لَوۡ يَجِدُونَ مَلۡجًَٔا أَوۡ مَغَٰرَٰتٍ أَوۡ مُدَّخَلٗا لَّوَلَّوۡاْ إِلَيۡهِ وَهُمۡ يَجۡمَحُونَ٥٧
9:57. ஒருவேளை அவர்கள் போரில் கலந்துக் கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டாலும், அவர்கள் ஒளிந்துக்கொள்ள இடம் ஏதாவது இருக்கிறதா என்றே தேடி அலைவார்கள். ஒதுங்கும் இடமோ, குகையோ அல்லது சுரங்கத்தையோ கண்டால், களத்தை விட்டுவிட்டு அங்கு விரைந்து ஓடுவார்கள்.
9:58وَمِنۡهُم مَّن يَلۡمِزُكَ فِي ٱلصَّدَقَٰتِ فَإِنۡ أُعۡطُواْ مِنۡهَا رَضُواْ وَإِن لَّمۡ يُعۡطَوۡاْ مِنۡهَآ إِذَا هُمۡ يَسۡخَطُونَ٥٨
9:58. அவர்களில் சிலர், இறைவனின் ஆட்சியமைப்பு அளிக்கும் மானியத் தொகையிலும் முறைகேடு நடந்துள்ளதாக உம்மீது பழி சுமத்துபவர்களும் இருக்கிறார்கள். அவர்கள் எதிர்பார்த்த அளவு அவர்களுக்கு கொடுத்திருந்தால், அவர்கள் இப்படி குறைகூறி இருக்க மாட்டார்கள். ஆனால் நீர் அனைவருக்கும் சமமாகப் பிரித்துக் கொடுக்க இருப்பதால் (பார்க்க 9:60) அவர்கள் விரும்பும் அளவுக்கு கொடுக்க இயலவில்லை. எனவே அவர்கள் தம் ஆதங்கத்தை வெளிப்படுத்திக் கொள்கிறார்கள்.
9:59وَلَوۡ أَنَّهُمۡ رَضُواْ مَآ ءَاتَىٰهُمُ ٱللَّهُ وَرَسُولُهُۥ وَقَالُواْ حَسۡبُنَا ٱللَّهُ سَيُؤۡتِينَا ٱللَّهُ مِن فَضۡلِهِۦ وَرَسُولُهُۥٓ إِنَّآ إِلَى ٱللَّهِ رَٰغِبُونَ٥٩
9:59. ஆனால் அல்லாஹ்வின் ஆட்சியமைப்பு மூலமாகக் கிடைத்த மானியத் தொகையைக் கண்டு திருப்தி அடைந்து, “அல்லாஹ் நமக்குப் போதுமானவன். அல்லாஹ்வின் ஆட்சியமைப்புக்கு வசதிகள் பெருகும் போது, அதன் அருட்கொடையிலிருந்து நமக்கு மேலும் அதிகமான உதவித் தொகை கிடைக்கும். நிச்சயமாக நாம் அல்லாஹ்வின் இந்த ஆட்சியமைப்பையே நேசிக்கக் கூடியவர்கள்” என்று கூறியிருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்.
9:60۞إِنَّمَا ٱلصَّدَقَٰتُ لِلۡفُقَرَآءِ وَٱلۡمَسَٰكِينِ وَٱلۡعَٰمِلِينَ عَلَيۡهَا وَٱلۡمُؤَلَّفَةِ قُلُوبُهُمۡ وَفِي ٱلرِّقَابِ وَٱلۡغَٰرِمِينَ وَفِي سَبِيلِ ٱللَّهِ وَٱبۡنِ ٱلسَّبِيلِۖ فَرِيضَةٗ مِّنَ ٱللَّهِۗ وَٱللَّهُ عَلِيمٌ حَكِيمٞ٦٠
9:60. அல்லாஹ்வின் வழிகாட்டுதலின்படி செயல்படும் தொண்டு நிறுவனங்கள் வசூலிக்கும் உதவிக் தொகைகளை (ஸதஃகாவை) கீழ்கண்டவர்களுக்கு பயன்படுத்த வேண்டும்.
1. சமுதாயத்தில் பின்தங்கிய நிலையில் வாடும் மக்களின் மறு வாழ்விற்காக, (2) சம்பாதிக்க இயலாத உடல் ஊனமுற்றோர்களின் வாழ்வு மலரச் செய்ய, (3) இந்த அமைப்புக்காக பணம் வசூலிக்கும் ஊழியர்கள், (4) புதிதாக இஸ்லாத்தை தழுவியவர்கள், (5) அடிமைகளை விடுவித்தல், (6) கடன் பட்டிருப்பவர்களுக்கு உதவி புரிய, (7) இந்த அமைப்புக்காக பணி புரிபவர்கள், 8. அமைப்புக்காக பயணம் மேற்கொள்பவர்கள் ஆகியோருக்கு சேர வேண்டும் என்பது அல்லாஹ்வின் கட்டளையாகும். அல்லாஹ்வின் வழிகாட்டுதல்கள் யாவும் முழு ஞானத்தின் அடிப்படையில் உருவானவை என்பதை அறிந்து செயலாற்றுங்கள்.
9:61وَمِنۡهُمُ ٱلَّذِينَ يُؤۡذُونَ ٱلنَّبِيَّ وَيَقُولُونَ هُوَ أُذُنٞۚ قُلۡ أُذُنُ خَيۡرٖ لَّكُمۡ يُؤۡمِنُ بِٱللَّهِ وَيُؤۡمِنُ لِلۡمُؤۡمِنِينَ وَرَحۡمَةٞ لِّلَّذِينَ ءَامَنُواْ مِنكُمۡۚ وَٱلَّذِينَ يُؤۡذُونَ رَسُولَ ٱللَّهِ لَهُمۡ عَذَابٌ أَلِيمٞ٦١
9:61. மேலும் இந்த நபியிடம் யார் எதை சொன்னாலும் அவர் கேட்டுக் கொள்பவராகவே இருக்கிறார் என்று நபியை குறைகூறி, அவருக்கு மன வருத்தத்தை ஏற்படுத்துவோரும் அவர்களில் சிலர் இருக்கிறார்கள். அவர்களிடம், ஒவ்வொருடைய பேச்சையும் கேட்பது என்பது வேறு விஷயமாகும். அது அவர்களுடைய நன்மைக்கே. ஆனால் அவற்றை முழு அளவில் நம்புவது என்பது வேறு விஷயமாகும். எனவே அவர் அல்லாஹ்வின் வழி காட்டுதலை நம்புகிறார். மேலும் அல்லாஹ்வின் வழிகாட்டுதலை ஏற்று நடக்கும் மூஃமின்களையும் நம்புகிறார். அன்றியும் உங்களில் ஈமான் கொண்டவர்கள் மீது மிக்க கருணை உடையவராகவும் இருக்கிறார். (பார்க்க 33:6) எனவே யார் சமுதாயத்தை வழி நடத்திச் செல்லும் இறைத்தூதரைப் பழித்து பேசுகிறார்களோ, அவர்களுக்கு நோவினை தரும் தண்டனை காத்து நிற்கிறது என்பதை அறிவித்து விடுங்கள்.
9:62يَحۡلِفُونَ بِٱللَّهِ لَكُمۡ لِيُرۡضُوكُمۡ وَٱللَّهُ وَرَسُولُهُۥٓ أَحَقُّ أَن يُرۡضُوهُ إِن كَانُواْ مُؤۡمِنِينَ٦٢
9:62. மேலும் அவர்கள் மூஃமின்களாகிய உங்களை திருப்திப்படுத்துவதற்காக உங்களிடம் வந்து அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து தம் விஷயத்தை முன்வைக்கிறார்கள். ஆனால் அவர்கள் உண்மையிலேயே முஃமின்களாக இருந்திருந்தால், அவர்கள் அல்லாஹ்வின் ஆட்சியமைப்பு திருப்தி அடையும் வகையில் அவர்கள் நலப்பணிகளில் ஈடுபட்டிருக்க வேண்டும். அவர்கள் இந்த ஆட்சியமைப்பு சட்டங்களின்படி நடக்க முன்வந்திருக்க வேண்டும்.
9:63أَلَمۡ يَعۡلَمُوٓاْ أَنَّهُۥ مَن يُحَادِدِ ٱللَّهَ وَرَسُولَهُۥ فَأَنَّ لَهُۥ نَارَ جَهَنَّمَ خَٰلِدٗا فِيهَاۚ ذَٰلِكَ ٱلۡخِزۡيُ ٱلۡعَظِيمُ٦٣
9:63. எவர் அல்லாஹ்வின் வழிகாட்டுதலுக்கும் அதன் ஆட்சியமைப்பு சட்டங்களுக்கும் எதிராக செயல்படுகிறார்களோ, அவர்களுக்கு கடுமையான தண்டனை கிடைக்கும் என்பதை அவர்கள் அறியவில்லையா? அத்தண்டனை தொடர்ந்து கிடைக்கும் என்பதையும் அறிவதில்லையா? அந்த நரக வேதனை என்பது அவர்களுக்கு ஏற்படும் இழிவான நிலையும் அழிவுமே ஆகும்.
9:64يَحۡذَرُ ٱلۡمُنَٰفِقُونَ أَن تُنَزَّلَ عَلَيۡهِمۡ سُورَةٞ تُنَبِّئُهُم بِمَا فِي قُلُوبِهِمۡۚ قُلِ ٱسۡتَهۡزِءُوٓاْ إِنَّ ٱللَّهَ مُخۡرِجٞ مَّا تَحۡذَرُونَ٦٤
9:64. இந்த நயவஞ்சகர்கள் தம் மனதில் மறைத்து வைத்துள்ளதை, மூஃமின்கள் அறிந்துக் கொள்ளும் வகையில் அத்தியாயம் ஏதாவது இறக்கி வைக்கப்படுமோ என்றும் அஞ்சுகிறார்கள். எனவே அவர்களிடம், “நீங்கள் பரிகாசம் செய்து கொண்டே இருங்கள். நீங்கள் உங்கள் உள்ளங்களில் மறைத்துக் கொண்டிருந்தவை அல்லாஹ்வின் நியதிப்படி வெளிப்பட்டே தீரும்” என்று கூறிவிடுங்கள்.
9:65وَلَئِن سَأَلۡتَهُمۡ لَيَقُولُنَّ إِنَّمَا كُنَّا نَخُوضُ وَنَلۡعَبُۚ قُلۡ أَبِٱللَّهِ وَءَايَٰتِهِۦ وَرَسُولِهِۦ كُنتُمۡ تَسۡتَهۡزِءُونَ٦٥
9:65. இப்படி ஏளனமாகப் பேசி வருவதன் காரணம் என்ன என்று கேட்டால் அவர்கள், வெறுமனே நகைச் சுவைக்காகவும் பொழுது போக்குக்காகவும் சொன்னதாக பதில் கூறுகிறார்கள். அல்லாஹ்வின் வழிகாட்டுதல் விஷயத்திலும், அதன் ஆட்சியமைப்பு கடமைகளைப் பற்றியும் இப்படி நீங்கள் விளையாட்டாக எடுத்துக் கொள்ளலாமா என்று அவர்களிடம் கேளுங்கள்.
ஏனெனில் சமுதாய சீரமைப்பு விஷயமாக சீரிய சிந்தனையுடன் இந்த அரசு நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கும் இந்த தருணத்தில், அதற்கு உதவி செய்வதை விட்டுவிட்டு இப்படி ஏளனப்படுத்திக் கொண்டிருந்தால் அவர்களைப் பற்றி என்னவென்று சொல்வது? அனைவருடைய நிகழ்கால வாழ்வும் வருங்கால நிலையான வாழ்வும் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதற்காகத் தானே இந்த அரசு பாடுபடுகிறது!
9:66لَا تَعۡتَذِرُواْ قَدۡ كَفَرۡتُم بَعۡدَ إِيمَٰنِكُمۡۚ إِن نَّعۡفُ عَن طَآئِفَةٖ مِّنكُمۡ نُعَذِّبۡ طَآئِفَةَۢ بِأَنَّهُمۡ كَانُواْ مُجۡرِمِينَ٦٦
9:66. அவர்களுடைய பேச்சுகள் எல்லாம் ஒரு வகையில் பாசாங்கு செய்வதாகவே உள்ளன. “உண்மை பேசுவதற்கு உங்களுக்கு என்ன வந்தது? நீங்கள் அல்லாஹ்வின் வழிகாட்டுதலை ஏற்றுக்கொண்ட பின் அதற்கு எதிராக செயல்பட தீர்மானித்து இருக்கிறீர்கள் என்பதே உண்மையாகும். உங்களில் ஒரு சாரார் அறியாமையின் காரணமாக உங்கள் பேச்சைக் கேட்டு உங்களுடன் இணைந்திருக்கலாம். அவர்களுக்கு மன்னிப்புக் கிடைத்து விடும். ஆனால் உண்மை விஷயங்களை அறிந்து அதற்கு எதிராக செயல்படும் குற்றவாளிகளுக்கு மன்னிப்பு கிடைக்காது. அவர்கள் தண்டனைக்கு உரியவர்களே” என்பதை அவர்களுக்கு அறிவித்து விடுங்கள்.
9:67ٱلۡمُنَٰفِقُونَ وَٱلۡمُنَٰفِقَٰتُ بَعۡضُهُم مِّنۢ بَعۡضٖۚ يَأۡمُرُونَ بِٱلۡمُنكَرِ وَيَنۡهَوۡنَ عَنِ ٱلۡمَعۡرُوفِ وَيَقۡبِضُونَ أَيۡدِيَهُمۡۚ نَسُواْ ٱللَّهَ فَنَسِيَهُمۡۚ إِنَّ ٱلۡمُنَٰفِقِينَ هُمُ ٱلۡفَٰسِقُونَ٦٧
9:67. இப்படிப்பட்ட நயவஞ்சகர்களுள் ஆண்களும் பெண்களும் இருக்கிறார்கள். இனம் இனத்தோடு சேரும் என்பது போல, அவர்கள் யாவரும் ஒட்டு மொத்தமாக சமுதாயத்தை வழிகெடுத்து வருகிறார்கள். அல்லாஹ்வின் வழிகாட்டுதல் எவற்றை பாவச் செயல்கள் என்று கோடிட்டுக் காட்டுகிறதோ, அவற்றை செய்யவே மக்களிடம் தூண்டுகிறார்கள். எந்த செயல்கள் நன்மையானவை என்று கூறுகிறதோ அவற்றை விட்டு தடுத்தும் வருகிறார்கள். அல்லாஹ்வின் பாதையில் தாமும் செலவு செய்யாமல் கஞ்சத்தனம் செய்வதோடு, பிறரையும் கெடுத்து வருகிறார்கள். அவர்கள் அல்லாஹ்வின் வழிகாட்டுதலை நினைவில் கொண்டு செயல்படாததால், அல்லாஹ்வின் ஆட்சியமைப்பும் அவர்களுடைய பாதுகாப்பு குறித்து பராமுகமாக இருந்து விடும்.
9:68وَعَدَ ٱللَّهُ ٱلۡمُنَٰفِقِينَ وَٱلۡمُنَٰفِقَٰتِ وَٱلۡكُفَّارَ نَارَ جَهَنَّمَ خَٰلِدِينَ فِيهَاۚ هِيَ حَسۡبُهُمۡۚ وَلَعَنَهُمُ ٱللَّهُۖ وَلَهُمۡ عَذَابٞ مُّقِيمٞ٦٨
9:68. எனவேதான் இத்தகைய நயவஞ்சக ஆண்களுக்கும் பெண்களுக்கும் இறைவழிகாட்டுதலை எதிர்ப்பவர்களுக்கு கிடைக்கும் தண்டனைப் போன்றே கிடைக்கும். சொல் ஒன்று செயல் வேறு என்றிருந்தால் அவர்களுடைய தீய செயல்களின் விளைவுகளே அவர்களை நரக வேதனையில் கொண்டுபோய் சேர்த்து விடும் அல்லவா? அந்த வேதனையிலிருந்து வெளியே வர அவர்களுக்கு வேறு எந்த வழியும் இருக்காதே. அவர்கள் அதில் நிலையாக சிக்கிக் கிடக்க நேரிடுமே. அவர்களுக்கு கிடைத்து வரும் அல்லாஹ்வின் அருட்கொடைகளையும் அவர்கள் இழக்க நேரிடுகிறதே. இதுதான் அத்தகையவர்களுக்குக் கிடைக்கும் தண்டனையாகும்.
9:69كَٱلَّذِينَ مِن قَبۡلِكُمۡ كَانُوٓاْ أَشَدَّ مِنكُمۡ قُوَّةٗ وَأَكۡثَرَ أَمۡوَٰلٗا وَأَوۡلَٰدٗا فَٱسۡتَمۡتَعُواْ بِخَلَٰقِهِمۡ فَٱسۡتَمۡتَعۡتُم بِخَلَٰقِكُمۡ
9:69. இவை எல்லாம் வெறும் அச்சுறுத்தலே என்றும் இப்படிப்பட்ட நிலை ஏற்படாது என்றும் அவர்களுக்கு நினைக்கத் தோன்றும். ஆனால் இதற்கு முன் வாழ்ந்த சமுதாயத்தினரும் இப்படித் தான் எண்ணினார்கள். அவர்கள் உங்களை விட பலம் வாய்ந்தவர்களாகவும் செல்வந்தர்களாகவும் இருந்தார்கள். அவர்களுடைய சமுதாயம் பெரிய அளவில் வளர்ச்சியும் பெற்றிருந்தது. தற்சமயம் இவர்களுக்கு கிடைத்துள்ள பாக்கியங்களைப் போன்றே அவர்களுக்கும் கிடைத்திருந்தன. இவர்களைப் போன்றே அவர்களும் சுகமாக வாழ்ந்து வந்தார்கள்.
كَمَا ٱسۡتَمۡتَعَ ٱلَّذِينَ مِن قَبۡلِكُم بِخَلَٰقِهِمۡ وَخُضۡتُمۡ كَٱلَّذِي خَاضُوٓاْۚ أُوْلَٰٓئِكَ حَبِطَتۡ أَعۡمَٰلُهُمۡ فِي ٱلدُّنۡيَا وَٱلۡأٓخِرَةِۖ وَأُوْلَٰٓئِكَ هُمُ ٱلۡخَٰسِرُونَ٦٩
ஆனால் அவர்கள் தற்காப்பு விஷயங்களிலும், வருங்கால நலத் திட்டங்களைப் பற்றியும் கவலை கொள்ளாமல் தம் வாழ்வை வீண் விளையாட்டாக எடுத்துக் கொண்டதால், ஆபத்துகள் ஏற்பட்ட போது, அவற்றை எதிர்கொள்ள முடியாமல் அழிந்து போனார்கள். அவர்களைப் போலவே இவர்களும் வீண் விளையாட்டில் மூழ்கி இருக்கிறார்கள். அவர்களுடைய செயல்கள் யாவும் நிலையான பலன்களை தராமல் அழிந்து போயின. இவர்களுக்கும் அதே கதிதான் ஏற்படும். இத்தகையவர்கள் தாம் பெரும் நஷ்டவாளிகள் ஆவர்.
9:70أَلَمۡ يَأۡتِهِمۡ نَبَأُ ٱلَّذِينَ مِن قَبۡلِهِمۡ قَوۡمِ نُوحٖ وَعَادٖ وَثَمُودَ وَقَوۡمِ إِبۡرَٰهِيمَ وَأَصۡحَٰبِ مَدۡيَنَ وَٱلۡمُؤۡتَفِكَٰتِۚ
9:70. இவர்களுக்கு முன்சென்ற பல சமுதாயங்களின் நிலைமையும் இதுவே ஆகும். உதாரணமாக நூஹ்வுடைய சமுதாயம், ஆது, ஸமூது சமுதாயம், இப்றாஹீம் சமுதாயம், மற்றும் தலை கீழாய்ப் புரண்டுபோன மத்யன்வாசி கள் யாவரும் இப்படித் தான் இறைவழிகாட்டுதலில் அக்கறை காட்டாமல் உதாசீனப்படுத்தி அழிவை தேடிக் கொண்டார்கள். அந்த சமுதாயங்களின் வரலாற்று உண்மைகளை உங்களுக்கு எடுத்துரைக்கவில்லையா? அவற்றை பாடமாக எடுத்துக் கொள்ளக் கூடாதா?
أَتَتۡهُمۡ رُسُلُهُم بِٱلۡبَيِّنَٰتِۖ فَمَا كَانَ ٱللَّهُ لِيَظۡلِمَهُمۡ وَلَٰكِن كَانُوٓاْ أَنفُسَهُمۡ يَظۡلِمُونَ٧٠
அவர்களிடம் வந்த இறைத் தூதர்களும் அவர்களுக்கு தெளிவான வழிகாட்டுதலை எடுத்துரைத்தார்களே! ஆனால் அவர்கள் அவற்றை நிராகரித்து தம் மனம்போன போக்கில் வாழ்ந்து தீய செயல்களில் ஈடுபட்டு வந்தனர். அதனால் அவர்கள் அழிந்து போனார்கள். அல்லாஹ் அவர்களுக்கு ஒரு தீங்கும் இழைக்க வில்லை. அவர்கள் தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டார்கள். இன்றைக்கும் உங்களுடைய நிலைமை இதுவே ஆகும். அல்லாஹ்விடமிருந்து வந்துள்ள முன்னெச்சரிக்கையை ஏற்று அழிவிலிருந்து பாதுகாத்து கொள்ளுங்கள்.
9:71وَٱلۡمُؤۡمِنُونَ وَٱلۡمُؤۡمِنَٰتُ بَعۡضُهُمۡ أَوۡلِيَآءُ بَعۡضٖۚ يَأۡمُرُونَ بِٱلۡمَعۡرُوفِ وَيَنۡهَوۡنَ عَنِ ٱلۡمُنكَرِ
9:71. இதற்கு மாறாக இறைவழிகாட்டுதலை மனதார ஏற்று அதன்படி செயல்படும் ஆண்கள் மற்றும் பெண்களின் நிலை அவ்வாறு இருக்காது. இவர்களுடைய வாழ்வின் நோக்கமும் ஒன்றுதான். அதாவது சமுதாயத்தை நல்வழிபடுத்தி தீயவற்றை அறவே அகற்றி, அவ்வப்போது சீர்திருத்தங்களை செய்ய வேண்டும் என்பதே அவர்களுடைய எண்ணங்களும் செயல்பாடுகளும். இதற்காக அவர்கள் ஒருவருக்கொருவர் உபகாரம் செய்துக் கொள்கிறார்கள்.
وَيُقِيمُونَ ٱلصَّلَوٰةَ وَيُؤۡتُونَ ٱلزَّكَوٰةَ وَيُطِيعُونَ ٱللَّهَ وَرَسُولَهُۥٓۚ
மக்கள் அனைவருக்கும் இறைவழிகாட்டுதலை போதிக்கும் கல்விமுறை கூடக்களை நிலைநாட்டி சமுதாய மேம்பாட்டிற்காக செலவும் செய்து வருகிறார்கள். இப்படியாக அல்லாஹ்வின் வழிகாட்டுதலுக்கும் அதன் அடிப்படையில் உருவான ஆட்சியமைப்பு சட்டங்களுக்கும் அடிபணிந்து செயல்படுகிறார்கள்.
أُوْلَٰٓئِكَ سَيَرۡحَمُهُمُ ٱللَّهُۗ إِنَّ ٱللَّهَ عَزِيزٌ حَكِيمٞ٧١
அவர்களுடைய நற்செயல்களுக்குரிய பலன்கள் அல்லாஹ்வின் புறத்திலிருந்து விரைவில் அவர்களுக்குக் கிடைத்து விடும். ஏனெனில் அல்லாஹ்வின் செயல்திட்டங்கள் யாவும் ஞானத்தின் அடிப்படையைக் கொண்டவையாகும்.
9:72وَعَدَ ٱللَّهُ ٱلۡمُؤۡمِنِينَ وَٱلۡمُؤۡمِنَٰتِ جَنَّٰتٖ تَجۡرِي مِن تَحۡتِهَا ٱلۡأَنۡهَٰرُ خَٰلِدِينَ فِيهَا وَمَسَٰكِنَ طَيِّبَةٗ فِي جَنَّٰتِ عَدۡنٖۚ وَرِضۡوَٰنٞ مِّنَ ٱللَّهِ أَكۡبَرُۚ ذَٰلِكَ هُوَ ٱلۡفَوۡزُ ٱلۡعَظِيمُ٧٢
9:72. இவ்வாறாக அல்லாஹ்வின் வழிகாட்டுதலை ஏற்று அதன்படி செயல்படும் ஆண்கள் மற்றும் பெண்கள் வாழும் சமுதாயம், சுவனத்திற்கு ஒப்பானதாக மாறிவரும். அவர்களுடைய பொருளாதாரம் வற்றாத ஜீவநதியாய் பெருகி வரும். அவர்களுக்கு எல்லா சுகங்களுடன் கூடிய பாதுகாப்பான வாழ்வு நிலையாக கிடைக்கும். அவர்களின் வசிப்பிடம் உன்னதமான மாளிகைகளாக இருக்கும். இவ்வாறு அனைத்து வசதிகளும் கிடைத்து வரும் என்று அல்லாஹ்வின் புறத்திலிருந்து வாக்கு அளிக்கப்படுகிறது. அவை அவர்களுக்கு கிடைப்பது எவ்வித சந்தேகமும் இல்லை. ஏனெனில் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி செயல்படுவதே தலைசிறந்த வழிமுறை என்பதை அறிந்து அவர்கள் செயல்படுகிறார்கள். அத்தயைவர்களுக்கு மகத்தான வாழ்வு கிடைப்பது உண்மையே ஆகும் அல்லவா? அவர்களுடைய மரணத்திற்குப் பின்பும் இத்தகைய சுவன வாழ்வு தொடரும்.
9:73يَٰٓأَيُّهَا ٱلنَّبِيُّ جَٰهِدِ ٱلۡكُفَّارَ وَٱلۡمُنَٰفِقِينَ وَٱغۡلُظۡ عَلَيۡهِمۡۚ وَمَأۡوَىٰهُمۡ جَهَنَّمُۖ وَبِئۡسَ ٱلۡمَصِيرُ٧٣
9:73. இவ்வாறு தலைசிறந்த சமுதாயம் உருவாவதை தடுத்துவரும் சமூக விரோதிகள் மற்றும் நயவஞ்சகர்களை கட்டுப்படுத்த அனைத்து நடவடிக் கைகளையும் எடுத்து வாருங்கள். அதில் யாருக்கும் எந்த பாரபட்சமும் காட்டாதீர்கள். அவர்களிடம் மிகவும் கண்டிப்புடன் நடந்துக் கொள்ளுங்கள். இறுதியில் அவர்கள் தங்குமிடம் சிறைச்சாலை போன்ற நரகமே என்பதை அவர்களுக்கு தெரியப்படுத்தி விடுங்கள். அது தங்குவதற்கு மிகவும் கெட்ட இடமாகும் என்பதை அவர்களுக்கு அறிவித்து விடுங்கள்.
9:74يَحۡلِفُونَ بِٱللَّهِ مَا قَالُواْ وَلَقَدۡ قَالُواْ كَلِمَةَ ٱلۡكُفۡرِ وَكَفَرُواْ بَعۡدَ إِسۡلَٰمِهِمۡ وَهَمُّواْ بِمَا لَمۡ يَنَالُواْۚ وَمَا نَقَمُوٓاْ إِلَّآ أَنۡ أَغۡنَىٰهُمُ ٱللَّهُ وَرَسُولُهُۥ مِن فَضۡلِهِۦۚ
9:74. அவர்களுடைய நடத்தை எந்த அளவுக்கு மோசமாக உள்ளது என்பதை கவனியுங்கள். அல்லாஹ்வுக்கும் அதன் ஆட்சியமைப்புக்கும் எதிராக செயல்பட மக்களிடம் சொல்லி வந்தார்கள். ஆனால் இப்போது நாங்கள் அவ்வாறு பேசவே இல்லை என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து சொல்கிறார்கள். மேலும் இஸ்லாமிய மார்க்க விஷயங்கள் எல்லாம் அவர்களுக்கு தெளிவான பின்பும், அதற்கு எதிராகப் பல சதி திட்டங்களில் இறங்கியே இருக்கிறார்கள். அதில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்றும் திட்டமிட்டு இருந்தார்கள். ஆனால் அவர்கள் தம் திட்டத்தில் வெற்றி பெறவேயில்லை. இருந்தும் இந்த மூஃமின்களுக்கும் அரசமைப் புக்கும் எதிராக ஏன் செயல்படுகிறீர்கள் என்று அவர்களிடம் கேட்டால், மூஃமின்களுக்கு அல்லாஹ்வின் அருட்கொடைகள் தாராளமாகக் கிடைத்து வருகின்றதே என்ற ஆதங்கத்தில் தான் இவ்வாறு செயல்படுவதாக சொன்னார்கள்.
فَإِن يَتُوبُواْ يَكُ خَيۡرٗا لَّهُمۡۖ وَإِن يَتَوَلَّوۡاْ يُعَذِّبۡهُمُ ٱللَّهُ عَذَابًا أَلِيمٗا فِي ٱلدُّنۡيَا وَٱلۡأٓخِرَةِۚ وَمَا لَهُمۡ فِي ٱلۡأَرۡضِ مِن وَلِيّٖ وَلَا نَصِيرٖ٧٤
அவர்களிடம், “இப்போதும் காலம் கடந்து விடவில்லை. நீங்களும் அல்லாஹ்வின் வழிகாட்டுதலின் படி உருவாக்கப்பட்டுள்ள ஆட்சியமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு செயல்பட முன்வந்தால், பொது மன்னிப்பு அளித்து உங்களையும் இந்த அமைப்பில் சேர்த்துக் கொள்வோம். அது உங்களுக்கு நன்மையாகவே இருக்கும். ஆனால் நீங்கள் இந்த வாய்ப்பை நழுவவிட்டால் அல்லாஹ்வின் சட்டப்படி கடுமையான தண்டனை தான் கிடைக்கும்” என்பதை அவர்களுக்கு தெரிவியுங்கள். அத்தண்டனை இவ்வுலகிலும் மரணத்திற்குப் பின் தொடர்கின்ற வாழ்விலும் கிடைக்கும் என்பதை அறிவித்து விடுங்கள். அதன்பின் அவர்களுக்கு வேறு யாருடைய பாதுகாப்பும் உதவியும் எங்கும் கிடைக்காது.
9:75۞وَمِنۡهُم مَّنۡ عَٰهَدَ ٱللَّهَ لَئِنۡ ءَاتَىٰنَا مِن فَضۡلِهِۦ لَنَصَّدَّقَنَّ وَلَنَكُونَنَّ مِنَ ٱلصَّٰلِحِينَ٧٥
9:75. அவர்களில் சிலர், தங்களுக்கு அல்லாஹ்வின் ஆட்சியமைப்பிலிருந்து மானியம் அல்லது உதவித்தொகை கிடைத்தால் நாமும் சமுதாயப் பணியில் பங்கெடுத்து ஆக்கப்பூர்வமாக செயல்படுவோம் என்று வாக்களித்தனர்.
9:76فَلَمَّآ ءَاتَىٰهُم مِّن فَضۡلِهِۦ بَخِلُواْ بِهِۦ وَتَوَلَّواْ وَّهُم مُّعۡرِضُونَ٧٦
9:76. அவ்வாறே அவர்களுக்கு அல்லாஹ்வின் ஆட்சி புறத்திலிருந்து மானியத் தொகை அளிக்கப்பட்டது. அவற்றை எல்லாம் பெற்றுக்கொண்ட பின் எந்த சமூக நலத் திட்டங்களுக்காகவும் அவர்கள் செலவிடவில்லை. இப்படியாக அவர்கள் கொடுத்த வாக்குறுதியை அவர்கள் மீறிவிட்டார்கள்.
9:77فَأَعۡقَبَهُمۡ نِفَاقٗا فِي قُلُوبِهِمۡ إِلَىٰ يَوۡمِ يَلۡقَوۡنَهُۥ بِمَآ أَخۡلَفُواْ ٱللَّهَ مَا وَعَدُوهُ وَبِمَا كَانُواْ يَكۡذِبُونَ٧٧
9:77. எனவே அல்லாஹ்வின் ஆட்சியமைப்பில் அவர்கள் எடுத்துக்கொண்ட பிரமாணத்திற்கு எதிராக அவர்கள் செயல்பட்டதாலும், தாம் நற்காரியங்களை செய்து வருவதாக பொய் சொல்லிக் கொண்டிருந்த காரணத்தாலும், தீய பழக்கங்கள் அவர்கள் உள்ளங்களில் வேரூன்றி விட்டன. எனவே அவர்கள் இறுதி வரையில் திருந்தும் வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது.
9:78أَلَمۡ يَعۡلَمُوٓاْ أَنَّ ٱللَّهَ يَعۡلَمُ سِرَّهُمۡ وَنَجۡوَىٰهُمۡ وَأَنَّ ٱللَّهَ عَلَّٰمُ ٱلۡغُيُوبِ٧٨
9:78. அவர்களுடைய இரகசிய எண்ணங்களையும் அந்தரங்க ஆலோசனை களையும் அல்லாஹ்வின் ஆட்சியமைப்புக்கு தெரியமால் போய்விடும் என்று எண்ணிக் கொண்டார்களா? திரைக்கு மறைவாக நடக்கும் விஷயங்களையும் இந்த ஆட்சியமைப்பு கண்காணித்து அறிந்துக் கொள்ளும் என்பதை அவர்கள் அறியவில்லையா?
அதாவது சமூக நலத் திட்டங்களுக்காக அளிக்கப்படும் மானியத்தை தவறாக பயன்படுத்தினால், அந்த சமுதாயம் மிகவும் பின்தங்கிய நிலையில்தான் இருக்கும். இதுவே அவர்கள் செயல்படும் லட்சணத்தை காட்டிக் கொடுத்து விடும்.
9:79ٱلَّذِينَ يَلۡمِزُونَ ٱلۡمُطَّوِّعِينَ مِنَ ٱلۡمُؤۡمِنِينَ فِي ٱلصَّدَقَٰتِ وَٱلَّذِينَ لَا يَجِدُونَ إِلَّا جُهۡدَهُمۡ فَيَسۡخَرُونَ مِنۡهُمۡ سَخِرَ ٱللَّهُ مِنۡهُمۡ وَلَهُمۡ عَذَابٌ أَلِيمٌ٧٩
9:79. ஆனால் மூஃமின்களிடம் கிடைக்கும் அரசு மானியத்தை சமூக நலத் திட்டங்களுக்காக முறையாக செலவிடுவதையும், அதற்காக அவர்கள் தமக்குரிய ஊதியத்தைத் தவிர, வேறு எதையும் எதிர் பார்காமல் உழைத்து வருவதையும் கவனிக்கும் நயவஞ்சகர்கள், ஏளனமாகப் பேசி வருகிறார்கள். ஆனால் அல்லாஹ்வின் நியதிப்படி அந்த நயவஞ்சகர்களே பரிகாசத்திற்கு ஆளாவார்கள். (பார்க்க 2:15) மேலும் இத்தகையவர்களுக்கு நோவினைத் தரும் வேதனைகள் காத்து நிற்கின்றன.
9:80ٱسۡتَغۡفِرۡ لَهُمۡ أَوۡ لَا تَسۡتَغۡفِرۡ لَهُمۡ إِن تَسۡتَغۡفِرۡ لَهُمۡ سَبۡعِينَ مَرَّةٗ فَلَن يَغۡفِرَ ٱللَّهُ لَهُمۡۚ ذَٰلِكَ بِأَنَّهُمۡ كَفَرُواْ بِٱللَّهِ وَرَسُولِهِۦۗ وَٱللَّهُ لَا يَهۡدِي ٱلۡقَوۡمَ ٱلۡفَٰسِقِينَ٨٠
9:80. இறைவழிகாட்டுதலின் படி சமுதாயத்தை வழிநடத்திச் செல்பவரே! அவர்களுக்கு நேரவிருக்கும் வேதனையிலிருந்து நிவாரணம் கிடைக்க ஏதாவது வழிமுறை இருக்கிறதா என்று உம் மனம் துடிக்கிறது. இது உம்மிடமுள்ள இளகிய குணத்தின் பிரதிப்பலிப்பே ஆகும். ஆனால் அவர்களுடைய பாதுகாப்பை பற்றி நீர் ஆயிரம்தான் கவலைப்பட்டாலும் அவர்களுக்கு அல்லாஹ்விடமிருந்து பாதுகாப்பு கிடைப்பது அரிதானதே. இது அவர்கள் மேலுள்ள வெறுப்பின் காரணமாக அல்ல. மாறாக அவர்கள் அல்லாஹ்வின் வழிகாட்டுதலுக்கும் அதனடிப்படையில் உருவாகியுள்ள ஆட்சியமைப்பு செயல் திட்டங்களுக்கும் எதிராக செயல்படுவதில் குறியாக இருப்பதாலேயே ஆகும். இத்தகைய பாவிகளுக்கு அல்லாஹ்விடமிருந்து நேர்வழியும் பாதுகாப்பும் கிடைப்பது எப்படி?
9:81فَرِحَ ٱلۡمُخَلَّفُونَ بِمَقۡعَدِهِمۡ خِلَٰفَ رَسُولِ ٱللَّهِ وَكَرِهُوٓاْ أَن يُجَٰهِدُواْ بِأَمۡوَٰلِهِمۡ وَأَنفُسِهِمۡ فِي سَبِيلِ ٱللَّهِ وَقَالُواْ لَا تَنفِرُواْ فِي ٱلۡحَرِّۗ قُلۡ نَارُ جَهَنَّمَ أَشَدُّ حَرّٗاۚ لَّوۡ كَانُواْ يَفۡقَهُونَ٨١
9:81. சமூக விரோத சக்திகளை கட்டுப்படுத்துவதற்காக போரில் கலந்துக் கொள்ள அல்லாஹ்வின் ஆட்சியமைப்பு கட்டளை இட்டபோது, அதற்கு எதிராக வீட்டிலேயே தங்கிவிட்டவர்கள் இவர்கள். அவ்வாறு அதில் பங்கெடுக்காமல் இருந்ததைப் பற்றியும் எண்ணி பெருமகிழ்ச்சி அடைந்தவர்கள். அல்லாஹ்வின் வழிகாட்டுதலின் அடிப்படையில் சிறந்ததொரு ஆட்சி மலர தம் உடைமைகளையும் உயிரையும் அர்ப்பணித்து சமூக சீரமைப்புப் பணியில் ஈடுபடுவதை வெறுத்தவர்கள் இவர்கள். சுட்டெரிக்கும் வெயில் என்றும் பாராமல் தம் கடமையை ஆற்ற புறப்பட்டுச் சென்ற மூஃமின்களைப் பார்த்து, “நீங்கள் செல்லாதீர்கள்” என்று சொன்னவர்கள் இவர்கள். நபியே அவர்களிடம், “நரக வேதனை இதைவிடக் கடுமையான வெப்பமுடையது” என்று கூறிவிடுவீராக. அவர்கள் உண்மையை விளங்கிக் கொண்டிருந்தால், இவ்வாறு அவர்கள் செய்திருக்க மாட்டார்கள்.
9:82فَلۡيَضۡحَكُواْ قَلِيلٗا وَلۡيَبۡكُواْ كَثِيرٗا جَزَآءَۢ بِمَا كَانُواْ يَكۡسِبُونَ٨٢
9:82. எனவே அவர்கள் செய்து வரும் செயல்களுக்காக சில காலத்திற்கு சந்தோஷமாக சிரித்துக் கொள்ளட்டும். பிறகு அவர்கள் காலா காலத்திற்கு அழ வேண்டி இருக்கும். இதுவே அவர்களுக்கு கிடைக்கும் தக்க வெகுமதியாகும்.
9:83فَإِن رَّجَعَكَ ٱللَّهُ إِلَىٰ طَآئِفَةٖ مِّنۡهُمۡ فَٱسۡتَٔۡذَنُوكَ لِلۡخُرُوجِ فَقُل لَّن تَخۡرُجُواْ مَعِيَ أَبَدٗا وَلَن تُقَٰتِلُواْ مَعِيَ عَدُوًّاۖ إِنَّكُمۡ رَضِيتُم بِٱلۡقُعُودِ أَوَّلَ مَرَّةٖ فَٱقۡعُدُواْ مَعَ ٱلۡخَٰلِفِينَ٨٣
9:83. மேலும் அவர்களில் சிலர் போரில் கலந்துக்கொள்ள சென்ற போது, போர் நடைபெறும் முக்கியமான கட்டத்தில், களத்தை விட்டு பின்வாங்கிவிட முடிவெடுத்தார்கள். அத்தகையவர்கள் போரில் கலந்துக் கொள்வதாக மீண்டும் உம்மிடம் அனுமதி கேட்டு வந்தால் அவர்களிடம், “நீங்கள் ஒருபோதும் என்னுடன் போரில் கலந்துக்கொள்ள வேண்டியதில்லை. மேலும் என்னுடன் சேர்ந்து பகைவர்களுக்கு எதிராக போரிட வேண்டிய அவசியமும் இல்லை. ஏனெனில் போர்க் களத்தில் சண்டையிடாமல் ஒதுங்கி ஓரத்தில் அமர்ந்து விட்டீர்கள். அதுதான் சிறப்பானது என்றும் எண்ணிக் கொண்டீர்கள். எனவே இப்போதும் நீங்கள் உங்கள் இல்லங்களிலேயே கோழைகளாக பெண்களுடன் தங்கிக் கொள்ளுங்கள்” என்று கூறி விடுவீராக.
9:84وَلَا تُصَلِّ عَلَىٰٓ أَحَدٖ مِّنۡهُم مَّاتَ أَبَدٗا وَلَا تَقُمۡ عَلَىٰ قَبۡرِهِۦٓۖ إِنَّهُمۡ كَفَرُواْ بِٱللَّهِ وَرَسُولِهِۦ وَمَاتُواْ وَهُمۡ فَٰسِقُونَ٨٤
9:84. இப்படிப்பட்ட நயவஞ்சகர்கள் யாராவது இறந்துவிட்டால் அவருக்காக நீர் துக்கம் விசாரிக்கவும் அங்கு செல்ல வேண்டாம். அவர்களின் புதைவிடங்ளில் நிற்கவும் வேண்டாம். ஏனெனில் அவர்கள் அல்லாஹ்வின் வழிகாட்டுதலுக்கும் அதனடிப்படையில் உருவான ஆட்சியமைப்பு சட்டங்களுக்கும் எதிராக செயல்பட்ட குற்றவாளிகள் ஆவார்கள்.
9:85وَلَا تُعۡجِبۡكَ أَمۡوَٰلُهُمۡ وَأَوۡلَٰدُهُمۡۚ إِنَّمَا يُرِيدُ ٱللَّهُ أَن يُعَذِّبَهُم بِهَا فِي ٱلدُّنۡيَا وَتَزۡهَقَ أَنفُسُهُمۡ وَهُمۡ كَٰفِرُونَ٨٥
9:85. அவர்கள் செல்வ சீமான்களாகவும் அவர்களுக்கு ஆதரவாகப் பெரும் திரளான ஆதரவாளர்களும் இருப்பதைக் கண்டு நீங்கள் ஆச்சரியப்பட வேண்டியதில்லை. அத்தகைய தற்பெருமையே அவர்களை அல்லாஹ்வின் ஆட்சியமைப்பின் பக்கம் வருவதற்கு தடையாக நிற்கின்றன. ஆனால் அல்லாஹ்வின் நியதிப்படி இவையே அவர்களுடைய உலக வாழ்வை சிக்கலாக்கும் காரணிகளாக மாறிவிடும். அதனால் அவர்கள் இறை நிராகரிப்பவர்களாகவே உலக வாழ்வை முடித்துக் கொள்ள நேரிடும்.(பார்: 9:55)
9:86وَإِذَآ أُنزِلَتۡ سُورَةٌ أَنۡ ءَامِنُواْ بِٱللَّهِ وَجَٰهِدُواْ مَعَ رَسُولِهِ ٱسۡتَٔۡذَنَكَ أُوْلُواْ ٱلطَّوۡلِ مِنۡهُمۡ وَقَالُواْ ذَرۡنَا نَكُن مَّعَ ٱلۡقَٰعِدِينَ٨٦
9:86. மேலும் அல்லாஹ்வின் வழிகாட்டுதலை ஏற்று சமூக நலப் பணிகளில், சமுதாயத்தை வழிநடத்திச் செல்லும் தலைவருடன் இணைந்து செயலாற்ற கட்டளை பிறப்பித்தால், அவர்களில் வசதி படைத்தவர்கள், “எங்களை விட்டுவிடுங்கள். நாங்கள் அப்பணியில் பங்கெடுக்காமல் தங்கி இருப்பவர்களுடன் இருந்துக் கொள்கிறோம்” என்று அனுமதி கோரி உம்மிடம் வந்தனர்.
9:87رَضُواْ بِأَن يَكُونُواْ مَعَ ٱلۡخَوَالِفِ وَطُبِعَ عَلَىٰ قُلُوبِهِمۡ فَهُمۡ لَا يَفۡقَهُونَ٨٧
9:87. எனவே அல்லாஹ்வின் பாதையில் செயலாற்ற விருப்பமில்லாமல் பின்வாங்கிக் கொண்டவர்களுடன் இருக்கவே அவர்கள் விரும்பினார்கள். இதற்குக் காரணம் அவர்களுடைய இதயங்களில் உண்மைகளை விளங்கிக் கொள்ள முடியாதவாறு திரை ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்படும் இழிவைப் பற்றி அவர்கள் நினைத்துப் பார்ப்பதில்லை.
9:88لَٰكِنِ ٱلرَّسُولُ وَٱلَّذِينَ ءَامَنُواْ مَعَهُۥ جَٰهَدُواْ بِأَمۡوَٰلِهِمۡ وَأَنفُسِهِمۡۚ وَأُوْلَٰٓئِكَ لَهُمُ ٱلۡخَيۡرَٰتُۖ وَأُوْلَٰٓئِكَ هُمُ ٱلۡمُفۡلِحُونَ٨٨
9:88. ஆனால் சமுதாயத்தை வழிநடத்திச் செல்லும் தலைவரும், அவருடன் பணியாற்றும் செயல்வீரர்களும் தங்கள் செல்வங்களையும் உயிர்களையும் அர்ப்பணித்து சமூக நலப்பணிகளில் ஈடுபடுகிறார்கள். அவர்களே எல்லா நன்மைகளுக்கும் தகுதியுடையவர்கள் ஆவார்கள். இன்னும் அவர்கள் தாம் வெற்றியாளர்கள் ஆவார்கள்.
9:89أَعَدَّ ٱللَّهُ لَهُمۡ جَنَّٰتٖ تَجۡرِي مِن تَحۡتِهَا ٱلۡأَنۡهَٰرُ خَٰلِدِينَ فِيهَاۚ ذَٰلِكَ ٱلۡفَوۡزُ ٱلۡعَظِيمُ٨٩
9:89. அவர்கள் செய்துவரும் நற்செயல்களின் பலனாக அல்லாஹ்வின் நியதிப்படி அவர்களுடைய சமுதாயம் சுவர்க்கத்திற்கு ஒப்பானதாக மாறிவிடும். அவர்களுடைய பொருளாதார வசதிகள் வற்றாத ஜீவநதியாக பெருகிவரும். அத்தகைய சந்தோஷமான வாழ்வு அல்லாஹ்வின் வழிகாட் டுதலைப் பின்பற்றும் வரையில் தொடர்ந்து கிடைத்து வரும். (8:53) இது அவர்களுக்கு கிடைக்கும் மாபெரும் வெற்றி அல்லவா?
9:90وَجَآءَ ٱلۡمُعَذِّرُونَ مِنَ ٱلۡأَعۡرَابِ لِيُؤۡذَنَ لَهُمۡ وَقَعَدَ ٱلَّذِينَ كَذَبُواْ ٱللَّهَ وَرَسُولَهُۥۚ سَيُصِيبُ ٱلَّذِينَ كَفَرُواْ مِنۡهُمۡ عَذَابٌ أَلِيمٞ٩٠
9:90. அதுமட்டுமின்றி நாட்டுப் புறத்து மக்களிலும் சிலர், சமூக நலப் பணியில் கலந்து கொள்ளாமல் இருப்பதற்குக் காரணம் காட்டி, அதற்கு அனுமதி கோரி உம்மிடம் வந்தார்கள். ஆனால் அவர்கள் காட்டிய காரணங்கள் பொய்யானவையே ஆகும். அல்லாஹ்விடமும் இறைத்தூதரிடமும் பொய் சொல்லும் இவர்கள, அனுமதி கேட்காமலேயே வீட்டில் தங்கிக் கொண்டு இருக்கலாமே! இப்படி சாக்குப் போக்கு சொல்லி இறைவழிகாட்டுதலுக்கு மாற்றமாக செயல்படுபவர்கள் விரைவில் தண்டனைக்கு ஆளாவார்கள்.
9:91لَّيۡسَ عَلَى ٱلضُّعَفَآءِ وَلَا عَلَى ٱلۡمَرۡضَىٰ وَلَا عَلَى ٱلَّذِينَ لَا يَجِدُونَ مَا يُنفِقُونَ حَرَجٌ إِذَا نَصَحُواْ لِلَّهِ وَرَسُولِهِۦۚ مَا عَلَى ٱلۡمُحۡسِنِينَ مِن سَبِيلٖۚ وَٱللَّهُ غَفُورٞ رَّحِيمٞ٩١
9:91. ஆனால் உண்மையிலேயே பலவீனமான முதியோர்களும் நோயாளிகளும் இருக்கிறார்கள். மேலும் சமூக நலப் பணிக்காக செலவு செய்ய வசதி இல்லாதவர்களும் இருக்கிறார்கள். ஆனால் அல்லாஹ்வின் வழிகாட்டுதலின் படி செயல்பட்டு வந்தால், அவர்கள் மீது எவ்வித குற்றமும் இல்லை. அத்தகையவர்களுக்கு அல்லாஹ்விடமிருந்து பாதுகாப்பும் உதவிகளும் கிடைத்து வரும்.
9:92وَلَا عَلَى ٱلَّذِينَ إِذَا مَآ أَتَوۡكَ لِتَحۡمِلَهُمۡ قُلۡتَ لَآ أَجِدُ مَآ أَحۡمِلُكُمۡ عَلَيۡهِ تَوَلَّواْ وَّأَعۡيُنُهُمۡ تَفِيضُ مِنَ ٱلدَّمۡعِ حَزَنًا أَلَّا يَجِدُواْ مَا يُنفِقُونَ٩٢
9:92. அல்லாஹ்வின் கட்டளைப்படி நலப்பணிகளில் ஈடுபட தொலைத் தூரத்திற்குச் செல்ல வாகன வசதிகள் இல்லாமல் உம்மிடம் வந்தவர்களிடம், “உங்களை நான் அழைத்து செல்லக் கூடிய வாகனங்கள் என்னிடம் இல்லையே” என்று நீர் கூறிய போது, தாங்களே செலவு செய்து ஏற்பாடு செய்துக் கொள்ளவும் வசதியில்லாத நிலையை எண்ணி துக்கத்தால் கண்ணீர் விட்டு தங்கி விட்டார்களே, அவர்கள் மீதும் எவ்வித குற்றமும் இல்லை.
9:93۞إِنَّمَا ٱلسَّبِيلُ عَلَى ٱلَّذِينَ يَسۡتَٔۡذِنُونَكَ وَهُمۡ أَغۡنِيَآءُۚ رَضُواْ بِأَن يَكُونُواْ مَعَ ٱلۡخَوَالِفِ وَطَبَعَ ٱللَّهُ عَلَىٰ قُلُوبِهِمۡ فَهُمۡ لَا يَعۡلَمُونَ٩٣
9:93. குற்றம் பிடிக்கப்பட வேண்டியவர்கள் யாரென்றால், தாம் செல்வந்தர்களாக இருந்தும், ராணுவ பயிற்ச்சியில் பங்கெடுக்காமல் இருக்க உம்மிடம் அனுமதி கேட்டு பின்தங்கிக் கொண்டவர்களுடன் இவர்களும் தங்கிக்கொள்ள விரும்பினார்களே அவர்கள்தாம். அல்லாஹ்வின் நியதிப்படி அவர்களுடைய இதயங்களில் முத்திரை விழுந்து விடுகிறது. அதை அவர்கள் அறிய மாட்டார்கள்.
பகுதி : 11
9:94يَعۡتَذِرُونَ إِلَيۡكُمۡ إِذَا رَجَعۡتُمۡ إِلَيۡهِمۡۚ قُل لَّا تَعۡتَذِرُواْ لَن نُّؤۡمِنَ لَكُمۡ قَدۡ نَبَّأَنَا ٱللَّهُ مِنۡ أَخۡبَارِكُمۡۚ وَسَيَرَى ٱللَّهُ عَمَلَكُمۡ وَرَسُولُهُۥ ثُمَّ تُرَدُّونَ إِلَىٰ عَٰلِمِ ٱلۡغَيۡبِ وَٱلشَّهَٰدَةِ فَيُنَبِّئُكُم بِمَا كُنتُمۡ تَعۡمَلُونَ٩٤
9:94. இவர்கள், இத்தகைய பணிகளில் கலந்துக் கொள்ளாததற்கு ஆயிரம் காரணங்களைக் காட்டி விளக்கம் தர உங்களிடம் வருவார்கள். இதற்கு அவசியமில்லை என்றும், அவற்றை எல்லாம் நம்பித்தான் அகவேண்டும் என்பதில்லை என்றும் அவர்களிடம் சொல்லி விடுங்கள். உங்களுடைய உண்மை நிலை என்ன என்பதை ஏற்கனவே அல்லாஹ்வின் புறத்திலிருந்து செய்திகள் வந்துவிட்டன. அல்லாஹ்வின் ஆட்சியமைப்பு உங்கள் செயல்களை கண்காணித்துக் கொண்டே இருக்கிறது. நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் பதிலளிக்க வேண்டிவரும் என்பதையும் அல்லாஹ்வை விட்டு எதையும் மூடி மறைக்க முடியாது என்பதையும் அறிந்துக் கொள்ளும் படி அவர்களுக்கு கூறிவிடுங்கள்.
9:95سَيَحۡلِفُونَ بِٱللَّهِ لَكُمۡ إِذَا ٱنقَلَبۡتُمۡ إِلَيۡهِمۡ لِتُعۡرِضُواْ عَنۡهُمۡۖ فَأَعۡرِضُواْ عَنۡهُمۡۖ إِنَّهُمۡ رِجۡسٞۖ وَمَأۡوَىٰهُمۡ جَهَنَّمُ جَزَآءَۢ بِمَا كَانُواْ يَكۡسِبُونَ٩٥
9:95. அவர்கள் செய்த இக்காரியத்தைப் பற்றி நீங்கள் பெரிதுபடுத்தாமல் இருக்க, அவர்கள் உங்களிடம் வந்து அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு தம் நிலைமையை எடுத்துரைப்பார்கள். ஆனால் நீங்கள் அவர்களுடைய பேச்சை ஏற்க மறுப்பதாக சொல்லிவிடுங்கள். இதற்குக் காரணம் அவர்கள் உள்ளங்களில் இருப்பவை தீய எண்ணங்கள் தாம். இவ்வாறு செயல்படுபவர்கள் சென்றடையும் இடம் நரகமாகத்தான் ஆகும். இது அவர்கள் மீதுள்ள வெறுப்பின் காரணமாக இல்லை. அவர்கள் செய்து வரும் தீய செயல்களின் விளைவாக இந்த இழிநிலை ஏற்படும்.
9:96يَحۡلِفُونَ لَكُمۡ لِتَرۡضَوۡاْ عَنۡهُمۡۖ فَإِن تَرۡضَوۡاْ عَنۡهُمۡ فَإِنَّ ٱللَّهَ لَا يَرۡضَىٰ عَنِ ٱلۡقَوۡمِ ٱلۡفَٰسِقِينَ٩٦
9:96. ஆக அவர்கள் உங்களை திருப்திப்படுத்த அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு தம் நிலைமையைக் கூறி வருகிறார்கள். நீங்கள் அவர்களு டைய பேச்சைக் கேட்டு திருப்தி அடைந்தாலும் அல்லாஹ்வின் சட்டம் இப்படிப்பட்ட சந்தர்ப்பவாதிகளை விட்டுவைக்காது. அத்தகையவர்களுக்கு தக்க தண்டனை அளித்தே தீரும்.
9:97ٱلۡأَعۡرَابُ أَشَدُّ كُفۡرٗا وَنِفَاقٗا وَأَجۡدَرُ أَلَّا يَعۡلَمُواْ حُدُودَ مَآ أَنزَلَ ٱللَّهُ عَلَىٰ رَسُولِهِۦۗ وَٱللَّهُ عَلِيمٌ حَكِيمٞ٩٧
9:97. கிராமவாசிகளை எடுத்துக்கொண்டால் அவர்கள் நகர்ப் புற மக்களை விட நயவஞ்சக செயல்களில் மோசமானவர்களாக இருக்கின்றனர். இதற்குக் காரணம் அல்லாஹ்வின் ஆட்சியமைப்பு நிர்ணயித்துள்ள வரம்புகளைப் பற்றிய ஞானம் அவர்களிடம் சரிவர சென்றடையவில்லை. இந்த ஒரு விஷயத்தை கவனத்தில் கொண்டு அல்லாஹ்வின் ஆட்சியமைப்பு அவர்களை அதற்கேற்ப நடவடிக்கை எடுக்கும்.
9:98وَمِنَ ٱلۡأَعۡرَابِ مَن يَتَّخِذُ مَا يُنفِقُ مَغۡرَمٗا وَيَتَرَبَّصُ بِكُمُ ٱلدَّوَآئِرَۚ عَلَيۡهِمۡ دَآئِرَةُ ٱلسَّوۡءِۗ وَٱللَّهُ سَمِيعٌ عَلِيمٞ٩٨
9:98. மேலும் கிராமவாசிகளில் சிலர் இருக்கிறார்கள். அவர்கள் மக்கள் நலனுக்காக செலவிடுவது வீணான நஷ்டத்தை ஏற்படுத்தும் என்று அறிவின்மையின் காரணமாக எண்ணுகிறார்கள். மேலும் இந்த அரசுக்கு உதவி கிடைக்காமல் நீங்கள் அவதிப்பட வேண்டும் என்றும் விரும்புகி றார்கள். ஆனால் அதன் கேடுகாலம் அவர்களை நோக்கியே விரைகிறது என்பது அவர்கள் அறிய மாட்டார்கள். அவர்கள் செயல்கள் அனைத்தையும் நன்கறியும் வல்லமை அல்லாஹ்வுக்கு உண்டு என்று அவர்களிடம் அறிவித்து விடுங்கள்.
9:99وَمِنَ ٱلۡأَعۡرَابِ مَن يُؤۡمِنُ بِٱللَّهِ وَٱلۡيَوۡمِ ٱلۡأٓخِرِ وَيَتَّخِذُ مَا يُنفِقُ قُرُبَٰتٍ عِندَ ٱللَّهِ وَصَلَوَٰتِ ٱلرَّسُولِۚ أَلَآ إِنَّهَا قُرۡبَةٞ لَّهُمۡۚ سَيُدۡخِلُهُمُ ٱللَّهُ فِي رَحۡمَتِهِۦٓۚ إِنَّ ٱللَّهَ غَفُورٞ رَّحِيمٞ٩٩
9:99. ஆனால் கிராமவாசிகளில் வேறு சிலர் இருக்கிறார்கள். அவர்கள் அல்லாஹ்வின் வழிகாட்டுதலையும் அல்லாஹ் நிர்ணயித்துள்ள “மனித செயல்களுக்கு ஏற்ற இறுதி விளைவுகள்” என்ற ஆஃகிரத்தையும் ஏற்று சிறப்பாக செயல்படுகிறார்கள். அல்லாஹ்வின் நெருக்கத்தையும் ஆட்சியமைப்பின் ஆதரவும் அரவணைப்பும் தமக்குக் கிடைக்க விரும்பி மக்கள் நலப் பணிகளுக்காக வாரி வழங்குகிறார்கள். இத்தகையவர்களுக்கு அல்லாஹ்வின் பேரருளும் ஆதரவும் கிடைக்கும். நிச்சயமாக இத்தகையவர்களை அல்லாஹ்வின் ஆட்சியமைப்பு பாதுகாப்பு அளித்து பெருங்கிருபையுடனும் அரவணைத்துக் கொள்ளும்.
9:100وَٱلسَّٰبِقُونَ ٱلۡأَوَّلُونَ مِنَ ٱلۡمُهَٰجِرِينَ وَٱلۡأَنصَارِ وَٱلَّذِينَ ٱتَّبَعُوهُم بِإِحۡسَٰنٖ رَّضِيَ ٱللَّهُ عَنۡهُمۡ وَرَضُواْ عَنۡهُ وَأَعَدَّ لَهُمۡ جَنَّٰتٖ تَجۡرِي تَحۡتَهَا ٱلۡأَنۡهَٰرُ خَٰلِدِينَ فِيهَآ أَبَدٗاۚ ذَٰلِكَ ٱلۡفَوۡزُ ٱلۡعَظِيمُ١٠٠
9:100. அல்லாஹ்வின் வழிகாட்டுதலின் படி தலைசிறந்த ஆட்சியமைப்பு உருவாக தம் வீட்டையும் ஊரையும் விட்டு, தம்மை அர்ப்பணித்துக் கொள்ள வந்தவர்கள் மற்றும் அவ்வாறு வந்தவர்களுக்கு புகலிடம் அளித்து உதவி செய்தவர்களும் இருக்கிறார்கள். இத்தகைய நற்காரியங்களில் முன்னோடியாக விளங்கியவர்களுக்கு அல்லாஹ்வின் திருப்பொருத்தம் கிடைத்து விடுகிறது. அவர்களும் அல்லாஹ்வின் ஆதரவைக் கொண்டு மனநிறைவுடன் செயல் படுகிறார்கள். அவர்கள் செய்து வந்த சிறந்த செயல்களின் பலனாக சுவனத்திற்கு ஒப்பான சமுதாயம உருவெடுக்கும். அங்கு அனைத்து வசதிகளும் வற்றாத ஜீவ நதியாய்ப் பெருகி வரும். இத்தகைய ஏற்பாடுகள் அல்லாஹ்வின் புறத்திலிருந்து ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டு விட்டன. இப்படி ஒரு சிறந்த இடத்தை அடைவது மகத்தான வெற்றியாகும் அல்லவா?
9:101وَمِمَّنۡ حَوۡلَكُم مِّنَ ٱلۡأَعۡرَابِ مُنَٰفِقُونَۖ وَمِنۡ أَهۡلِ ٱلۡمَدِينَةِ مَرَدُواْ عَلَى ٱلنِّفَاقِ لَا تَعۡلَمُهُمۡۖ نَحۡنُ نَعۡلَمُهُمۡۚ سَنُعَذِّبُهُم مَّرَّتَيۡنِ ثُمَّ يُرَدُّونَ إِلَىٰ عَذَابٍ عَظِيمٖ١٠١
9:101. மேலும் சுற்றுப்புற வட்டாரத்தில் உள்ள கிராமவாசிகளிலும் நயவஞ்சகர்கள் இருக்கிறார்கள். அதே போல் நகரங்களிலும் நயவஞ்சக செயல்களில் நிலைத்திருப்பவர்களும் இருக்கிறார்கள். இவர்களைப் பற்றிய உண்மை உங்களுக்குத் தெரியாது. ஆனால் அல்லாஹ்வுக்கு நன்கு தெரியும். அவர்களைக் கண்டறிந்து பிடித்து, திருந்தி வாழ வாய்ப்பு அளிக்கும் வகையில் சிறிய தண்டனை அளித்து எச்சரிக்கை செய்து விட்டுவிடுங்கள. இப்படியாக அவர்களுக்கு இரு வாய்ப்புகள் அளிக்கப்படும். அதன் பிறகும் அவர்கள் திருந்தவில்லை என்றால் மூன்றாம் முறையாக அவர்களுக்கு கடுமையான தண்டனை அளியுங்கள்.
9:102وَءَاخَرُونَ ٱعۡتَرَفُواْ بِذُنُوبِهِمۡ خَلَطُواْ عَمَلٗا صَٰلِحٗا وَءَاخَرَ سَيِّئًا عَسَى ٱللَّهُ أَن يَتُوبَ عَلَيۡهِمۡۚ إِنَّ ٱللَّهَ غَفُورٞ رَّحِيمٌ١٠٢
9:102. மேலும் சிலர் இருக்கிறார்கள். அவர்கள் தம் தவறான செயல்களை ஒப்புக் கொள்கிறார்கள். அத்துடன் அவர்கள் நற்காரியங்களைச் செய்வதோடு தவறான செயல்களிலும் அறியாமையினால் ஈடுபடுகிறார்கள். எனினும் இத்தகையவர்கள் தம் தவறுகளை உணர்ந்துக் கொண்டால் அவர்களுக்கு திருந்தும் வாய்ப்பு அளிக்கப்படும். நிச்சயமாக அல்லாஹ்வின் செயல் திட்டம் பாதுகாப்பான வாழ்க்கைக்கு வழிவகுக்கும் கிருபை மிக்கதாய் உள்ளது.
9:103خُذۡ مِنۡ أَمۡوَٰلِهِمۡ صَدَقَةٗ تُطَهِّرُهُمۡ وَتُزَكِّيهِم بِهَا وَصَلِّ عَلَيۡهِمۡۖ إِنَّ صَلَوٰتَكَ سَكَنٞ لَّهُمۡۗ وَٱللَّهُ سَمِيعٌ عَلِيمٌ١٠٣
9:103. எனவே இத்தகையவர்கள் ஆட்சியமைப்புக்கு அளிக்கும் அன்பளிப்புகளை வசூலித்து கல்வி மற்றும் பொருளாதார வளர்ச்சிகள் ஏற்பட மக்களுள் ஆற்றல்கள் வளர ஏற்பாடு செய்யுங்கள். மேலும் அவர்கள் செய்த உதவிக்காக அவர்களை ஊக்குவிக்கும் வகையில் போற்றி பாராட்டுங்கள். மேலும் அவர்கள் பெருமகிழ்சிக்கு உரியவர்கள். நிச்சயமாக நீங்கள் செய்வதனைத்தையும் அறிந்துக் கொள்ளும் வல்லமை அல்லாஹ்வுக்கு உண்டு என்பதை மறவாதீர்.
சமுதாயத்திற்குத் தேவையான மருத்துவ மனைகள், பள்ளிக் கூடங்கள் மற்றும் கல்லூரிகள் போன்ற வசதிகளை ஏற்படுத்திக் கொள்ள அரசமைப்பிடம் முறையிடுங்கள். அதே சமயம் அதற்காகவே காத்திராமல் அன்பளிப்புத் தொகைகளை வசூலித்தும் இத்தகைய நற்பணிகள் நடைபெற ஏற்பாடு செய்யுங்கள்.
9:104أَلَمۡ يَعۡلَمُوٓاْ أَنَّ ٱللَّهَ هُوَ يَقۡبَلُ ٱلتَّوۡبَةَ عَنۡ عِبَادِهِۦ وَيَأۡخُذُ ٱلصَّدَقَٰتِ وَأَنَّ ٱللَّهَ هُوَ ٱلتَّوَّابُ ٱلرَّحِيمُ١٠٤
9:104. தம் தவறை உணர்ந்து தவறான செயல்களிலிருந்து விலகி நற்செயல்களை செய்பவர்களுக்கு அல்லாஹ்வின் சட்டத்தில் மன்னிப்பு உண்டு என்பதையும், அத்தகையவர்களிடம் இருந்து உதவித் தொகைகளை பெற்றுக்கொள்ள அரசின் அங்கீகாரம் கிடைத்து விட்டது என்பதையும் அவர்கள் அறியவில்லையா? நிச்சயமாக மனிதன் திருந்தி வாழ அல்லாஹ்வின் சட்டம் வாய்ப்பு அளிக்கிறது. இது அல்லாஹ்வின் மாபெரும் கிருபையாகும். (பார்க்க 4:17-18, 25:70-71)
9:105وَقُلِ ٱعۡمَلُواْ فَسَيَرَى ٱللَّهُ عَمَلَكُمۡ وَرَسُولُهُۥ وَٱلۡمُؤۡمِنُونَۖ وَسَتُرَدُّونَ إِلَىٰ عَٰلِمِ ٱلۡغَيۡبِ وَٱلشَّهَٰدَةِ فَيُنَبِّئُكُم بِمَا كُنتُمۡ تَعۡمَلُونَ١٠٥
9:105. அவர்களுக்கு அரசு புறத்திலிருந்து பொது மன்னிப்பு அளிக்கப்பட்டு விட்டது. இப்போது அவர்கள் திருந்திவிட்டதை செயலளவில் காட்டும்படி அவர்களுக்கு அறிவித்து விடுங்கள். அவர்கள் செய்யும் ஒவ்வொரு செயலை யும் அல்லாஹ்வும், அல்லாஹ்வின் ஆட்சியமைப்பும் அதை கட்டிக் காக்கும் மூஃமின்களும் கண்காணித்துக் கொண்டே இருப்பார்கள் என்பதையும் அவர்களுக்கு எடுத்துரையுங்கள். ஆக அவர்கள் செய்யும் மறை முகமான செயலோ வெளிப்படையான செயலோ எதையும் இனி மறைக்க முடியாது என்பதையும் அவர்களுக்கு தெரிவித்துவிடுங்கள்.
9:106وَءَاخَرُونَ مُرۡجَوۡنَ لِأَمۡرِ ٱللَّهِ إِمَّا يُعَذِّبُهُمۡ وَإِمَّا يَتُوبُ عَلَيۡهِمۡۗ وَٱللَّهُ عَلِيمٌ حَكِيمٞ١٠٦
9:106. இதைத் தவிர்த்து வேறு சில குற்றவாளிகளும் இருக்கிறார்கள். அவர்களும் திருந்தி வாழ விரும்பினால் அவர்களுக்கும் பொது மன்னிப்பு அளிப்பதா அல்லது தண்டிப்பதா என்பது குறித்து அல்லாஹ்வின் அரசமைப்பு பரிசீலித்து முடிவெடுக்கும். நிச்சயமாக அரசின் தீர்ப்பு அல்லாஹ்வின் தெளிவான ஞானத்தின் அடிப்படையிலேயே இருக்கும். (மேலும் பார்க்க 9:118)
9:107وَٱلَّذِينَ ٱتَّخَذُواْ مَسۡجِدٗا ضِرَارٗا وَكُفۡرٗا وَتَفۡرِيقَۢا بَيۡنَ ٱلۡمُؤۡمِنِينَ وَإِرۡصَادٗا لِّمَنۡ حَارَبَ ٱللَّهَ وَرَسُولَهُۥ مِن قَبۡلُۚ وَلَيَحۡلِفُنَّ إِنۡ أَرَدۡنَآ إِلَّا ٱلۡحُسۡنَىٰۖ وَٱللَّهُ يَشۡهَدُ إِنَّهُمۡ لَكَٰذِبُونَ١٠٧
9:107. மேலும் சில குற்றவாளிகள் இருக்கிறார்கள். அவர்கள் அல்லாஹ்வின் ஆட்சியமைப்புக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டு வருகின் றனர். மேலும் ஆட்சியமைப்புக்கு எதிராகச் செயல்படும் சமூக விரோதிகளுக்கு உதவி செய்தும் வருகிறார்கள். மேலும் மூஃமின்களிடையே பிளவு ஏற்படுத்தவும், அல்லாஹ்வின் ஆட்சியமைப்பை எதிர்த்து போர் புரிந்தவர்களுக்கு புகலிடம் அளிக்கவும் ஒரு பள்ளிவாசலை நிருவினார்கள். தாம் நல்லதையே அன்றி வேறெதையும் செய்ய விரும்பவில்லை என்றும் பொய்ச் சத்தியம் செய்து வருகிறார்கள். அவர்கள் பொய்யர்கள் என்பதற்கு அல்லாஹ் நிர்ணயித்துள்ள விதிமுறைகளின் படி அவர்களுடைய செயல்களின் விளைவுகளே சாட்சியாக நிற்கின்றன.
9:108لَا تَقُمۡ فِيهِ أَبَدٗاۚ لَّمَسۡجِدٌ أُسِّسَ عَلَى ٱلتَّقۡوَىٰ مِنۡ أَوَّلِ يَوۡمٍ أَحَقُّ أَن تَقُومَ فِيهِۚ فِيهِ رِجَالٞ يُحِبُّونَ أَن يَتَطَهَّرُواْۚ وَٱللَّهُ يُحِبُّ ٱلۡمُطَّهِّرِينَ١٠٨
9:108. எனவே அத்தகைய பள்ளிவாசலுக்கு நீர் ஒருபோதும் செல்ல வேண்டாம். ஆரம்பம் முதலே இறையச்சத்தை அடிப்படையாகக் கொண்டு நிருவப்பட்ட பள்ளிகள் உள்ளன. அங்கு நீங்கள் சென்று உங்கள் செயல் திட்டங்களை நிறைவேற்றுங்கள். அங்குள்ளவர்கள் பரிசுத்த எண்ணங்களுடன் செயல்பட விரும்புகிறார்கள். இத்தகைய பரிசுத்த எண்ணங்களுடன் செயல்படுவோருக்குத் தான் அல்லாஹ்வின் நேசம் கிடைக்கும்.
9:109أَفَمَنۡ أَسَّسَ بُنۡيَٰنَهُۥ عَلَىٰ تَقۡوَىٰ مِنَ ٱللَّهِ وَرِضۡوَٰنٍ خَيۡرٌ أَم مَّنۡ أَسَّسَ بُنۡيَٰنَهُۥ عَلَىٰ شَفَا جُرُفٍ هَارٖ فَٱنۡهَارَ بِهِۦ فِي نَارِ جَهَنَّمَۗ وَٱللَّهُ لَا يَهۡدِي ٱلۡقَوۡمَ ٱلظَّٰلِمِينَ١٠٩
9:109. நீங்களே இந்த உதாரணத்தை சற்று சிந்தித்துப் பாருங்கள். ஒருவர் அல்லாஹ்வின் வழிகாட்டுதலுக்கு ஏற்ற வகையில் நிலையான பலன்களுக்காக ஒரு கட்டிடத்தை செயலகமாக எழுப்புகிறார். அது சிறந்ததா? அல்லது ஒருவர் கடலோரத்தில் சரிந்து விழக் கூடிய வகையில் பூமியின் மேற்பரப்பில் திடமான அஸ்திவாரம் எதுவும் இல்லாமல் ஒரு கட்டிடத்தை எழுப்புகிறார். அது சிறந்ததா? மேலும் அத்தகைய வலுவில்லாத கட்டிடம் பொடிப் பொடியாய் நொருங்கி போவதுடன், அங்குள்ளவர்களையும் வேதனை அளிப்பதாக இருந்தால், அது எப்படி சிறப்பான செயலகமாக இருக்க முடியும்? எனவே இத்தகைய அநியாயக்கார கூட்டத்தாருக்கு அல்லாஹ்வின் வழிகாட்டுதல் ஒருபோதும் கிடைக்காது.
9:110لَا يَزَالُ بُنۡيَٰنُهُمُ ٱلَّذِي بَنَوۡاْ رِيبَةٗ فِي قُلُوبِهِمۡ إِلَّآ أَن تَقَطَّعَ قُلُوبُهُمۡۗ وَٱللَّهُ عَلِيمٌ حَكِيمٌ١١٠
9:110. தவறான அடிப்படையில் எழுப்பப்படும் சமூக அமைப்புகள் இவ்வுலகில் நீடித்திருக்க வாய்ப்பில்லை. அத்தகைய அமைப்புகள் காலப்போக்கில் அழிந்து போய்விடும். இவ்வாறு நடப்பது அவர்கள் உள்ளங்களில் ஒரு வடுவாக இருந்துக் கொண்டே இருக்கும். மேலும் அவர்களின் உள்ளங்கள் துயரத்தில் சுக்குநூறாக உடைந்துவிடும். இது வெறும் மிரட்டல் அல்ல. அனைத்தையும் நன்கறியும் ஞானமிக்க வல்லமையின் சொல் இது.
9:111۞إِنَّ ٱللَّهَ ٱشۡتَرَىٰ مِنَ ٱلۡمُؤۡمِنِينَ أَنفُسَهُمۡ وَأَمۡوَٰلَهُم بِأَنَّ لَهُمُ ٱلۡجَنَّةَۚ يُقَٰتِلُونَ فِي سَبِيلِ ٱللَّهِ فَيَقۡتُلُونَ وَيُقۡتَلُونَۖ
9:111. இவை தாம் நயவஞ்சகர்களின் நிலைமையும் அவர்களுக்கு ஏற்படவிருக்கும் துயரங்களும் ஆகும். ஆனால் இறைவழிகாட்டுதலை ஏற்று செயல்படும் செயல்வீரர்களின் நிலை அவ்வாறு இல்லை. அல்லாஹ் அவர்களுடன் ஒப்பந்தம் செய்து கொள்கின்றான். அந்த ஒப்பந்தப்படி அவர்கள் தங்கள் உயிரையும் உடைமைகளையும் அல்லாஹ்வின் செயல்திட்டங்கள் நிறைவேற அர்ப்பணித்து விடுவார்கள். தேவை ஏற்படும் போது, அனைத்து தரப்பு மக்களின் நலனைப் பேணிக் காக்கும் அல்லாஹ்வின் ஆட்சியமைப்பை கட்டிக் காக்க போரிடவும் செய்வார்கள். இப்படியாக சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோரை வெட்டவும் செய்வார்கள். சில சமயங்களில் எதிரிகளால் வெட்டப்படவும் செய்வார்கள்.
9:112وَعۡدًا عَلَيۡهِ حَقّٗا فِي ٱلتَّوۡرَىٰةِ وَٱلۡإِنجِيلِ وَٱلۡقُرۡءَانِۚ وَمَنۡ أَوۡفَىٰ بِعَهۡدِهِۦ مِنَ ٱللَّهِۚ فَٱسۡتَبۡشِرُواْ بِبَيۡعِكُمُ ٱلَّذِي بَايَعۡتُم بِهِۦۚ وَذَٰلِكَ هُوَ ٱلۡفَوۡزُ ٱلۡعَظِيمُ١١١
இத்தகைய மாபெரும் இலட்சிய செயல்களுக்குப் பதிலாக அல்லாஹ் அவர்களுக்கு சுவனத்திற்கு ஒப்பான வாழ்வை அளிப்பான். இது வெறும் வார்த்தைகள் அல்ல. ஏக இறைவனான அல்லாஹ்வின் வாக்குறுதி ஆகும். இவ்வாறு செயல்படுவோருக்கு கிடைத்தே தீரும். இதைப் பற்றிய குறிப்புகள் இதற்கு முன்வந்த வேதங்களாகிய தவ்ராத்திலும் இன்ஜீலிலும் வந்துள்ளன. அதுவே இந்த இறைவேதமான குர்ஆனிலும் குறிப்பிடப்படுகிறது. இதுதான் மூஃமின்களுடன் அல்லாஹ் செய்துக் கொண்ட கொடுக்கல் வாங்கல் என்ற வியாபார ஒப்பந்தமாகும். இதை அறிந்து ஒவ்வொருவரும் பெருமகிழ்ச்சி கொள்ளுங்கள். ஏனெனில் இது ஒவ்வொருவருக்கும் கிடைக்கின்ற மாபெரும் வெற்றியாகும் அல்லவா?
அல்லாஹ் சுவனத்தை அளிக்கத் தயார். அதைப் பெற்றுக்கொள்ள நீங்கள் தயாரா?
9:112. இத்தகைய மூஃமின்களின் செயல்பாடுகள் எவ்வாறு இருக்கவேண்டும் என்பதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்.
ٱلتَّٰٓئِبُونَ
அவர்கள் தங்கள் தவறான செயல்களை செய்வதை விட்டுவிட்டு அல்லாஹ் காட்டிய நேர்வழியில் வாழ முன்வருவார்கள்.
ٱلۡعَٰبِدُونَ
அல்லாஹ்வின் கட்டளைக்கு மட்டுமே அடிபணிந்து வாழ்வதாக உறுதி கொள்வார்கள்.
ٱلۡحَٰمِدُونَ
அல்லாஹ்வின் செயல் திட்டங்களை போற்றுதலுக்குரியதாக ஆக்குவதற்கு அயராது பாடுபட்டும் வருவார்கள்.
ٱلسَّٰٓئِحُونَ
தீய பழக்க வழக்கங்களிலிருந்து விலகி இருப்பார்கள்.
ٱلرَّٰكِعُونَ
அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு முழுமையாகத் தலை சாய்த்து அதன் அடிப்படையிலேயே வாழ்வார்கள்
ٱلسَّٰجِدُونَ
இறைக்கட்டளைக்கு முற்றிலும் அடிபணிந்து செயல்படுபவர்கள்.
ٱلۡأٓمِرُونَ بِٱلۡمَعۡرُوفِ
இவ்வாறு சிறப்பாக செயல்பட்டு குர்ஆன் கோடிட்டு காட்டும் நன்மையான செயல்களை செய்யுமாறு மக்களிடம் போதிப்பார் கள்.
وَٱلنَّاهُونَ عَنِ ٱلۡمُنكَرِ
அதே சமயம் குர்ஆன் அறிவிக்கும் தீமையான செயல்கள் சமுதாயத்தில் நடைபெறாதவாறு தடுத்தும் வருவார்கள்.
وَٱلۡحَٰفِظُونَ لِحُدُودِ ٱللَّهِۗ
இப்படியாக அல்லாஹ்வின் அனைத்து வரம்புகளையும் பேணிப் பாதுகாப்பார்கள்.
وَبَشِّرِ ٱلۡمُؤۡمِنِينَ١١٢
இத்தகைய மூஃமின்களுக்குத் தான் சுவனத்திற்கு ஒப்பான வாழ்வின் நற்செய்தி கொடுக்கப்படுகிறது.
9:113مَا كَانَ لِلنَّبِيِّ وَٱلَّذِينَ ءَامَنُوٓاْ أَن يَسۡتَغۡفِرُواْ لِلۡمُشۡرِكِينَ وَلَوۡ كَانُوٓاْ أُوْلِي قُرۡبَىٰ مِنۢ بَعۡدِ مَا تَبَيَّنَ لَهُمۡ أَنَّهُمۡ أَصۡحَٰبُ ٱلۡجَحِيمِ١١٣
9:113. சமுதாயத்தை வழிநடத்திச் செல்லும் தலைவரோ அல்லது அதை கட்டிக் காக்கும் மூஃமின்களோ, அல்லாஹ்வின் வழிகாட்டுதலை விட்டு, தம் மனஇச்சைப் படி வாழும் முஷ்ரிக்குகளை ஆதரித்து அவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பது முறையாகாது. அவர்கள் எந்த அளவுக்கு நெருங்கிய உறவினராக இருப்பினும் சரியே. ஏனெனில் அவர்கள் திருந்தி வாழும் வாய்ப்பே இல்லை என்று தெளிவான பின்பும் பாதுகாப்பிற்கு பொறுப்பு ஏற்பது சரியில்லை. அவர்கள் நரகவாசிகளே ஆவர்.
9:114وَمَا كَانَ ٱسۡتِغۡفَارُ إِبۡرَٰهِيمَ لِأَبِيهِ إِلَّا عَن مَّوۡعِدَةٖ وَعَدَهَآ إِيَّاهُ فَلَمَّا تَبَيَّنَ لَهُۥٓ أَنَّهُۥ عَدُوّٞ لِّلَّهِ تَبَرَّأَ مِنۡهُۚ إِنَّ إِبۡرَٰهِيمَ لَأَوَّٰهٌ حَلِيمٞ١١٤
9:114. இவ்வாறே இப்றாஹீம் நபி, தம் தந்தை ஒரு முஷ்ரிக்காக இருந்தும்கூட அவருடைய பாதுகாப்புக்காக இறைவனிடம் வேண்டினாரே என்ற சந்தேகம் உங்களுக்கு இருக்கும். இவையாவும் அவரை நேர் வழிப்படுத்த அவர் எடுத்துக் கொண்ட முயற்சியே ஆகும். அவரை எப்படியாவது நேர்வழிப்படுத்தி இறைவனின் தண்டனையிலிருந்து மீட்க, அவர் உறு பூண்டிருந்தார். (பார்க்க 19:48) ஆனால் அவர் அல்லாஹ்வின் வழிகாட்டுதலுக்கு நேர் மாற்றமாக செயல்படுவதில் நிலையாக இருப்பதைக் கண்டு அவரை விட்டு விலகிக் கொண்டார் (பார்க்க 60:4) நிச்சயமாக இப்றாஹீம் நபி இறைக் கொள்கையில் நிலைத்திருந்து செயல்படுபவராகவும் இளகிய மனமுள்ளவராகவுமே இருந்தார்.
9:115وَمَا كَانَ ٱللَّهُ لِيُضِلَّ قَوۡمَۢا بَعۡدَ إِذۡ هَدَىٰهُمۡ حَتَّىٰ يُبَيِّنَ لَهُم مَّا يَتَّقُونَۚ إِنَّ ٱللَّهَ بِكُلِّ شَيۡءٍ عَلِيمٌ١١٥
9:115. நேர்வழி கிடைத்து அதன்படி செயல்படும் சமுதாயத்திற்கு அதன் பலன்களை அனுபவிக்காமல் இருக்கும்படி அல்லாஹ் விட்டு விடுவதில்லை. முதலில் அவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய கொள்கை கோட்பாடுகளையும் சட்டதிட்டங்களையும் முழுஅளவில் தெளிவாக்குகின்றான். அதன்பின் எந்தெந்த தவறான செயல்களின் தாக்கங்களிலிருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதையும் தெளிவாக்கி விடுகின்றான். இவை நிச்சயமாக அனைத்து விஷயங்களையும் அறியும் அல்லாஹ்விடம் இருந்து வரும் வழிகாட்டுதலாகும்.
9:116إِنَّ ٱللَّهَ لَهُۥ مُلۡكُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۖ يُحۡيِۦ وَيُمِيتُۚ وَمَا لَكُم مِّن دُونِ ٱللَّهِ مِن وَلِيّٖ وَلَا نَصِيرٖ١١٦
9:116. அது மட்டுமின்றி அகிலங்கள் மற்றும் பூமியிலும் உள்ளவை அனைத்தும் அல்லாஹ்வின் சட்டதிட்டங்களின் படியே செயல்பட்டு வருகின்றன. அதே சட்ட திட்டங்கள் மனிதர்கள் விஷயத்திலும் செயல்படு கின்றன. எனவே ஒரு சமுதாயத்தின் வாழ்வும் மரணமும் இதே அடிப்படை யில்தான் நடைபெற்று வருகின்றன. ஆக அல்லாஹ்வின் வழிகாட்டுதலை விட்டுவிட்டால் மனிதனின் பாதுகாப்பான வாழ்விற்கு வேறு எதுவும் துணை நிற்காது.
9:117لَّقَد تَّابَ ٱللَّهُ عَلَى ٱلنَّبِيِّ وَٱلۡمُهَٰجِرِينَ وَٱلۡأَنصَارِ ٱلَّذِينَ ٱتَّبَعُوهُ فِي سَاعَةِ ٱلۡعُسۡرَةِ مِنۢ بَعۡدِ مَا كَادَ يَزِيغُ قُلُوبُ فَرِيقٖ مِّنۡهُمۡ ثُمَّ تَابَ عَلَيۡهِمۡۚ إِنَّهُۥ بِهِمۡ رَءُوفٞ رَّحِيمٞ١١٧
9:117. சமுதாயத்தை வழிநடத்திச் செல்லும் இறைத்தூதர் மீதும், அவர் இக்கட்டான சூழ்நிலையில் இருந்தபோது, அவருக்கு துணைநின்று அவருடன் ஹிஜ்ரத் செய்து தம் ஊரை விட்டு வந்தவர்கள் மீதும், அவர்களுக்கு புகலிடமளித்து உதவி செய்த அன்சாரிகள் மீதும் அல்லாஹ்வின் கருணை இருந்து வந்துள்ளது. அதாவது இறை ஆட்சியமைப்பு உருவாகும் கால கட்டத்தில் அவர்களில் ஒரு பிரிவினரின் உள்ளங்கள் தடுமாறும் நிலை ஏற்பட்டபோது, அவர்கள் திசை மாறிச் சென்றிருப்பார்கள். ஆனால் அல்லாஹ் தன் அருட்கொடையான வழிகாட்டுதலைக் கொண்டு அவர்களை காப்பாற்றினான். அவர்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் கருணையும் கிருபையும் நிச்சயமாக உள்ளது.
9:118وَعَلَى ٱلثَّلَٰثَةِ ٱلَّذِينَ خُلِّفُواْ حَتَّىٰٓ إِذَا ضَاقَتۡ عَلَيۡهِمُ ٱلۡأَرۡضُ بِمَا رَحُبَتۡ وَضَاقَتۡ عَلَيۡهِمۡ أَنفُسُهُمۡ وَظَنُّوٓاْ أَن لَّا مَلۡجَأَ مِنَ ٱللَّهِ إِلَّآ إِلَيۡهِ ثُمَّ تَابَ عَلَيۡهِمۡ لِيَتُوبُوٓاْۚ إِنَّ ٱللَّهَ هُوَ ٱلتَّوَّابُ ٱلرَّحِيمُ١١٨
9:118. அதே போல போரின் சமயம் களத்தில் முன்னேறாமல் பின்தங்கிவிட்ட மூவர் விவகாரத்திலும் அவர்களுக்கு அளிக்க வேண்டிய தீர்ப்பு பரிசீலனையில் இருந்து வந்தது (பார்க்க 9:106) அவர்கள் களத்தை விட்டு ஓடியபோது, அவர்களுக்கு எங்கும் புகலிடம் கிடைக்கவில்லை. பூமி இவ்வளவு விசாலமாக இருந்தும் கூட அவர்களுக்குப் பெரும் நெருக்கடி ஏற்பட்டு விட்டது. மேலும் உயிர் வாழ்வதே மிகவும் கஷ்டமாகி விட்டது. எனவே அல்லாஹ்வின் இந்த ஆட்சியமைப்பை விட்டால், அவர்கள் உயிர் வாழ்வதற்கு வேறு வழியில்லை என்பதை உணர்ந்து தம் தவறை திருத்திக் கொண்டார்கள். எனவே அவர்களும் மன்னிக்கப்பட வேண்டியவர்களே ஆவார்கள். இதனால் அவர்களுக்கும் அல்லாஹ்வின் இந்த ஆட்சியமைப்பு பொது மன்னிப்பு அளித்து திருந்தி வாழ வாய்ப்பளித்தது.அல்லாஹ்வின் வழிகாட்டுதல்கள் கருணையின் அடிப்படையைக் கொண்டதாகும் என்ப தே உண்மையாகும்.
9:119يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ ٱتَّقُواْ ٱللَّهَ وَكُونُواْ مَعَ ٱلصَّٰدِقِينَ١١٩
9:119. அல்லாஹ்வின் வழிகாட்டுதலுக்கு எதிராக செயல்படுவதால் ஏற்படும் விபரீத விளைவுகளுக்கு அஞ்சி செயல்படுங்கள். அதாவது இறைவழி காட்டுதலைப் பேணி செயலாற்றுங்கள். மேலும் அல்லாஹ்வின் ஆட்சியமைப்பை கட்டிக் காக்க உளமாற உழைப்பவர்களுடன் நீங்களும் இணைந்துவிடுங்கள்.
9:120مَا كَانَ لِأَهۡلِ ٱلۡمَدِينَةِ وَمَنۡ حَوۡلَهُم مِّنَ ٱلۡأَعۡرَابِ أَن يَتَخَلَّفُواْ عَن رَّسُولِ ٱللَّهِ وَلَا يَرۡغَبُواْ بِأَنفُسِهِمۡ عَن نَّفۡسِهِۦۚ ذَٰلِكَ بِأَنَّهُمۡ لَا يُصِيبُهُمۡ ظَمَأٞ وَلَا نَصَبٞ وَلَا مَخۡمَصَةٞ فِي سَبِيلِ ٱللَّهِ وَلَا يَطَُٔونَ مَوۡطِئٗا يَغِيظُ ٱلۡكُفَّارَ وَلَا يَنَالُونَ مِنۡ عَدُوّٖ نَّيۡلًا إِلَّا كُتِبَ لَهُم بِهِۦ عَمَلٞ صَٰلِحٌۚ إِنَّ ٱللَّهَ لَا يُضِيعُ أَجۡرَ ٱلۡمُحۡسِنِينَ١٢٠
9:120. நகர்ப்புறவாசிகளானாலும் கிராமவாசிகளானாலும் சரி, போர் மற்றும் சமூக நலப் பணிகளில் ஈடுபடும் இக்கட்டான சூழ்நிலைகளில், அதை தலைமை தாங்கி வழிநடத்திச் செல்லும் தளபதியை விட்டு, தம் உயிருக்குப் பயந்து ஓடிவிடுவது முறையாகாது. ஏனெனில் அல்லாஹ்வின் வழிகாட்டுதலின் அடிப்படையில் ஒரு மகத்தான சமூக அமைப்பும், ஆட்சியமைப்பும் உருவாக்கப்படுகிறது. இதற்காக தம்மை அர்ப்பணித்துக் கொள்பவர்களுக்கு ஏற்படும் பசி, தாகம், களைப்பு மற்றும் எதிரிகளால் ஏற்படும் துன்பங்கள் ஆகியவை யாவும் இவர்களின் நற்கருமங்களின் பட்டியலில் பதிவாகி வரும். (2:155-156) இப்படியாக நற்செயல்களைச் செய்வோருக்கு அல்லாஹ்வின் புறத்திலிருந்து தக்க நற்பலன்கள் கிடைத்து வரும்.
ஆக நன்மையான செயல்கள் எவை என்பதை திருக்குர்ஆன் எந்த அளவிற்கு அழகாக காட்டுகிறது என்பதையும் கவனியுங்கள்.
9:121وَلَا يُنفِقُونَ نَفَقَةٗ صَغِيرَةٗ وَلَا كَبِيرَةٗ وَلَا يَقۡطَعُونَ وَادِيًا إِلَّا كُتِبَ لَهُمۡ لِيَجۡزِيَهُمُ ٱللَّهُ أَحۡسَنَ مَا كَانُواْ يَعۡمَلُونَ١٢١
9:121. இத்தகையவர்கள் சமுதாய மேம்பாட்டிற்காக செய்து வரும் உதவிகள் சிறியதோ பெரியதோ, அவை யாவும் நற்கருமங்களின் பட்டியலில் பதிவாகி வரும். அதேபோல் இப்பணிகளுக்கு நீங்கள் ஊரை விட்டு வேறு ஊருக்குச் செல்ல கரடு முரடான பாதையைக் கடந்து செல்ல நேர்ந்தாலும் அவையும் நற்கருமங்களில் பதிவாகி வரும். இவர்கள் செய்யும் ஒவ்வொரு செயலும் வீண் போகாது. அதற்குரிய பலாபலன்கள் அல்லாஹ்வின் புறத்திலிருந்து நிச்சயமாகக் கிடைக்கும்.
9:122۞وَمَا كَانَ ٱلۡمُؤۡمِنُونَ لِيَنفِرُواْ كَآفَّةٗۚ فَلَوۡلَا نَفَرَ مِن كُلِّ فِرۡقَةٖ مِّنۡهُمۡ طَآئِفَةٞ لِّيَتَفَقَّهُواْ فِي ٱلدِّينِ
وَلِيُنذِرُواْ قَوۡمَهُمۡ إِذَا رَجَعُوٓاْ إِلَيۡهِمۡ لَعَلَّهُمۡ يَحۡذَرُونَ١٢٢
9:122. மேலும் ஒரு விஷயத்தை கவனத்தில் கொள்ளவேண்டும். போருக்காவும் சமூக நலப் பணிகளுக்காவும் தம்மை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும் என்பதற்காக அனைவருமே ஒட்டுமொத்தமாக செல்வதும் சரியாகாது. எனவே அப்பணிகளை பல துறைகளாகவும் பகுதி பகுதியாகவும் பிரிந்து செயல்பட வேண்டும். அதில் ஒரு பிரிவினர் ஒழுக்க மாண்புகள் சம்பந்தமாக தெரிந்துக் கொள்ள வேண்டிய இறைவழிகாட்டுதலை முறையாக கற்றுக்கொண்டு அவற்றை மற்றவர்களுக்கும் கற்றுத் தர வேண்டும். இவ்வாறு செயல் பட்டால் இப்பணிகளை பாதுகாப்பாகவும் சிறந்த முறையிலும் நிறைவேற்றி வரும். (பார்க்க 4:102)
9:123يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ قَٰتِلُواْ ٱلَّذِينَ يَلُونَكُم مِّنَ ٱلۡكُفَّارِ وَلۡيَجِدُواْ فِيكُمۡ غِلۡظَةٗۚ وَٱعۡلَمُوٓاْ أَنَّ ٱللَّهَ مَعَ ٱلۡمُتَّقِينَ١٢٣
9:123. இறைவழிகாட்டுதலை மனதார ஏற்றுக்கொண்டவர்களே! ஒரு பக்கம் சமுதாயத்திலுள்ள தீய சக்திகளையும் ஒடுக்கவேண்டியது உங்கள் மீதுள்ள முக்கிய கடமையாகும். எனவே உங்களைச் சுற்றியுள்ள சமூக விரோதிகளை ஒடுக்கி, உங்கள் பலத்தை அவர்களுக்கு காட்டுங்கள். அதனால் அவர்கள் தீய செயல்களிலிருந்து விலகிவிடலாம். அல்லாஹ்வின் சட்டதிட்டங் களைப் பேணி நடக்கும் இலட்சியவான்களுக்கே அல்லாஹ்வின் துணை இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்ளுங்கள்.
9:124وَإِذَا مَآ أُنزِلَتۡ سُورَةٞ فَمِنۡهُم مَّن يَقُولُ أَيُّكُمۡ زَادَتۡهُ هَٰذِهِۦٓ إِيمَٰنٗاۚ فَأَمَّا ٱلَّذِينَ ءَامَنُواْ فَزَادَتۡهُمۡ إِيمَٰنٗا وَهُمۡ يَسۡتَبۡشِرُونَ١٢٤
9:124. மறுபக்கம் மக்களில் சிலருடைய பேச்சு எவ்வாறு இருக்கிறது என்பதை கவனியுங்கள். இறை ஆட்சியமைப்பு மற்றும் ஒழுக்க மாண்புகள் சம்பந்தமாக வழிகாட்டுதல்கள் அறிவிக்கப்படும் போது, “உங்களில் யாருடைய நம்பிக்கையை அதிகப்படுத்தி விட்டது?” என்று ஏளனமாக கேட்கிறார்கள். யார் அல்லாஹ்வின் வழிகாட்டுதலை முழு ஆர்வத்துடன் ஏற்றுக் கொள்கிறார்களோ அவர்களுக்குத் தான் இதில் ஈடுபாடு அதிகரிக்கும். இதனால் அவர்கள் பெருமகிழ்ச்சி அடைகிறார்கள். மற்றவர்களுக்கு இது எப்படி ஏற்படும் என்று அவர்களிடம் கேளுங்கள்.
9:125وَأَمَّا ٱلَّذِينَ فِي قُلُوبِهِم مَّرَضٞ فَزَادَتۡهُمۡ رِجۡسًا إِلَىٰ رِجۡسِهِمۡ وَمَاتُواْ وَهُمۡ كَٰفِرُونَ١٢٥
9:125. ஆனால் எவர்களுடைய உள்ளங்களில் நயவஞ்சக நோய் இருக்கிறதோ அது நாளுக்கு நாள் அது அதிகரித்துக் கொண்டே சென்றுவிடும். தீய எண்ணங்களுடன் செயல்படுபவர்களிடம் தீமையே வளரும். எனவே அவர்கள் சாகும் வரையில் அல்லாஹ்வின் வழிகாட்டுதலுக்கு எதிராகவே செயல்படுவார்கள். (பார்க்க 2:10)
9:126أَوَلَا يَرَوۡنَ أَنَّهُمۡ يُفۡتَنُونَ فِي كُلِّ عَامٖ مَّرَّةً أَوۡ مَرَّتَيۡنِ ثُمَّ لَا يَتُوبُونَ وَلَا هُمۡ يَذَّكَّرُونَ١٢٦
9:126. ஆண்டுக்கு ஓரிருமுறை வேதனைகள் ஏற்படுவதை (பார்க்க 9:14) அவர்கள் கவனிப்பதில்லையா? இவ்வாறிருந்தும் அவர்கள் செய்து வரும் தவறான செயல்களை விட்டு விலகிக் கொள்வதில்லையே! அதைப் பற்றிய எண்ணமே அவர்களிடம் சிறிதளவும் இல்லை.
இவ்வுலகில் ஏற்படும் இயற்கை சீற்றங்கள், பூகம்பம்,புயல் வெள்ளம், பஞ்சம் போன்றவை ஏற்படடுக் கொண்டே வருகின்றன. அவற்றிலிருந்து நிவாரணம் பெற அனைவரும் ஒருங்கிணைந்து அல்லாஹ்வின் நியதிப்படி உழைக்க வேண்டியுள்ளது. துயரத்திலிருந்து நிவராணம் கிடைத்ததும் பழைபடி பிரிந்து விடுகிறீர்கள்.
9:127وَإِذَا مَآ أُنزِلَتۡ سُورَةٞ نَّظَرَ بَعۡضُهُمۡ إِلَىٰ بَعۡضٍ هَلۡ يَرَىٰكُم مِّنۡ أَحَدٖ ثُمَّ ٱنصَرَفُواْۚ صَرَفَ ٱللَّهُ قُلُوبَهُم بِأَنَّهُمۡ قَوۡمٞ لَّا يَفۡقَهُونَ١٢٧
9:127. அதே சமயம் இறைவழிகாட்டுதல் சம்பந்தமாக கட்டளைகள் ஏதேனும் பிறப்பிக்கபட்டால், அதைக் கேட்டதும் அவர்களில் ஒருவரையொருவர் பார்த்து, “உங்களை யாராவது பார்த்து விட்டார்களோ?” என்று கேட்டுக் கொண்டே திரும்பிச் சென்று விடுகின்றனர். இப்படியாக உண்மை விஷயங்களை சிந்தித்து ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவம் இல்லாததால் அல்லாஹ்வின் நியதிப்படி அவர்களுடைய உள்ளங்கள் திரும்பி விடுகிறது. ஏனெனில் உண்மை விஷயங்களை சிந்தித்துணரும் ஆற்றல்கள் அவர்களி டம் இருப்பதில்லை.
9:128لَقَدۡ جَآءَكُمۡ رَسُولٞ مِّنۡ أَنفُسِكُمۡ عَزِيزٌ عَلَيۡهِ مَا عَنِتُّمۡ حَرِيصٌ عَلَيۡكُم بِٱلۡمُؤۡمِنِينَ رَءُوفٞ رَّحِيمٞ١٢٨
9:128. சமூகத்தவர்களே! உங்கள் அனைவரையும் நல்வழிபடுத்தி உங்களை வழி நடத்திச் செல்ல உங்களிலிருந்தே ஒரு தூதர் வந்துள்ளார். நீங்கள் துன்பத்திற்கு ஆளாகிவிட்டால், அது அவருக்கு மிக்க வருத்தம் ஏற்படுகிறது. அன்றியும் அவர்கள் உங்கள் அனைவரையுமே பெரிதும் நேசிக்கிறார். எனினும் இறைவழிகாட்டுதலை ஏற்று அதன் ஆட்சியமைப்பை கட்டிக்காக்கும் மூஃமின்கள் மீது மிக்க கருணையும் கிருபையும் உடையவராக இருக்கிறார்.
இதற்குக் காரணம் அல்லாஹ்வின் செயல் திட்டங்களை நபி ஒருவரால் மட்டும் நிறைவேற்ற இயலாது. மூஃமின்களின் ஆதரவும் உறுது ணையும் அவசியாமாகிறது (பார்க்க 33:56) மேலும் இவர்கள் தம் உயிரையும் உபரிச் செல்வங்களையும் அல்லாஹ்வுக்காக அர்ப்பணித்து, இத்தகைய செயல் திட்டங்களில் பங்கெடுத்துக் கொள்கின்றனர் ( 9:111, 48:10 &18,33:6) இத்தகையவர்கள் மீது சமுதாயத்தை வழிநடத்திச் செல்லும் தலைவருக்கு அளவுகடந்த பாசம் ஏற்படுவது இயல்புதானே. (பார்க்க 8:63)
9:129فَإِن تَوَلَّوۡاْ فَقُلۡ حَسۡبِيَ ٱللَّهُ لَآ إِلَٰهَ إِلَّا هُوَۖ عَلَيۡهِ تَوَكَّلۡتُۖ وَهُوَ رَبُّ ٱلۡعَرۡشِ ٱلۡعَظِيمِ١٢٩
9:129. உண்மை இவ்வாறிருக்கும் போது, யாராவது அவர் காட்டும் பாதையை விட்டு விலகிக் கொண்டால், அதனால் ஏற்படும் பாதிப்பு அவருக்கோ அல்லது அல்லாஹ்வுக்கோ அல்ல. அவருக்கு அல்லாஹ்வின் வழிகாட்டுதலே போதுமானது. “அகிலங்கள் அனைத்திலும் அல்லாஹ்வின் கட்டளைகளே செயல்பட்டு வருகின்றன. அவை அனைத்தையும் படைத்து பரிபாலித்து ஆட்சி செய்பவனாகிய அல்லாஹ்வின் மீதே முழு நம்பிக்கைக் கொண்டு செயல்படுகிறேன்” என்று அவர்களுக்கு விளக்கி விடுவீராக.