بِسۡمِ ٱللهِ ٱلرَّحۡمَـٰنِ ٱلرَّحِيمِ
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் அறிவுரைப்படியே அனைத்துக் காரியங்களையும் செய்ய நாடுகிறேன். ( 6:162)
கூட்டு ஸலாத் முறை
Jumua
بِسۡمِ ٱللهِ ٱلرَّحۡمَـٰنِ ٱلرَّحِيمِ
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் அறிவுரைப்படியே அனைத்துக் காரியங்களையும் செய்ய நாடுகிறேன். ( 6:162)
يُسَبِّحُ لِلَّهِ مَا فِي ٱلسَّمَٰوَٰتِ وَمَا فِي ٱلۡأَرۡضِ ٱلۡمَلِكِ ٱلۡقُدُّوسِ ٱلۡعَزِيزِ ٱلۡحَكِيمِ١
62:1. அகிலங்களிலும் பூமியிலும் உள்ள படைப்புகள் அனைத்தும் அல்லாஹ்வின் செயல் திட்டங்களை நிறைவேற்ற முழுவேகத்துடன் செயல்பட்டு வருகின்றன. எவ்வித குறைவும் இன்றி அழகிய முறையிலும் தெளிவான ஞானத்தின் அடிப்படையிலும், அகிலங்கள் அனைத்தையும் செயல்பட வைத்திருப்பது, அல்லாஹ்வின் மாபெரும் மேலாண்மைக்கும், அளவிலா வல்லமைக்கும் சான்று பகர்கின்றன.
هُوَ ٱلَّذِي بَعَثَ فِي ٱلۡأُمِّيِّۧنَ رَسُولٗا مِّنۡهُمۡ يَتۡلُواْ عَلَيۡهِمۡ ءَايَٰتِهِۦ
62:2. அகிலங்களில் அவனுடைய செயல்திட்டங்கள் அழகிய முறையில் செயல்பட்டு வருவதுபோல், மனித உலகமும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்பது அல்லாஹ்வின் நாட்டமாகும். அதன்படியே உங்களிலிருந்தே ஓருவரை இறைத்தூதராக தேர்ந்தெடுத்துள்ளான். இதற்கு முன் எந்த வேதமும் அருளப்படாத சமுதாயத்திலிருந்து அவரை தேர்ந்தெடுத்து வழிகாட்டுதல்களை அறிவிக்கிறான்.
وَيُزَكِّيهِمۡ وَيُعَلِّمُهُمُ ٱلۡكِتَٰبَ وَٱلۡحِكۡمَةَ وَإِن كَانُواْ مِن قَبۡلُ لَفِي ضَلَٰلٖ مُّبِينٖ٢
அவற்றை மக்களுக்கு எடுத்துரைத்து, அவர்களிடையே உள்ள மூட நம்பிக்கைகளைப் போக்கி, அவர்களுடைய உள்ளங்களை பரிசுத்தமாக்கி, அவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய சட்ட திட்டங்களையும் அவற்றின் நோக்கங்களையும் தெளிவாக எடுத்துரைப்பதே அவருடைய முக்கிய கடமையாகும். இதற்கு முன்னர் அம்மக்கள் வெளிப்படையான வழிகேட்டில் இருந்தார்கள்.
“வஹீ” எனும் இறைவழிகாட்டுதலின் தொடர்ச்சியில் இறுதியாக முஹம்மது நபிஸல் அவர்கள் வருகிறார். (விளக்கத்திற்கு பார்க்க 5:7) இவ்வாசகம் அவரையே குறிப்பிடுவதாக அமைந்துள்ளது. ஆனால் அவர் செய்து காட்டிய பணியை அல்லாஹ்வை ஏற்றுக் கொண்டவர்கள் தொடர வேண்டும் என்பதே அல்லாஹ்வின் நாட்டமாகும். (பார்க்க 3:144) காரணம்
وَءَاخَرِينَ مِنۡهُمۡ لَمَّا يَلۡحَقُواْ بِهِمۡۚ وَهُوَ ٱلۡعَزِيزُ ٱلۡحَكِيمُ٣
62:3. அவர் எடுத்துரைக்கும் இறைவழிகாட்டுதல்கள் அக்காலத்தில் வாழ்ந்த மக்களுக்கு மட்டுமல்ல. பிற்காலத்தில் உலகம் நீடித்திருக்கும் வரையில் வரக்கூடிய மக்களுக்கும் இவை பொருந்தும். இவையாவும் அனைத்துப் படைப்புகளையும் தன் கட்டுப்பாட்டில் வைத்து, செயல்பட வைக்கும் பேராற்றல் உடைய ஞானமிக்கவனிடம் இருந்து வரும் வழிகாட்டுதல்களாகும்.
ذَٰلِكَ فَضۡلُ ٱللَّهِ يُؤۡتِيهِ مَن يَشَآءُۚ وَٱللَّهُ ذُو ٱلۡفَضۡلِ ٱلۡعَظِيمِ٤
62:4. இறைவழிகாட்டுதல்கள் யாவும் அல்லாஹ்வின் மாபெரும் அருட்கொடைகளில் உள்ளவை ஆகும். அவற்றை தன் செயல் திட்டத்தின்படி யார் அதற்குத் தகுதியானவராக இருக்கிறாரோ, அவருக்கு அருளுகின்றான். இப்படியாக அல்லாஹ்வின் செயல் திட்டங்கள் யாவும் மகத்தான அருட்கொடைகள் மிக்கவையாக உள்ளன.
இத்தகைய தலைசிறந்த வழிகாட்டுதல்களின் உண்மை நிலையை அறிந்து செயல்படுபவர்களுக்கு மட்டும் தான் பலனளிக்கும். இவ்வேதத்தின் மொழியை அறிந்து கொள்ளாமல், அழகிய பையில் வைத்து சுமந்து கொண்டும், அதன் வார்த்தைகளை உச்சரித்துக் கொண்டு இருப்பவர்களுக்கும் எந்தப் பலனும் கிடைக்காது.
مَثَلُ ٱلَّذِينَ حُمِّلُواْ ٱلتَّوۡرَىٰةَ ثُمَّ لَمۡ يَحۡمِلُوهَا كَمَثَلِ ٱلۡحِمَارِ يَحۡمِلُ أَسۡفَارَۢاۚ بِئۡسَ مَثَلُ ٱلۡقَوۡمِ ٱلَّذِينَ كَذَّبُواْ بَِٔايَٰتِ ٱللَّهِۚ وَٱللَّهُ لَا يَهۡدِي ٱلۡقَوۡمَ ٱلظَّٰلِمِينَ٥
62:5. இதற்குமுன் அருளப்பட்ட வேதமான தவ்ராத்தை சுமந்துக் கொண்டு திரிபவர்களும் இருக்கிறார்கள். அதனால் அவர்களுக்கு என்ன பலன் கிடைக்கப் போகிறது? கழுதையும் பல சுமைகளை சுமக்கிறது. சுமையில் உள்ளவை என்னவென்று அதற்குத் தெரியுமா? அதுபோல இறைவழிகாட்டுதலை ஏற்றுக்கொள்வதாக உதட்டளவில் சொல்லிக் கொண்டு அவற்றை நடைமுறைப் படுத்தாமல் பொய்யாக்குகின்ற சமூகத்தவர்களுக்கு இவ்வுதாரணம் பொருந்தும். எனவே அநியாய அக்கிரமச் செயல்களை செய்வோருக்கு அல்லாஹ்வின் நேர்வழி ஒருபோதும் கிடைக்காது.
قُلۡ يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ هَادُوٓاْ إِن زَعَمۡتُمۡ أَنَّكُمۡ أَوۡلِيَآءُ لِلَّهِ مِن دُونِ ٱلنَّاسِ فَتَمَنَّوُاْ ٱلۡمَوۡتَ إِن كُنتُمۡ صَٰدِقِينَ٦
62:6. உண்மை இவ்வாறிருக்க இஸ்ரவேலர்கள் தம்மை அல்லாஹ்வுக்கு நெருக்கமானவர்கள் என்று சொல்லிக் கொள்கின்றனர். எனவே அவர்கள் மட்டும் சுவனத்திற்கு உரியவர்கள் எனவும் சொல்கின்றனர். (பார்க்க 2:94) அவர்கள் தம் கூற்றில் உண்மையாளராக இருந்தால், அவர்களை மரணத்தை விரும்பி உயிர் துறந்துவிடும்படி கூறிவிடுங்கள்.
وَلَا يَتَمَنَّوۡنَهُۥٓ أَبَدَۢا بِمَا قَدَّمَتۡ أَيۡدِيهِمۡۚ وَٱللَّهُ عَلِيمُۢ بِٱلظَّٰلِمِينَ٧
62:7. அவர்கள் செய்துள்ள பாவச் செயல்களின் காரணமாக அவர்கள் ஒருபோதும் மரணத்தை விரும்பவே மாட்டார்கள். அப்படியும் அவர்கள் உயிர் வாழ்ந்து என்ன பயன் ஏற்படப் போகிறது? அவர்கள் செய்து வரும் அநியாயச் செயல்கள் அல்லாஹ்வுக்கு தெரியாமல் போய்விடுமா?
قُلۡ إِنَّ ٱلۡمَوۡتَ ٱلَّذِي تَفِرُّونَ مِنۡهُ فَإِنَّهُۥ مُلَٰقِيكُمۡۖ ثُمَّ تُرَدُّونَ إِلَىٰ عَٰلِمِ ٱلۡغَيۡبِ وَٱلشَّهَٰدَةِ فَيُنَبِّئُكُم بِمَا كُنتُمۡ تَعۡمَلُونَ٨
62:8. அவர்களிடம், “நீங்கள் எதைவிட்டும் விரண்டு ஓடுகிறீர்களோ, அந்த மரணத்தை தழுவியே ஆகவேண்டும். அதன்பின் நீங்கள் மறைவாகவும், வெளிப்படையாகவும் செய்து வந்த செயல்களின் விளைவுகள் அல்லாஹ்வின் நியதிப்படி உங்கள் முன் தோன்றும். அப்போது நீங்கள் செய்து வரும் செயல்களின் விளைவுகள் என்னவென்பதை நன்கறிவீர்கள்.
அக்காலத்தில் வாழ்ந்த இஸ்ரவேலர்களின் இந்த பரிதாப நிலைக்கு என்ன காரணம்? இக்காலத்தில் வாழும் முஸ்லிம்களின் நிலை என்ன? அவர்கள் மார்க்கத்தை வெறும் மதச் சடங்குகளாக மாற்றிக் கொண்டது தான். இறைவனை திருப்திப் படுத்துவதாக எண்ணி சில சம்பிரதாயங்களைக் கடைப்பிடித்து வருகின்றனர். இறைவழிகாட்டுதலை மனதார ஏற்றுக் கொண்டவர்களே! நீங்கள் அவ்வாறு மார்க்கத்தை விட்டு திசை மாறிச் சென்றுவிடாதீர்கள்.
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓاْ إِذَا نُودِيَ لِلصَّلَوٰةِ مِن يَوۡمِ ٱلۡجُمُعَةِ فَٱسۡعَوۡاْ إِلَىٰ ذِكۡرِ ٱللَّهِ وَذَرُواْ ٱلۡبَيۡعَۚ ذَٰلِكُمۡ خَيۡرٞ لَّكُمۡ إِن كُنتُمۡ تَعۡلَمُونَ٩
62:9. இறைவழிகாட்டுதலை மனதார ஏற்றுக் கொண்டவர்களே! இறைவனின் வழிகாட்தலை தெளிவுப்படுத்த, “பிரச்சார கூட்டத்” திற்காக அழைக்கப்பட்டால், நீங்கள் உங்களுடைய அலுவல்களை விட்டுவிட்டு அல்லாஹ்வின் அறிவுரைகளைப் பெற விரைந்து வாருங்கள். உங்களுடைய சிறப்பான வாழ்விற்கு அவை பெரிதும் உதவும் என்பதை அறிந்தால், அதற்கு முக்கியத்துவம் அளித்து விரைந்து வருவீர்கள்.
فَإِذَا قُضِيَتِ ٱلصَّلَوٰةُ فَٱنتَشِرُواْ فِي ٱلۡأَرۡضِ وَٱبۡتَغُواْ مِن فَضۡلِ ٱللَّهِ وَٱذۡكُرُواْ ٱللَّهَ كَثِيرٗا لَّعَلَّكُمۡ تُفۡلِحُونَ١٠
62:10. இவ்வாறு “கூ பிரச்சார கூட்டம்” நிறைவு பெற்றுவிட்டால், அங்கேயே அமர்ந்துக் கொண்டு இருக்காதீர்கள். அவ்விடத்தை விட்டு கலைந்து சென்று, அல்லாஹ்வின் புறத்திலிருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வாழ்வாதார வசதிகளைத் தேடி அன்றாடப் பணியைத் தொடருங்கள். நீங்கள் “பிரச்சார கூட்டத்”தில் பெற்ற அறிவுரைகளை மக்கள் அனைவருக்கும் விரிவாக தெரியப்படுத்துங்கள்.
وَإِذَا رَأَوۡاْ تِجَٰرَةً أَوۡ لَهۡوًا ٱنفَضُّوٓاْ إِلَيۡهَا وَتَرَكُوكَ قَآئِمٗاۚ قُلۡ مَا عِندَ ٱللَّهِ خَيۡرٞ مِّنَ ٱللَّهۡوِ وَمِنَ ٱلتِّجَٰرَةِۚ وَٱللَّهُ خَيۡرُ ٱلرَّٰزِقِينَ١١
62:11. ஆனால் அவர்களில் சிலர் இறைவழிகாட்டுதலின் முக்கியத்துவத்தை அறியாமல், சொற்ப லாபம் தரும் வியாபாரத்தின் பக்கமோ அல்லது ஏதாவது கேளிக்கை நடந்தால் அதன் பக்கமோ விரைகிறார்கள். அல்லாஹ்விடமிருந்து பெறும் வழிகாட்டுதல்களோ அந்த வியாபாரத்தைவிடவும் கேளிக்கைகளை விடவும் முக்கியம் வாய்ந்தவை என்பதை அவர்களுக்கு எடுத்துரையுங்கள்.
அத்தியாயம்: 63 – பகுதி: 28 - சூர: முனாஃபிஃகூன் (நயவஞ்கர்கள்)